சனி, 16 ஏப்ரல், 2016

கண் பார்வை.... ஒரு பார்வை...


  • மனிதனுக்கு, கண்ணின் கருவிழி நிறத்தை உறுதி செய்வது ஜீன்களாகும். நீலம், பச்சை, கருப்பு, பழுப்பு நிறம் ஆகியன மனித கருவிழியின் வண்ணங்களாகும்.
  • காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. 
  • 80% நினைவாற்றல் மற்றும் ஞாபகங்கள் அனைத்தும், நமது கண்களின் பார்வையால் தான், நிலைத்து நிற்கின்றன
  • ஏறத்தாழ 20 லட்சம் நரம்புகள் மற்றும் தசைகள், நமக்கு கண்பார்வைக்கு காரணிகளாக அமைகின்றன.
  • கருவுற்ற இரண்டு வாரங்களிலேயே கண்கள் உருவாக தொடங்குகிறது.. 
  • கண்களை, 576 மெகாபிக்சல் பொருந்திய கேமராவோடு ஒப்பிடலாம்.
  • மனித கண்கள், ஏறத்தாழ ஒரு கோடி நிறங்களை, வித்தியாசப்படுத்தி காட்டும்.
  • சில பெண்களுக்கு, இயற்கையிலேயே, நிறங்களை, பிரித்துக்காட்டும் திறன் அதிகம்.
  • பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.
  • மீன் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கண்களுக்கு அவசியம்.. #மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது.
  • கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ்.. மஸ்காரா,ஐ லைனர் போன்றவற்றை, தரமானதாகவும், 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம்.
  • தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது.
  • டிவி பார்க்கும் போது இருட்டு அறையில் பார்க்காமல் திரைக்கு பின் ஏதேனும் ஒரு ஒளி இருக்கும்படி கவனித்துகொள்ளவும்.
  • வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய்.
  • உலகரீதியாக, கண்பார்வையற்றோரின் எண்ணிக்கை, 3.9 கோடியாகும்
  • இதில், இந்தியாவிலேயே, ஏறத்தாழ 1.5 கோடி மக்களுக்கு, கண்பார்வை இல்லை என்பது தான் வேதனை.
  • கண்தானம், மூலம், Corneal transplant எனப்படும், கருவிழிப்படல அறுவை சிகிச்சை, கண்பார்வையை 90% குணப்படுத்தும். 
  • கண்தானத்திற்கு வயது வரம்பு எதுவுமே இல்லை.
  • டால்ஃபின்கள், மட்டுமே கண்களைத் திறந்தபடி தூங்குமாம். சில மனிதர்களும் தானே..!
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின், கண்கள் இன்றும், நியூயார்க்கில், பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கண் மற்றும் உறுப்பு தானத்திற்கு 
நான் பதிவு செய்துவிட்டேன்..
 நீங்கள்..??

********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக