நீரின்றி அமையாது உலகு...
- பூமியின் நீர்பரப்பு, 70%. ஆனாலும், இதில்1-2% நீர் தான், மனிதனால் பயன்படுத்தப்படுகிறது.
- நமது உடல், 60-65% நீரால் நிறைந்தது. பிறந்த குழந்தையின் உடலில், 80% வரை நீர் இருக்கும்.
- மூளையின் நீர் அளவு, 75%வாகும். நீர் வறட்சி, ஏற்படும் போது தலைவலி வரும் காரணமும் இதுவே.
- நமது உடலில், தசைகளில் உள்ள நீரளவு 75% இரத்தத்தில் நீரின் அளவு 92% எலும்புகளிலும் நீர் உள்ளது- 22%
- சராசரியாக, நாம், ஒரு நாளில், 3 லிட்டர் வரை நீர் அருந்துவது அவசியம்.
- உணவு சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை திசுக்களுக்கும், அணுக்களுக்கும் கொண்டு செல்வது நீர் தான்.
- உணவு கழிவுகளை வெளியேற்ற உதவுவதும் நீர்தான்.
- உடலில் நீரின் அளவு குறையும்போதோ, உப்பின் அடர்த்தி அதிகமாகும் போதோ தாக உணர்வு ஏற்படுகிறது.
- 1% த்திற்கும், மேல் நீர் வறட்சி ஏற்படும் போதுதான், தாகம் ஏற்படுகிறது.
- குளிர்பானங்கள், மற்றும் காஃபியில் உள்ள, கேஃபீன் நீர் வறட்சியை அதிகப்படுத்துகிறது.
- மதுபானங்கள், நீரழிவைத் தருவதால், இவற்றால் நீர் வறட்சி அதிகமாக காணப்படுகிறது.
- தாகம் அதிகமாக இருக்கும் போது, நீர் நிறைந்த வெள்ளரி அல்லது தர்பூசணி, ஆகியவை ஏற்புடையன.
- அதே போல, தாகத்தை குறைக்க, எலுமிச்சை மற்றும் புதினா பெரிதும் உதவுகிறது.
- நீர் இல்லாமல், மனிதன் 5-7 நாட்களுக்கு மேல் உயிர் வாழ முடியாது. உணவின்றி, ஒரு மாதம் வரை உயிர் வாழ முடியுமாம்.!
- மினரல் பாட்டில்களில் குறிக்கப்பட்டுள்ள காலாவதி தேதி, பாட்டில்களுக்குத் தான். தண்ணீருக்கு அல்ல..!
- தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்கிறது இயற்கை மருத்துவம்.
- தைராய்டு, மூட்டுவலி, வலிப்பு, அஜீரணம், இரத்தசோகை ஆகியவற்றிற்கு தாமிரம் பெரும் பயனளிக்கும் என்கிறது இயற்கை மருத்துவம்.
- நீர்ப் பற்றாக்குறையும், புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும்.
- நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம். நீர்வளம் காப்போம்..
******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக