வெள்ளி, 6 மே, 2016

குழந்தைகளின் வளர்ச்சியின் மைல்கற்கள்..!

நான் வளர்கிறேனே மம்மீ..

  • பிறக்கும் போது, மொத்த செல்களின் எண்ணிக்கை 26 பில்லியன். பிற்காலத்தில் அவை 50 ட்ரில்லியனாக மாறுகின்றது.

  • பிறக்கும் போது, குழந்தையின் தலை : உடல் அளவின் விகிதம் 4:1.
  • வளர்ந்த பின், இது 8:1 என மாறுகின்றது.
  • குழந்தையின் மூளை மிகவும் வேகமாக வளரும். முதல் வருடத்திற்குள் 60% வளர்ச்சியை அடைந்து விடுகிறது.
  • பிறந்த குழந்தை, 16-17 மணிநேரம் தூங்கும். ஒரு வருடத்தில், 12-15 மணிநேரம் தூங்கும்.
  • குழந்தைகளின், தூக்க சுழற்சி 1.5-2.5 மணிநேரம். இதில், 50% REM என்ற ஆழ்நிலை தூக்கமாகும்.
  • 6 மாதங்கள் வரை, குழந்தை மாதத்திற்கு 1.5 - 2.5 cm என வளரும். பிறகு ஒரு வருடம் வரை, மாதத்திற்கு 1 cm என வளரும்.
  • முதல் பிறந்தநாளில், 25cm உயரம் அதிகமாகும். இரண்டாவது பிறந்தநாளில் 12.5cm உயரம் அதிகமாகும்.
  • 3 மாதங்களில் சத்தமாக சிரிக்கும், 6 மாதங்களில் அம்மா என ஒலியசைக்கும். ஒரு வருடத்தில், 2-3 வார்த்தைகள் பேசும்.
  • குழந்தை எழுந்து உட்கார்வது 8 மாதத்தில், நிற்பது 1 வயதில், நடப்பது 15 மாதங்களில்..
  • பிறந்த குழந்தை, தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் என்றாலும் 10,000 சுவையுணரிகள் நாக்கில் இருக்கும்.
  • குழந்தை பிறக்கும் போது, இருதயத் துடிப்பு 120/min என்பது, 80/min ஆக மாறுவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும்.
  • பிறந்த குழந்தைகளுக்கு, கேட்கும் திறன் அதிகமாக இருக்கும். 24-26 வார கருவிலேயே, கேட்கும் திறன் ஆரம்பித்துவிடுகிறது.
  • பிறக்கும் குழந்தை, நிறங்களை வேறுபடுத்திப் பார்க்காது. 3 மாதங்களில் ஆரம்பித்து, 18 மாதங்களில் நிறங்களை உணரும்.
  •  6 மாத கருவிலேயே, குழந்தை மணங்களை உணருமாம். பிறந்தவுடன் வாசம் மற்றும் ஒலித்திறன் வளர்ச்சி பெறுகின்றது.
  • பால்பற்கள் மொத்தம் 20. ஆறு மாதத்தில், முதலில் தோன்றுவது கீழ் பல். 2 வயதில் ஏறத்தாழ அனைத்து பற்களும் முளைத்துவிடும்.
  • ஆயிரத்தில் ஒரு குழந்தை, பிறக்கும் போதே பல்லோடு பிறக்கின்றது.
  •  3 மாதங்கள் தொடங்கி, ஒரு வருடத்திற்குள், குழந்தைகளுக்கு 120L உமிழ் நீர் சுரக்குமாம்.
  • "வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே..!"
  • ஆம்..
  • தெய்வம் தந்த பூக்கள் தான் நம் குழந்தைகள்..

*****************

அறிவோம் Gout..

அதிக யூரிக் அமிலம் = Gout??



  • யூரிக் அமிலம் (uric acid) அதிகரிக்கும் நிலை ஹைப்பர்யுரிசீமியா (hyperuricemia) என்று அழைக்கப்படும்.
  • யூரிக் அமிலம், (Purine metabolism) ப்யூரைன் உடைவதால் உண்டாகிறது. இரத்தத்தின் மூலம் சிறுநீரகத்தை அடைந்து சிறுநீரில் வெளியேறுகிறது.
  • DNA மற்றும் RNAக்களின் முக்கிய கட்டமைப்பானது Adenine மற்றும் Guanine என்ற பியூரின்கள்.

  • பியூரின் செரிமானம் ஆகும்போது, யூரிக் அமிலமாக மாற்றபடுகிறது. இது இயற்கையானது.

  • யூரிக் அமிலம் ஒரு சிறந்த antioxidant. ரத்தநாளங்கள் சேதமடையாமல் யூரிக் அமிலம் காக்கிறது.

  • உருவாகும் யூரிக் அமிலத்தின், முக்கால் பங்கு சிறுநீரகங்களிலும், கால் பங்கு குடல் வழியாகவும் வெளியேற்றப்படுகிறது.
  • Hyperuricemia என்ற, யூரிக் அமிலம் அதிகநிலை, யூரிக் அமிலம் அதிகமாக சுரக்கும் போது அல்லது குறைவாக வெளியேற்றப்படும் போது ஏற்படுகிறது.
  • அதிகம் சேர்ந்த யூரிக் அமிலம், மூட்டுகளிலும், காதுகளிலும், சிறுநீரகத்திலும் (MSU) படிவதால் ஏற்படுவது Gout.

  • யூரிக் அமிலம் அதிமாக உள்ளவர்கள், 25 in 100 என்றாலும், 
  • Gout ஏற்படுவது 1 in 100 மட்டுமே. அதிலும், 50% மட்டுமே நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
  • Gout ல், கால்களின் கட்டைவிரல், கணுக்கால், முழங்கால் மூட்டுகள் ஆகியன வீங்கி கடும்வலி உண்டாகிறது.
  • முன்பு மன்னர்களுக்கு மட்டும் வந்ததால், Gout "மன்னர்களின் வியாதி" (King's disease) என அழைக்கபட்டது.
  • 20 ம் நூற்றாண்டில், Gout அதிக அளவில் பொதுமக்களுக்கும் பரவி சாதாரண மனிதர்களின் வியாதி என்றாகிவிட்டது.
  • மன்னர் காலத்தில், பணக்கார உணவுகளான மாமிசம், சர்க்கரை, இனிப்புகள், மது ஆகியன, பின்னர் அனைவரும் உண்ண, Gout சாதாரண மனிதனின் வியாதி ஆகிவிட்டது.
  • தற்போதைய நிலையில் யூரிக் அமிலம் அதிகரிக்க முக்கிய காரணங்கள் பெப்சி, கோக், இனிப்புகள் மற்றும் மது.
  • Gout, பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும். 40 வயதிற்கு பின்னரே பெரும்பாலும் தோன்றுகிறது.
  • ஆண்களில் உடல் பருமன், இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு Gout வரும் வாய்ப்புகள் அதிகம்.
  • அறுவை சிகிச்சை, காயம், மன உளைச்சல், மது, சில மருந்துகள் போன்றவை gout ஏற்படுவதை துரிதப்படுத்துகின்றன.
  • மூட்டுகளில் கடுமையான வலி,  வீக்கம், உடற்சோர்வு, காய்ச்சல் ஆகியன Gout அறிகுறிகள் ஆகும்.
  • யூரிக் அமிலம், சிறுநீரகத்தில் படிந்தால் அங்கு கற்கள் உற்பத்தியாகும். (Nephrolithiasis).
  • நீண்ட நாள் Goutல் கைகள், கால், காதுமடல்கள் ஆகியவற்றில் தடிப்புகள் ஏற்படும். இது டோப்பை (tophi ) என அழைக்கப்படும்.
  • 7-10 நாட்களுக்குள் acute gout அறிகுறிகள் மறைந்தாலும், மீண்டும் flare ups எனப்படும் நோய் தாக்கம் 60% பேருக்கு ஒரு வருடத்திலேயே ஏற்படுகின்றது.
  • கண்டறிய..
  • இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு முக்கிய பரிசோதனையாகும்.
  • 6.5-7 mg/dl  அளவைத் தாண்டினால், Hyperuricemia எனப்படும்.
  • Gout நோயைத் தவிர்க்க உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அறிவுறுத்தப்படுகின்றது.

  • நமது உணவு வகைகளே 12% gout ஏற்பட காரணமாக உள்ளது.
  • மாமிசம், காளான், கீரை, பழம், காஃபி, சர்க்கரை, மது போன்ற உணவுகள் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்.
  • குறைந்த கார்ப், சற்று அதிக புரதம், கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உண்ண வேண்டும். 40% கார்ப், 40% கொழுப்பு, 20% புரதம் ஏற்புடையது.
  • சர்க்கரை தவிர்த்து மாமிசம் மற்றும் காய்கறிகள் மட்டுமே உணவாகின்ற Caveman diet இல், யூரிக் அமிலம் குறைவாக சுரக்கும்.
  • நோயின் தன்மை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
  • வலி நிவாரண மாத்திரைகளான Indomethacin, Mefenamic acid, Coxibs (NSAID) ஆகியன நலன் தரும்.
  • யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் மருந்துகள், Uricosurics மற்றும் Xanthine oxidase inhibitors ஆகியன.
  • வலி நிவாரண மாத்திரைகளான Indomethacin, Mefenamic acid, Coxibs (NSAID) மற்றும் வலி நிவாரண ஊசிகள் நலன் தரும்.
  • உங்களுக்காக ஒரு screen shot..
  • வரலாறு..
  • Podagra (கட்டை பெருவிரல் வீக்கம்) என எகிப்தியர்களால் முதலில் அழைக்கப்பட்டது Gout.
  • Gout என்ற சொல், Gutta என்ற லத்தீன் மொழியில் இருந்து வந்தது. Gutta என்றால் ஒரு சொட்டு என்ற பொருளாம்.
  • மேலும் ஒரு தகவல்..
  • நியூட்டன், சார்லஸ் டார்வின், எட்டாம் ஹென்றி, பிராங்கிளின்..இவர்கள் goutல் பாதிக்கப்பட்டவர்கள்.!


*****************

Menopause.. மெனோபாஸ்..


'வயோதிகத்தின் வரவேற்பிதழ்..!'


  • மெனோபாஸ் எனப்படுவது மாதவிலக்கு நிற்கும் காலகட்டம். 45-52 வயதில் ஏற்படும் நிலை, இது.

  • ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு, மெனோபாஸ்.

  • சினைப்பைகளின் திறன் குறைவதால், மாத சுழற்சிக்கான ஹார்மோன்கள், Estrogen மற்றும் Progesterone குறைந்து மாதவிலக்கை நிறுத்திவிடுகிறது.
  • இந்தியப் பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 45. 
  • 44-52 வருடங்களில் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும்.

  • 40 வயதிற்கு முன்பே வரும் மெனோபாஸ், (POF) Premature Ovarian Failure எனப்படும்.

  • 55 வயதிற்கு பின்னரும், மாதவிடாய் தொடர்ந்தால், Delayed Menopause எனப்படும்.
  • மெனோபாஸ், ஒரு நாளில் நிகழும் நிகழ்வல்ல. சில வருடங்கள் முன்னரே தோன்றுவது Perimenopause என்ற நிலையாகும்.

  • Perimenopauseன் அறிகுறிகள்...
  • சோர்வு, கோபம், மன அழுத்தம், ஹாட் ஃப்ளஷ், மூட்டுவலி ஆகியன..

