இரட்டையர்கள்
'குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.'
அதிலும்..
இரட்டை மழலைச் சொல் ஒருங்கே என்பது இன்னும் இனிதுதானே..
அதிலும்..
இரட்டை மழலைச் சொல் ஒருங்கே என்பது இன்னும் இனிதுதானே..
- ஒரே கருத்தரிப்பில் பிறக்கும் இரண்டு குழந்தைகளை Twins - இரட்டையர் என்று வழங்குவர். அதுவே, ஒரே கருத்தரிப்பில் 3 குழந்தைகள் Tripletsஎன்றும், 4 குழந்தைகள் Quadruplets, என்றும், 5 குழந்தைகள் Quintuplets என்றும் வழங்கப்படும்.
- ஒன்றுக்கும் மேலாக ஒரே கர்ப்பத்தில் குழந்தைகள் பிறப்பது அபூர்வமானதல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே.
- இரட்டை குழந்தைகளிலேயே இரண்டு வகைகள் உள்ளன. அவை 1.ஒன்று போலிருக்கும் இரட்டையர் (monozygous) மற்றும் 2. வேறுபாடுள்ள இரட்டையர் (dizygous).
- ஒரு கருமுட்டை மற்றும் விந்தினால் உருவான கரு, இரண்டாக பிரிவது (monozygous) ஒன்றுபோலிருக்கும் இரட்டையர் தோன்றுகிறது.
- இரு கருமுட்டைகள் மற்றும் இரு விந்தணுக்களால் உருவாகும் இரட்டைக்கரு, (dizygous) வேறுபாடுள்ள இரட்டையர் எனப்படும்.
- Dizygous என்ற வேறுபாடுள்ள கர்ப்பத்தில் ஆண், பெண் என இரண்டுபால் சேர்ந்தே பிறக்கலாம்.
- Monozygous என்ற ஒன்றுபோலிருக்கும் கர்ப்பத்தில் ஆண் அல்லது பெண் என்ற ஒரு பாலினம் மட்டுமே பிறக்கும்.
- இரட்டையர்கள் பிறக்கும் சதவிகிதம்,1:50 என்ற நிலையிலிருந்து, 1:30 என தற்போது கூடிவிட்டது.
- தென்மேற்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இரட்டைக் குழந்தைகள் எண்ணிக்கை கூடுதலாகக் காணப்படுகிறது.
- மிக முக்கியமாக, குழந்தையின்மைக்கான கருத்தரிப்பு சிகிச்சைகளே தற்போது அதிகரித்து வரும் இரட்டையர்கள் எண்ணிக்கைக்கு காரணமாகிறது.
- Conjoined twins, என்போர் கருவிலேயே உடல்கள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் ஆவர்.
- சினிமாக்களில் காட்டுவது போலில்லாமல், Conjoined twins மிக அரிய நிகழ்வாகும். ஒட்டிப் பிறந்த இரட்டையரிலேயே மிகவும் புகழ் பெற்றோர் சேங் மற்றும் இங் பங்கர் (Chang and Eng Bunker, 1811–1874) ஆவர். கூடவே, ஒட்டிப்பிறக்கும் இரட்டையர்கள், 1:50,000 -1,00,000 என்ற சதவிகிதத்தில் நிகழும் ஒன்றாகும்.
- இரட்டை கர்ப்பம் என்றால், இரட்டை மகிழ்ச்சி மட்டுமல்ல.. மருத்துவருக்கும், தாய்க்கும் இரட்டை கவனம் தேவைப்படுகின்றது.
- கருவுற்ற தாய்க்கு ஏற்படும் சிக்கல்கள் அதிக வாந்தி, இரத்த சோகை, இரத்த அழுத்தம், கருச்சிதைவு, குறைப்பிரசவம் ஆகியன; பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு, எடை குறைவு, வளர்ச்சி குறைவு, கிருமிதாக்கம், பிறவிக் குறைபாடு போன்றவை தோன்றலாம் என்பது இதில் இருக்கும் இன்னொரு பக்கம்.
- சிக்கல்களை எதிர்நோக்கி வருமுன் காத்து, இரட்டையர்களை ஒருங்கே பிரசவிப்பது தாயும், மகப்பேறு மருத்துவரும் சேர்ந்தே தான்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக