Antibiotics
என்ற
நுண்ணுயிர் எதிர்ப்பியின் வரலாறு
- உலகின் முதல் ஆன்டிபயாடிக் மருந்து பென்சிலின் ஆகும். இதனை கண்டறிந்தவர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் என்ற ஆங்கில மருத்துவர்.
- அறிவியல் உலகில் தற்செயலாக பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பென்சிலின்.
- அலெக்சாண்டர் ஃபளெமிங், 1881ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார்.
- லண்டனில், செயின்ட் மேரிஸ் மருத்துவப் பள்ளியில் மருத்துவம் பயின்று, தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் பணிபுரிந்தார்.
- முதல் உலகப்போரின் போது, ஃபளெமிங் பிரிட்டிஷ் ராணுவ மருத்துவப் பிரிவில் பணிபுரிந்தபோது போர்வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
- உலகப்போரின் போது காயமடைந்த வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களில் சீழ் பிடித்துப் புரையோடி இறந்ததை நேரில் கண்டார் ஃபளெமிங்.
- உலகப்போருக்குப் பிறகு, கிருமிநாசினி ஆராய்ச்சியை மேற்கொண்டார் ஃபளெமிங்.
- ஃபிளெமிங் 1928ம் ஆண்டில் ‘ஸ்டெஃபைலோ காக்கஸ்’ எனும் ஒருவகை பாக்டீரியா கிருமிகள் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
- ஆராய்ச்சியின் இடையே விடுமுறை நாட்கள் இருந்ததால் ஆய்வுப் பொருட்களை அப்படியே வைத்துவிட்டுச் சென்றார், ஃபளெமிங்.
- சில நாட்கள் கழித்து ஆராய்ச்சி தட்டை ஃபளெமிங் பார்த்தபோது, அதில் பூஞ்சை படிந்திருந்தது.
- ஆனால் ஆச்சரியமாக, பூஞ்சை படிந்த இடத்தில் கிருமிகள் முழுவதும் அழிந்திருந்தன மற்ற பகுதியில் பெருகி இருந்தன.
- ஆராய்ச்சி செய்த போது ‘Penicillium notatum’ எனும் பூஞ்சை என்றும், அதற்கு பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆற்றல் உள்ளது என்றும் தெரிந்து கொண்டார்.
- Penicillium notatum என்ற பூஞ்சையைப் பயன்படுத்தி மருந்து தயாரித்ததால், ஃபளெமிங் அதற்கு பென்சிலின் என்று பெயரிட்டார்.
- பென்சிலின் எனும் ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்ட நாளான 28/9/1928, வெள்ளிக்கிழமை மருத்துவ உலகத்தின் மறக்க முடியாத நாள் எனலாம்.
- உலக அளவில் 1928 க்கு முன்பு சிறிய வெட்டுக்காயம், சாதாரண சளிகூட பலரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தது.
- Plague, Cholera, கக்குவான் இருமல், காச நோய் ஆகியன மனித குலத்தின் அழிவுக்கு காரணமாக இருந்தது.
- 1918 ஆம் ஆண்டில், Spanish Flu நோய் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை, உலகப்போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
- பென்சிலின் கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் பெரும் புரட்சியைச் செய்தது எனலாம்.
- 1941ல் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது பல்லாயிரக்கணக்கான போர் வீரர்களைக் காப்பாற்ற இந்த மருந்து உதவியது.
- 1941ஆம் வருடம், முதன்முதலாக Streptococcal Septicemia என்ற ஆபத்தான நிலைக்கு பென்சிலின் பயன்படுத்தப் பட்டது.
- 1944 ஆம் ஆண்டு முதல், பென்சிலின், பெருமளவில் தயாரிக்கப்பட்டது.
- பென்சிலின் என்ற அற்புதக் கண்டுபிடிப்புக்காக 1945ல் இங்கிலாந்து மன்னர் ஃபளெமிங்கிற்கு நோபல் பரிசு வழங்கினார்.
- இன்றைக்கு நூற்றுக்கணக்கான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் நடைமுறையில் உள்ளன. என்றாலும், எல்லாவற்றுக்கும் முன்னோடி பென்சிலின் மருந்துதான்.
- டிரான்ஸ் பெப்டிடேஸ் என்ற பாக்டீரியாவின் வளர்ச்சி என்சைமை அழித்து பாக்டீரியாக்களைக் கொல்கிறது பென்சிலின்.
- Rheumatic காய்ச்சல், Syphilis, Gonorrhea, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பென்சிலின் மட்டுமே இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
- 70 ஆண்டுகளுக்கு முன் எது மனிதனின் அற்புதக் கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டதோ, அதே ஆன்டிபயாடிக் இப்போது தன் சக்தியை இழந்துகொண்டிருக்கிறது.
- கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா கிருமிகள் இப்போது ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
- ஆம்.. Antibiotic Resistance நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- ஆம்..
- Nothing in Biology Makes Sense Except in the Light of Evolution. -Dobzhansky
- பரிணாமம் ஒன்றைத்தவிர உயிரியல் அறிவு வேறு எதையும் ஏற்காது.
- ஒரு சிறிய தகவல்..
- ஒரு சிறிய நிகழ்வு..
******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக