வெள்ளி, 6 மே, 2016

Menopause.. மெனோபாஸ்..


'வயோதிகத்தின் வரவேற்பிதழ்..!'


  • மெனோபாஸ் எனப்படுவது மாதவிலக்கு நிற்கும் காலகட்டம். 45-52 வயதில் ஏற்படும் நிலை, இது.

  • ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு, மெனோபாஸ்.

  • சினைப்பைகளின் திறன் குறைவதால், மாத சுழற்சிக்கான ஹார்மோன்கள், Estrogen மற்றும் Progesterone குறைந்து மாதவிலக்கை நிறுத்திவிடுகிறது.
  • இந்தியப் பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 45. 
  • 44-52 வருடங்களில் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும்.

  • 40 வயதிற்கு முன்பே வரும் மெனோபாஸ், (POF) Premature Ovarian Failure எனப்படும்.

  • 55 வயதிற்கு பின்னரும், மாதவிடாய் தொடர்ந்தால், Delayed Menopause எனப்படும்.
  • மெனோபாஸ், ஒரு நாளில் நிகழும் நிகழ்வல்ல. சில வருடங்கள் முன்னரே தோன்றுவது Perimenopause என்ற நிலையாகும்.

  • Perimenopauseன் அறிகுறிகள்...
  • சோர்வு, கோபம், மன அழுத்தம், ஹாட் ஃப்ளஷ், மூட்டுவலி ஆகியன..

 
  • Menopause என்ற சொல், கிரேக்க மொழியில் இருந்து வந்தது. 'Men என்றால் மாத'.. 'Pausis என்றால் நிறுத்தம்' என்று பொருள்.
  • பெண் பூப்படைவது, மற்றும் குழந்தைப்பேறு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மெனோபாஸும்..
  • மெனோபாஸ் இரு வகைப்படும்.
  • -இயற்கையாக, சினைப்பை திறன் குறைவதால் ஏற்படுவது.
  • -செயற்கையாக, அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சுக்குப் பின் ஏற்படுவது.
  • உடல் வெப்பமடைவது, இரவில் வியர்ப்பது, பிறப்புறுப்பில் வறட்சி, தூக்கமின்மை, மூட்டு் வலி, சோர்வு, சிறுநீர் பிரச்சினை ஆகியன மெனோபாஸ் அறிகுறிகள்.
  • மெனோபாஸின் vasomotor அறிகுறிகள்..
  • - வெப்பநிலை தாக்கம்.
  • -இரவு வியர்வை.
  • -படபடப்பு.
  • -தலைவலி.
  • Hot flushes
  • 75 % பெண்களுக்கு ஏற்படும். முகம், கழுத்து, பாதம் மற்றும் உள்ளங்கைகள் சூடாகும். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை நீடிக்கும்.
  • வெப்பத் தாக்கம் இரவில் உண்டாகும்போது, அதிகமாக வியர்வை (night sweats) ஏற்படும்.
  • மெனோபாஸில் தூக்கமின்மை, (insomnia) பெரும் பிரச்னையாகும். வெப்ப தாக்கம் மற்றும் இரவு வியர்வை முக்கிய காரணங்களாகும்.
  • மனச்சோர்வு, பதட்டம், எளிதில் எரிச்சல், கோபம் அடைதல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.
  • Loss of libido என்ற உடலுறவில் ஆர்வமின்மை, ஹார்மோன்கள் ஏற்படுத்தும் உடலுறுப்பு வறட்சி மற்றும் தொய்வின் காரணமாக.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக் கட்டுப்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும்.
  • சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படும். பசைத்தன்மை குறைந்து தொய்வு மற்றும் எரிச்சல் ஏற்படும்.
  • மெனோபாஸை அடைந்ததும், பெண்ணுக்கு இதயநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது.

  • மெனோபாஸில், உறுதியாக இருக்கும் எலும்புகள் உறுதியிழந்து நிற்கும் நிலையை, Osteoporosis /எலும்பு புரை என்கிறோம்.
  • உணவாக எடுத்துகொள்ளும் கால்சியம் குறையும்போதும், கால்சியத்தை எலும்பில் சேர்த்து வைக்கும் ஹார்மோன்கள் குறையும்போதும் Osteoporosis ஏற்படும்.
  • மெனோபாஸில் பெண்ணுக்கு, 1500mg/d கால்சியம் தேவை. வைட்டமின்-டி மற்றும் Mg மிகவும் முக்கியம்.
  • உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலும் எலும்பும் வலுவடையும். தியானம் மற்றும் யோகாவின் மூலம் மன அழுத்தம் குறையும்.
  • HRT என்ற Hormone Replacement Therapy..
  • மெனோபாஸ், ஹார்மோன் குறைபாட்டினால் ஏற்படுவதால், ஹார்மோன்களை மீண்டும் தருவது HRT எனப்படும்.
  • HRT யில், ஈஸ்ட்ரோஜென் (estrogen), புரோஜெஸ்டின் (progestin) எனும் இரண்டு ஹார்மோன்களும் அடங்கும்.
  • ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மெனோபாஸின் அறிகுறிகளை குணமாக்குகிறது. புரோஜெஸ்டின், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
  • Tibolone எனும் செயற்கை ஸ்டீராய்ட் மருந்தும் மெனோபாஸில் பயன்படுத்தப்படுகின்றது.
  • HRT.. ஒரு screen shot..
  • பெண்களுக்கான பிரத்தியேக பரிசோதனை முறைகள்..
  • "மெனோபாஸ்" பெண்ணின் பேறுகால வாழ்க்கையின், இறுதி அத்தியாயமே தவிர, பெண்ணின் இறுதி அத்தியாயம் அல்ல!
  • ”The menopause of Sarah became her menostart.. This is feminine beauty!.."
  • "மெனோபாஸ், பெண்களுக்கு முடிவல்ல, வயோதிகத்தின் இனிய தொடக்கமே..!"
  • உங்களுக்கு தெரியுமா..
  • Angelina Jolie, கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க, செயற்கை மெனோபாஸ் முறையை ஏற்றுக்கொண்டார்..
  • Menopauseன், ஆண்பதம்...
  • Andropause!!
  • Andropause!!

1 கருத்து:

  1. ஆரோக்கியத்தில் உங்களது அக்கறை. மருத்துவ வழியில் சிறப்புரை..

    பதிலளிநீக்கு