சனி, 30 ஏப்ரல், 2016

முதலுதவி மற்றும் CPR..

கற்போம்..
கற்பிப்போம்..
உயிர் காப்போம்..!

  • முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும்.
  • 1859இல், ஜீன் ஹென்ரி டுனன்ட் ,சல்பிரினோ போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதன்முதலாக, முதலுதவி செய்தார்.
  • முதலுதவி, பல சமயங்களில் உயிர் காப்பாற்றுகிற திறன்களான CPRஐ உள்ளடக்கியது.

  • இதய இயக்க மீட்பு (CPR-cardipulmonary resuscitation) என்பது உயிரை காப்பாற்றும் முதலுதவியாகும்..

  • Cardiac arrest என்ற இருதய செயலிழப்பில்.... இருதயம் முற்றிலும் செயலிழப்பதால், உடலின் அனைத்து பாகங்களிலும் இரத்த ஓட்டம் மற்றும் O2 தடைபெறுகிறது.
  • மூளைக்கு 4 நிமிடங்களுக்கு மேலாக, O2 மற்றும் இரத்த ஓட்டம் தடைபட்டால் மயக்கதிலை மற்றும் கோமா ஏற்படும்.
  • உங்களுக்கு தெரியுமா..
  • 7.5 லட்சம் இந்தியர்கள், வருடந்தோறும், மாரடைப்பால் உயிரிழக்க நேரிடுகின்றனர்!!
  • மாரடைப்பால் ஏற்படும், 80% உயிரிழப்புகள் மருத்துவமனை அல்லாத இடங்களில் தான் நேரிடுகிறது.
  • 1%த்திற்கும், குறைவான மக்களுக்குத்தான், CPR என்ற இதய இயக்க மீட்பு பற்றி தெரியும் என்கிறது ஆய்வு.
  • தாமதிக்கும், ஒவ்வொரு நிமிடமும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் 10% குறைந்து கொண்டே இருக்கும்.
  • ஒவ்வொரு நிமிடமும், 20-30% ரத்த ஓட்டத்தை, CPR அதிகரிக்கிறது.
  • BLS - Basic Life Support, என்ற அடிப்படை உயிர்காக்கும் வழிமுறையின் மூலம், மரணங்களைத் தடுக்க முடியும்.
  • முதலுதவியின் மூன்று முக்கிய நோக்கங்கள்..
  1. -உயிர் பாதுகாத்தல்
  2. -நோய் தீவிரமடைவடைதை தவிர்த்தல்
  3. -நோயை குணப்படுத்துவதை ஊக்குவித்தல்.
  • முதலுதவியின் மிக முக்கியமான விதிகள்... ABC எனப்படும், Airway, Breathing, and Circulation என்பதன் சுருக்கமாகும்.
  • சில விதிமுறைகள்..
  1. முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல். (Approach safely.)
  2. பாதிக்கப்பட்டவரின் மூச்சு மற்றும் துடிப்பை பரிசோதனை செய்யவேண்டும். (Check response.)
  3. உடனடியாக உதவிக்கு குரல் கொடுக்க வேண்டும். (Shout for help.)
  4. ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
  5. இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.
  6. மூச்சுக் குழாய் அடைப்பு உள்ளதா என்றும் சுவாசம் உள்ளதா என்றும் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • நினைவிழந்த நபரை சமனான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது தலையை நிமிர்த்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து, 5நொடி இடைவெளியில், 2 முறை காற்றை ஊதி உள்செலுத்த வேண்டும்.
  • பிறகு நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும்.
  • மார்பின் மையப்பகுதியில், கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, நிமிடத்திற்கு 100-120 முறை என்ற அளவில், 5-6 cm ஆழ அழுத்தங்களை 30 முறை தர வேண்டும்.
  • 30:2
  • முப்பது முறை chest compressions தந்த பிறகு, 2 முறை mouth to mouth breathing தரவேண்டும்.
  • ஒரு உயிரைக் காப்பாற்ற, நீங்கள் அவசியம் மருத்துவராக இருக்க வேண்டியதில்லை.
  • மருத்துவ உதவி கிட்டும்வரை, விடாமல் CPR செய்யவேண்டும்.
  • Advanced Life Support என்பதில், ABCயுடன் ஒரு Dயையும் defibrillation சேர்கிறது (சிவாஜி படத்தில் ரஜினி உயிர்த்தெழுதல்)
  • இதய இயக்க மீட்பு CPR-cardipulmonary resuscitation என்ற உயிர் காக்கும் முதலுதவிக்கு தக்க பயிற்சி மட்டும் போதுமானது.
  • மறக்க முடியாத வலி..
  • பல உயிர்களைக் காத்த எங்கள் மருத்துவப் பேராசிரியர் Bhat, சில வருடங்கள் முன்னர் இருதய அடைப்பால் மரணமடைந்தார்..
  • மறக்க முடியாத நிகழ்வு.
  • சென்ற ஆண்டில், கோவை நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுவனுக்கு தொடர் CPR தந்து காப்பாற்றியது எங்கள் பேராசிரியர் திரவியராஜ்.
கற்போம்..
கற்பிற்போம்..
உயிர் காப்போம்..

Let us 
Teach one..
Save one..
TODAY!!

***************

Attention Deficit Hyperactivity Disorder (ADHD)



  • குழந்தை சொன்ன பேச்சையே கேட்பதில்லை... ஓர் இடத்தில் நிற்பதில்லை... இது பல அம்மாக்களின் புலம்பலாக இருக்கும்.

  • குழந்தைகள் தொடர்ந்து படபடப்பாகவும், உடனுக்குடன் யோசிக்காமல், செய்வதும், மறதியோடும் இருந்தால் அது ADHD என்ற மனநலக் குறைபாடாக இருக்கலாம்.
  • ADHD என்றதும், உங்களுக்கு, பசங்க 2வின் கவின் மற்றும் நயனா ஞாபகத்துக்கு வர்றாங்களா..?


  • ADHDயின் முக்கிய அறிகுறிகள்..
  1. -கவனமின்மை (Inattention)
  2. -அதீத இயக்கம் (Hyperactivity)
  3. உணர்ச்சி வேக செயல்பாடுகள் (Impulsiveness)..
  • எளதில் கவனச் சிதறல், பகல் கனவு, சலிப்பு, தொடர்ந்து சத்தமாக பேசுவது, பொறுமையின்மை ஆகியனவும் அறிகுறிகளாகும்.
  • ADHD, பொதுவாக 6-12 வயதில் தோன்றுகிறது. பள்ளியில் கவனமின்மை மற்றும் மறதியே, பல சமயங்களில் அறிகுறிகளாக உள்ளன.
  • உலகளவில் ஏறத்தாழ, 39 மில்லியன் குழந்தைகளுக்கு, ADHD இருப்பதாக WHO கூறுகிறது.
  • பெண் குழந்தைகளைக் காட்டிலும், ஆண் குழந்தைகளை, ADHD 3 மடங்கு அதிகம் பாதிக்கிறது.
  • தங்கள் வயதை ஒத்த குழந்தைகள் போலில்லாமல், தொடர்ந்து கட்டுப்பாடின்றி செயல்பட்டால், அது ஏ.டி.ஹெச்.டி யாக இருக்கலாம்.
  • ADHDயின் வகைகள்...
  1. அதீத இயக்கம் மட்டும் (Hyperactivity ADHD)
  2. கவனமின்மை மட்டும் (Inattention ADD) 
  3. இரண்டும் கலந்த நிலை.

  • எதிர்த்துப் பேசுதல், மற்றும் கீழ்படியாமை, 60% குழந்தைகளிடையே காணப்படுகின்றது.

  • 5% குழந்தைகளுக்கு, பொய் பேசுதல், விதிமுறைகளை மீறுதல், களவு போன்றவை காணப்படலாம்.
  • மன அழுத்தம் அல்லது படபடப்பு (depression/anxiety) 35% குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
  • எவ்வளவு முயற்சித்தாலும், அவர்களால், ஓரிடத்தில் உட்காரவோ, அமைதியாக இருக்கவோ, கவனம் செலுத்தவோ முடியாது என்பதே நிஜம்.
  • சிறுவயதில், தோன்றும் ADHD, 30-50% பேருக்கு, வளர்ந்த பிறகும் தொடர்கிறது.
  • சில குழந்தைகளுக்கு,  டிஸ்லெக்சியா என்ற எழுத்துக் கூட்டி, வாசிக்க முடியாத நிலை   இருக்கும்.
  • ADHDக்கு, 75% மரபியல் காரணமாகவும், சமூகம் அல்லது சுற்றுச்சூழல் 25% காரணமாகவும் கூறப்படுகிறது.
  • மூளையின் நரம்பூக்கிகளான, Dopamine மற்றும் Nor-epinephrine அளவுகளில் மாற்றம் ஏற்படுவதால் ADHD ஏற்படலாம் என்கிறது ஆய்வு.
  • மனவியல் ஆலோசனை மற்றும் தகுந்த ஊக்க மருந்து தான் முதன்நிலை சிகிச்சை என்கிறது அமெரிக்காவின் சைக்கியாட்ரிக் சங்கம்.
  • குழந்தைகள் மனநல மருத்துவர், பெற்றோர், மன உளவியலாளர், பேச்சுப் பயிற்சியளிப்போர், ஆசிரியர்கள், என் அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்று.
  • சிகிச்சை முறையில், Cognitive Behavior Therapy, மற்றும் Family Therapy என்ற குடும்ப மனநல ஆலோசனை பெரிதும் உதவுகிறது.
  • கல்வி, நடத்தை சிகிச்சை, குடும்பம்/பள்ளியின் ஆதரவு, உடற்பயிற்சி, தகுந்த ஊட்டச்சத்து என அனைத்தும் சேர்ந்தது தான் முழுமையான சிகிச்சையாகும்.
  • முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், தொடர் சிகிச்சை, மனவியல் ஆலோசனை, தகுந்த பள்ளிக்கல்வி இவர்களுக்கு துணைநிற்கும்.
  • ஆக..
  • கற்றல் குறைபாடுகள், அதீத சுறுசுறுப்பு குறைகள் அல்ல.. பெற்றோர்கள், அவற்றை கையாளும் முறைகளை அறிந்தால் போதுமானது..
  • குழந்தைகளின் உலகை, அவர்களின் எண்ணங்களை, உணர்வுகளை, கனவுகளை உணர்வதும் மிகவும் அவசியமான ஒன்றுதானே..


***************

GDM என்ற கர்ப்ப கால சர்க்கரை நோய்..


  • கொழுகொழுவென பிறக்கும் குழந்தைகள் எல்லாமே ஆரோக்கியமான குழந்தைகள் அல்ல..
  • GDM குழந்தைகளாகவும் இருக்கலாம்..
  • கர்ப்ப காலத்தில் மட்டும், பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது, "கர்ப்பகால சர்க்கரை நோய்' எனப்படும்.
  • கர்ப்ப காலத்தில் சுமார் 16 - 17% பெண்கள், கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
  • கருப்பையில் வளரும் குழந்தையின் ஆதாரமே, தாயின் ரத்த குளுகோஸ் தான்.
  • GLUT1 என்ற குளுகோஸ் போக்குவரத்து ஏற்பி, தாயிடமிருந்து சேய்க்கு குளுகோஸ் சக்தியை வழங்குகிறது.
  • கர்ப்ப காலத்தில், ப்ரொஜிஸ்டிரான், HPL ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இவை, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும்.
  • தாயின் கணயத்தின் லாங்கர்ஹான்ஸ், போதுமான இன்சுலினை சுரக்காமல் இருப்பதும், சுரக்கப்படும் இன்சுலின் அழிக்கப்படுவதாலும், சர்க்கரை நோய் ஏற்படும்.
  • தாயின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, GLUT1 அதிகப்படியான க்ளுகோஸை குழந்தைக்கு எடுத்துச் செல்கிறது.
  • குழந்தையின் சர்க்கரை அளவு கூடும்போது, அதன் எடை அதிகரிக்கிறது. மேலும் பிறக்கும் போது அதன் சர்க்கரை அளவு குறைந்த அளவில் காணப்படுகிறது.
  • அதிக எடை , முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய், குடும்பத்தில் சர்க்கரை நோய் இருத்தல்.. -இவர்களுக்குச் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • சர்க்கரை நோய் இருந்தால் கருச்சிதைவு, பிறவி ஊனம், அதிக எடையுடன் குழந்தை வயிற்றிலேயே குழந்தை இறந்து விடுதல்.. ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
  • கர்ப்ப கால சர்க்கரை நோயில் பிறக்கும் குழந்தைக்கு, நுரையீரல் வளர்ச்சி அடையாமல் சுவாசக் கோளாறும் ஏற்படக் கூடும். (RDS)
  • கர்ப்ப கால சர்க்கரை நோயைக் கண்டறிய, 75g குளுக்கோஸ் சேலஞ்ச் பரிசோதனை செய்யப்படுகிறது.
  • கர்ப்பம் தரித்த உடன் மற்றும் 4, 6, 8-ம் மாதங்களில் கண்டிப்பாக GCT சர்க்கரை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
  • GCT சோதனையில், சர்க்கரை அளவு >140 mg இருந்தால், கர்ப்பகால சர்க்கரை நோய் உறுதியாகி விடும்.
  • GCT சோதனையில், சர்க்கரை அளவு 120-139mg இருந்தால், IGT, Impaired Glucose Tolerance எனப்படும்.
  • IGT என்ற சர்க்கரை நிலை சகிப்பின்மை இருந்தால், தக்க உணவு, நடைபயிற்சி மட்டுமே போதுமானது.
  • கர்ப்பகாலத்தில் தாய்க்கு சர்க்கரை நோய் உறுதியாகும் நிலையில், இன்சுலின் ஊசி தான் பரிந்துரைக்கப்படுகிறது.
  • மேலும், சீரான உடற்பயிற்சி செய்ய வேண்டும். மருத்துவர் குறிப்பிடும், உணவுக்கட்டுப்பாடு மற்றும் இன்சுலின் அவசியம்.
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
  • குழந்தையை பிரசவித்து ஆறு வாரங்கள் கழித்து,  GTT சோதனை (குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்) மூலம், சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
  • தக்க பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையின் மூலம், கர்ப்ப கால சர்க்கரை நோயும், நமது கட்டுபாட்டில் வைத்திடலாம் தானே

PMS என்ற Pre Menstrual Syndrome..


அறிகுறிகள் மற்றும் மருத்துவ ஆதாரங்கள்..

  • மாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் (PMS), என்ற Pre Menstrual Syndrome எனப்படும்.
  • காரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபம், மன அழுத்தம் - இவையனைத்தும், பெண்களுக்கு மாதவிடாயின் முன்பு தோன்றும் அறிகுறிகள்.
  • மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு ஆகியன PMS இன் முக்கியமான அறிகுறிகளாகும்.

  • PMSல், பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், அந்நாட்களில் இயல்பு வாழ்க்கைப் பாதிப்படைகிறது.

  • நினைவில் கொள்க..
  • சமையலறையில் பாத்திரங்கள் வீசி எறியப்படும் போது..
  • அலுவலகத்தில் பணியாளர்கள் அதிக திட்டு வாங்கும்போது..
  • PMS ஆக இருக்கலாம்..!
  • மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள்.
  • PMSற்கு, அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான்.
  • ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், அணுக்களில் நீரை தேக்குவதால், மார்பில், கனமான உணர்வு தோன்றுகிறது.
  • முகப்பருக்கள் இச்சமயத்தில் வருவதும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஏன்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாக சுரப்பதால் தான்..
  • அதிகப் பசி, இனிப்பு/எண்ணெய் உணவுகளின் மீது அதீத விருப்பம், வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகியனவும் தோன்றலாம்.
  • மன அமைதியின்மை, எரிச்சல், திடீர் அழுகை, என ஒரு கட்டுப்பாடின்றி தங்கள் உணர்ச்சிகளை பிரதிபலிப்பதும் ஹார்மோன்களால் தான்.
  • மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் அடிவயிற்றில் வலி, கனமான உணர்வு - இதற்குக் காரணம் கருப்பையிலும் சினைப்பையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான்.
  • திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வாந்தி, வயிற்றுப் போக்கு,  வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம்.
  • Prostaglandins என்ற ரசாயன ஊக்கிகள் வயிற்று வலி மட்டும் வாந்தி மயக்கத்தை தருவிக்கும். இங்கு வலி நிவாரணிகள் (Anti prostagandin) பயனளிக்கும்.
  • PMSலிருந்து விடுபட குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், புரிதலும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியம்.
  • கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
  • காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும். ஆகவே தவிர்ப்பது அவசியம்.
  • வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
  • மேலும், 7-8 மணி நேரம் உறக்கம், மிகவும் அவசியம்.
  • மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்னதாக மேற்கொள்ளும் நடைபயிற்சி, யோகா, தியானம் ஆகியன உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கும்.
  • 85% பெண்களுக்கு, PMS இன், ஏதாவது அறிகுறிகள் இருக்கும். அதன் தீவிரத்தன்மையை கொண்டுதான் சிகிச்சை வழங்கப்படும்.
  • வைட்டமின்கள் டி, ஈ, பி-6, மற்றும் மெக்னீஸியம், கால்சியம் அடங்கிய மாத்திரைகள் PMSக்கு கைகொடுக்கும்.
  • Evening Primrose oil, மற்றும் வைட்டமின் ஈ சேர்ந்த மருந்துகளும் பெரிதும் பயனளிக்கின்றன.
  • மூளையின் ரசாயன சுரப்பியான செரட்டொனின் (Serotonin), மனச் சோர்வு மற்றும் பய உணர்ச்சிக்கு காரணமாக உள்ளது.
  • உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி, உறக்கம், தேவைப்பட்டால் மருந்துகள், மற்றும் கனிவான அணுகுமுறை.. PMS பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!
  • மறுக்க முடியாத உண்மை...!!