 
  • Menopause என்ற சொல், கிரேக்க மொழியில் இருந்து வந்தது. 'Men என்றால் மாத'.. 'Pausis என்றால் நிறுத்தம்' என்று பொருள்.
  • பெண் பூப்படைவது, மற்றும் குழந்தைப்பேறு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மெனோபாஸும்..
  • மெனோபாஸ் இரு வகைப்படும்.
  • -இயற்கையாக, சினைப்பை திறன் குறைவதால் ஏற்படுவது.
  • -செயற்கையாக, அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சுக்குப் பின் ஏற்படுவது.
  • உடல் வெப்பமடைவது, இரவில் வியர்ப்பது, பிறப்புறுப்பில் வறட்சி, தூக்கமின்மை, மூட்டு் வலி, சோர்வு, சிறுநீர் பிரச்சினை ஆகியன மெனோபாஸ் அறிகுறிகள்.
  • மெனோபாஸின் vasomotor அறிகுறிகள்..
  • - வெப்பநிலை தாக்கம்.
  • -இரவு வியர்வை.
  • -படபடப்பு.
  • -தலைவலி.
  • Hot flushes
  • 75 % பெண்களுக்கு ஏற்படும். முகம், கழுத்து, பாதம் மற்றும் உள்ளங்கைகள் சூடாகும். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கும்.
  • வெப்பத் தாக்கம் இரவில் உண்டாகும்போது, அதிகமாக வியர்வை (night sweats) ஏற்படும்.
  • மெனோபாஸில் தூக்கமின்மை, (insomnia) பெரும் பிரச்னையாகும். வெப்ப தாக்கம் மற்றும் இரவு வியர்வை முக்கிய காரணங்களாகும்.
  • மனச்சோர்வு, பதட்டம், எளிதில் எரிச்சல், கோபம் அடைதல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.
  • Loss of libido என்ற உடலுறவில் ஆர்வமின்மை, ஹார்மோன்கள் ஏற்படுத்தும் உடலுறுப்பு வறட்சி மற்றும் தொய்வின் காரணமாக.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக் கட்டுப்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும்.
  • சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படும். பசைத்தன்மை குறைந்து தொய்வு மற்றும் எரிச்சல் ஏற்படும்.
  • மெனோபாஸை அடைந்ததும், பெண்ணுக்கு இதயநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

  • மெனோபாஸில், உறுதியாக இருக்கும் எலும்புகள் உறுதியிழந்து நிற்கும் நிலையை, Osteoporosis /எலும்பு புரை என்கிறோம்.
  • உணவாக எடுத்துகொள்ளும் கால்சியம் குறையும்போதும், கால்சியத்தை எலும்பில் சேர்த்து வைக்கும் ஹார்மோன்கள் குறையும்போதும் Osteoporosis ஏற்படும்.
  • மெனோபாஸில் பெண்ணுக்கு, 1500mg/d கால்சியம் தேவை. வைட்டமின்-டி மற்றும் Mg மிகவும் முக்கியம்.
  • உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலும் எலும்பும் வலுவடையும். தியானம் மற்றும் யோகாவின் மூலம் மன அழுத்தம் குறையும்.
  • HRT என்ற Hormone Replacement Therapy..
  • மெனோபாஸ், ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படுவதால், ஹார்மோன்களை மீண்டும் தருவது HRT எனப்படும்.
  • HRT யில், ஈஸ்ட்ரோஜென் (estrogen), புரோஜெஸ்டின் (progestin) எனும் இரண்டு ஹார்மோன்களும் அடங்கும்.
  • ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மெனோபாஸின் அறிகுறிகளை குணமாக்குகிறது. புரோஜெஸ்டின், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • Tibolone எனும் செயற்கை ஸ்டீராய்ட் மருந்தும் மெனோபாஸில் பயன்படுத்தப்படுகின்றது.
  • HRT.. ஒரு screen shot..
  • பெண்களுக்கான பிரத்தியேக பரிசோதனை முறைகள்..
  • "மெனோபாஸ்" பெண்ணின் பேறுகால வாழ்க்கையின், இறுதி அத்தியாயமே தவிர, பெண்ணின் இறுதி அத்தியாயம் அல்ல!
  • ”The menopause of Sarah became her menostart.. This is feminine beauty!.."
  • "மெனோபாஸ், பெண்களுக்கு முடிவல்ல, வயோதிகத்தின் இனிய தொடக்கமே..!"
  • உங்களுக்கு தெரியுமா..
  • Angelina Jolie, கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க, செயற்கை மெனோபாஸ் முறையை ஏற்றுக்கொண்டார்..
  • Menopauseன், ஆண்பதம்...
  • Andropause!!
  • Andropause!!