சனி, 16 ஏப்ரல், 2016

இரத்த வகைகளும்... இரத்த தானமும்...





இரத்தம்... இரத்த தானம்...

  • ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும்...
  • உங்கள் இரத்த வகை பற்றி சிறிது...
  • ரத்தத்தில் மூன்று விதமான செல்கள் இணைந்திருக்கும். அதாவது வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள், ரத்தத்தை உறைய வைக்கும் தட்டணுக்கள் ஆகியவையாகும்.
  • ஒவ்வொருவரும் தங்களது ரத்த வகையை தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
  • இரத்தம் மனிதனின் வாழ்கையில் மிகவும் உயரிய பரிசாகும். இரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை.
  • ஒவ்வொரு ஆண்டும் நமது தேசத்தின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும். ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.
  • ஒரு யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்..
  • இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
  • இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
  • ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாக பிரித்து, ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளட்கள் என பயன்படுத்த முடியும்.
  • தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
  • ஒரு யூனிட் ரத்த தானம் செய்யப்படும்போது 650 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
  • இரத்த தானம், நீங்கள் செய்ய முன் வரும் போது, அதற்கான நேரவிரயம் 15-20 நிமிடங்கள் மட்டுமே.
  • தானம் செய்த, இரத்த சிவப்பணுக்களை, 42 நாட்கள் வரை உபயோகிக்கலாம். தட்டணுக்களை எடுத்த 5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
  • சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின் போது, 350 மி.லி., ரத்தம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.
  • 1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார்.
  • இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.
  • பக்கவிளைவுகள்..
  • ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. 


கொசுறு...
 இதுவரை, 10 முறை இரத்த தானம் செய்துள்ளேன்.. 
இதில், 3 முறை, தானம் செய்தவுடனே, 
நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக