அதிக யூரிக் அமிலம் = Gout??
- யூரிக் அமிலம் (uric acid) அதிகரிக்கும் நிலை ஹைப்பர்யுரிசீமியா (hyperuricemia) என்று அழைக்கப்படும்.
- யூரிக் அமிலம், (Purine metabolism) ப்யூரைன் உடைவதால் உண்டாகிறது. இரத்தத்தின் மூலம் சிறுநீரகத்தை அடைந்து சிறுநீரில் வெளியேறுகிறது.
- DNA மற்றும் RNAக்களின் முக்கிய கட்டமைப்பானது Adenine மற்றும் Guanine என்ற பியூரின்கள்.
- பியூரின் செரிமானம் ஆகும்போது, யூரிக் அமிலமாக மாற்றபடுகிறது. இது இயற்கையானது.
- யூரிக் அமிலம் ஒரு சிறந்த antioxidant. ரத்தநாளங்கள் சேதமடையாமல் யூரிக் அமிலம் காக்கிறது.
- உருவாகும் யூரிக் அமிலத்தின், முக்கால் பங்கு சிறுநீரகங்களிலும், கால் பங்கு குடல் வழியாகவும் வெளியேற்றப்படுகிறது.
- Hyperuricemia என்ற, யூரிக் அமிலம் அதிகநிலை, யூரிக் அமிலம் அதிகமாக சுரக்கும் போது அல்லது குறைவாக வெளியேற்றப்படும் போது ஏற்படுகிறது.
- அதிகம் சேர்ந்த யூரிக் அமிலம், மூட்டுகளிலும், காதுகளிலும், சிறுநீரகத்திலும் (MSU) படிவதால் ஏற்படுவது Gout.
- யூரிக் அமிலம் அதிமாக உள்ளவர்கள், 25 in 100 என்றாலும்,
- Gout ஏற்படுவது 1 in 100 மட்டுமே. அதிலும், 50% மட்டுமே நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- Gout ல், கால்களின் கட்டைவிரல், கணுக்கால், முழங்கால் மூட்டுகள் ஆகியன வீங்கி கடும்வலி உண்டாகிறது.
- முன்பு மன்னர்களுக்கு மட்டும் வந்ததால், Gout "மன்னர்களின் வியாதி" (King's disease) என அழைக்கபட்டது.
- 20 ம் நூற்றாண்டில், Gout அதிக அளவில் பொதுமக்களுக்கும் பரவி சாதாரண மனிதர்களின் வியாதி என்றாகிவிட்டது.
- மன்னர் காலத்தில், பணக்கார உணவுகளான மாமிசம், சர்க்கரை, இனிப்புகள், மது ஆகியன, பின்னர் அனைவரும் உண்ண, Gout சாதாரண மனிதனின் வியாதி ஆகிவிட்டது.
- தற்போதைய நிலையில் யூரிக் அமிலம் அதிகரிக்க முக்கிய காரணங்கள் பெப்சி, கோக், இனிப்புகள் மற்றும் மது.
- Gout, பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கும். 40 வயதிற்கு பின்னரே பெரும்பாலும் தோன்றுகிறது.
- ஆண்களில் உடல் பருமன், இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு Gout வரும் வாய்ப்புகள் அதிகம்.
- அறுவை சிகிச்சை, காயம், மன உளைச்சல், மது, சில மருந்துகள் போன்றவை gout ஏற்படுவதை துரிதப்படுத்துகின்றன.
- மூட்டுகளில் கடுமையான வலி, வீக்கம், உடற்சோர்வு, காய்ச்சல் ஆகியன Gout அறிகுறிகள் ஆகும்.
- யூரிக் அமிலம், சிறுநீரகத்தில் படிந்தால் அங்கு கற்கள் உற்பத்தியாகும். (Nephrolithiasis).
- நீண்ட நாள் Goutல் கைகள், கால், காதுமடல்கள் ஆகியவற்றில் தடிப்புகள் ஏற்படும். இது டோப்பை (tophi ) என அழைக்கப்படும்.
- 7-10 நாட்களுக்குள் acute gout அறிகுறிகள் மறைந்தாலும், மீண்டும் flare ups எனப்படும் நோய் தாக்கம் 60% பேருக்கு ஒரு வருடத்திலேயே ஏற்படுகின்றது.
- கண்டறிய..
- இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு முக்கிய பரிசோதனையாகும்.
- 6.5-7 mg/dl அளவைத் தாண்டினால், Hyperuricemia எனப்படும்.
- Gout நோயைத் தவிர்க்க உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் அறிவுறுத்தப்படுகின்றது.
- நமது உணவு வகைகளே 12% gout ஏற்பட காரணமாக உள்ளது.
- மாமிசம், காளான், கீரை, பழம், காஃபி, சர்க்கரை, மது போன்ற உணவுகள் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்.
- குறைந்த கார்ப், சற்று அதிக புரதம், கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உண்ண வேண்டும். 40% கார்ப், 40% கொழுப்பு, 20% புரதம் ஏற்புடையது.
- சர்க்கரை தவிர்த்து மாமிசம் மற்றும் காய்கறிகள் மட்டுமே உணவாகின்ற Caveman diet இல், யூரிக் அமிலம் குறைவாக சுரக்கும்.
- நோயின் தன்மை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
- வலி நிவாரண மாத்திரைகளான Indomethacin, Mefenamic acid, Coxibs (NSAID) ஆகியன நலன் தரும்.
- யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் மருந்துகள், Uricosurics மற்றும் Xanthine oxidase inhibitors ஆகியன.
- வலி நிவாரண மாத்திரைகளான Indomethacin, Mefenamic acid, Coxibs (NSAID) மற்றும் வலி நிவாரண ஊசிகள் நலன் தரும்.
- உங்களுக்காக ஒரு screen shot..
- வரலாறு..
- Podagra (கட்டை பெருவிரல் வீக்கம்) என எகிப்தியர்களால் முதலில் அழைக்கப்பட்டது Gout.
- Gout என்ற சொல், Gutta என்ற லத்தீன் மொழியில் இருந்து வந்தது. Gutta என்றால் ஒரு சொட்டு என்ற பொருளாம்.
- மேலும் ஒரு தகவல்..
- நியூட்டன், சார்லஸ் டார்வின், எட்டாம் ஹென்றி, பிராங்கிளின்..இவர்கள் goutல் பாதிக்கப்பட்டவர்கள்.!
*****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக