பிரயாணங்களின் போது
ஏற்படும்
வாந்தி மற்றும் தலைச்சுற்றல்..
- பிரயாணம்..என்றால்.. பலருக்கு கொண்டாட்டம்... சிலருக்கு திண்டாட்டம்.
- மூன்றில் ஒருவர், பயணம் செய்யும் பொழுது, உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப் படுகிறார்கள். குமட்டல் (nausea), வாந்தி (vomiting), தலைசுற்றல் (dizziness), மயக்கம் (fainting) , தலைவலி (headache), சோர்வு (fatigue) ஆகியன இதில் தோன்றும்.
- ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு தான், அதிகமாக பயண கால வாந்தி ஏற்படுகின்றது.
- தெரிந்து கொள்ளுங்கள்..
- காதுகள், நமக்கு செவித்திறன் (hearing) தருவதோடு உடல் சமநிலை உணர்வையும் தருகின்றன.(balance).
- நமது உட்காது காக்லியா (cochlea) என்ற கேட்கும் திறனையும், வெஸ்டிப்யூல் (vestibule)என்ற உடல் சமநிலையை கட்டுப்படுத்தும் உறுப்புகளைக் கொண்டது.
- பயணத்தின் போது திசை அசைவு பற்றிய தகவல்களை மூளைக்கும் அனுப்புவது, கண், காது மற்றும் தோலின் திசுக்கள் தான்.
- பயணிக்கும் பொழுது நமது கண்கள் நாம் அசையாமல் அமர்ந்திருப்பது போன்ற தகவலை மூளைக்கு அனுப்புகிறது. ஆனால், சமநிலைக்குக் காரணமான வெஸ்ட்ப்யூல், நாம் வேகமாகப் பயணிப்பதாக மூளைக்கு தகவல் அனுப்புகிறது. இதனால், மூளை குழப்பமடைந்து பயணப்பிணி ஏற்படுகிறது. (Motion sickness caused by motion that is felt but not seen).
- நமது பயணத்தை இனிதாக்க சில ஆலோசனைகள்..
- பயணித்தின்போது தொடுவானத்தில் எல்லையில் நம் பார்வையை நிலை நிறுத்துவது..... Fix your eyes at Horizon.
- சுத்தமான வெளிக் காற்று, இசை அல்லது மனதை திசை திருப்பும் எந்த செயலும் பயனளிக்கும்.
- தலைக்கு சிறிய தலையணை அல்லது head rest என்ற ஆதரவு பெரிதும் உதவுகிறது.
- பயணம் செல்வதற்கு எதிர்திசையை நோக்கி அமர்ந்து பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- பிரயாணத்திற்கு முன், அதிகம் உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- Dramamine, Meclizine போன்ற சமநிலைக்கான மருந்துகள் பரிந்துரைக்கப் படுகிறது.
- பயணங்களில் இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றை உட்கொள்ளுதல் பெரிதும் உதவும்.
- மேலும், உடற்பாகங்களில் கொடுக்கப்படும் அழுத்தங்கள் (acupressure) பயணப்பிணிக்கு உதவும் என்கிறது சீன மருத்துவம்.
- வண்டில ஏறும்போதே, எலுமிச்சம்பழம், இஞ்சி முரப்பா இல்லேன்னா பெப்பர்மின்ட் கையில வச்சுக்க என்ற அறிவுரைகள் காற்றில் கலந்தவண்ணம்...
- ஆம்... ஜன்னலோர பிரயாணத்தை, அதன் வசீகரங்களை எத்தனை முறை மாற்றியிருக்கிறது இந்த பயணப் பிணி..
- மேலும் ஒரு தகவல்..
கொசுறு..
'Spell check'ல், எனது ஆங்கில ஆசிரியர் கூறுவது..
'How many ever times you vomit out..
Vomiting has only one 'T' in it..!!'
====================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக