புதன், 6 ஏப்ரல், 2016

Xray என்ற எக்ஸ் கதிர்கள்..



  •          X-ray க்களை கண்டுபிடித்தவர், 1895ல் ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி வில்ஹெம் கான்ராட் ரான்ஜன் ஆவார் (Wilhelm Conrad Rontgen)

  •       ரான்ஜன் Cathode ray ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது BaPt(CN)4 தடவப்பட்ட காகிதத் துண்டு ஒன்று இருளில் ஒளிர்வதைக் கண்டு X ray எனப் பெயரிட்டார்.
  •       ஒரு ஈயத்தட்டை Xray முன்னர் அவர் பிடித்தபோது, கதிர்கள் ஈயத்தட்டின் உருவத்தோடு அவரது விரலையும் படம் பிடித்திருந்தது.

  • .  ஒளியால் ஊடுருவமுடியாத பொருட்களையும் X கதிர் ஊடுருவிச்   செல்லும் என்பதை ரான்ஜன் கண்டுபிடித்து வெளியிட்டார்.
  •     ரான்ஜனின், கண்டுபிடிப்பால், ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்பு முறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.

  •    X rays கண்டுபிடிப்பிற்காக, 1901ஆம் ஆண்டு ரான்ஜனுக்கு நோபல் பரிசு கிடைத்தது.
  •   கண்டறியப்பட்ட நாளில் இருந்து, Xray க்களின் பரிணாம வளர்ச்சி வியக்கத்தக்கது.
  •  எலும்பு முறிவுச் சிகிச்சை மருத்துவத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பது எக்ஸ்ரே ஆகும்.
  •           நுரையீரல் நோய்களான நிமோனியா, காசநோய், புற்றுநோய் மற்றும் இருதய வீக்கம் ஆகியவற்றை கண்டறிய Xray பயன்படுகிறது.

  •              குடல் அடைப்பு, பித்தப்பை மற்றும் சிறுநீரக் கற்கள் ஆகியவையும்  Xray மூலமாக எளிதில் அறியப்படும்.

  •        பற்சிதைவு மற்றும் பற்களின் நோய்கள் கண்டறிய Dental radiography பயன்படுகிறது.

  •           Mammogram, Hysterosalpingogram ஆகியன, மார்பு மற்றும் கர்ப்பக்குழாய்க்கான பிரத்தியேக Xray.


    • Dual energy X-ray absorptiometry Dexa Scan என்ற பரிசோதனை, எலும்பு தேய்மானத்தை துல்லியமாக காட்டும் பரிசோதனையாகும்.
    •           எலும்புகளின் கனிம அடர்த்தி அளவை நிர்ணயித்து, Osteoporosis என்ற எலும்பு வலுவிழப்பு நோயைக் கண்டறிய ‘டெக்சா ஸ்கேன்’ பெரிதும் உதவுகிறது.
    •       CT scan என்ற 3D பரிமாண பரிசோதனை, Xrayக்கள் கொண்டே செயல்படுகிறது.

     
    •         ஆஞ்சியோகிராம்  எனப்படும் இருதய இரத்தக்குழாய் அடைப்பை கண்டறிவதும் பிரத்தியேக எக்ஸ்ரேக்களே.
                   




    •       C-arm எனப்படும் தொடர் Xrayக்கள், அறுவை சிகிச்சைக்கு பெரிதும் உதவுகிறது.

    •          Xray கதிர்கள் பாதிப்பைத் தருமா??
    •          மிகக் குறைந்த அளவில், கதிர்வீச்சின் பாதிப்பு பரிசோதனையின் போது ஏற்படலாம்.



    •          கதிரியக்க அளவு Millisievert என கணக்கிடப்படுகிறது.
    •          ஒரு எக்ஸ்ரே எடுக்கும்போது வெளிப்படும் கதிர்வீச்சுகளின் அளவு 0.15 மில்லிசீவெர்ட்தான்.
    •          தொடர் Xray க்களால், மலட்டுத்தன்மை ஏற்படவும் வாய்ப்புண்டு.



    •          உங்களுக்கு தெரியுமா.. இதுவரை உலகளவில், 5 பில்லியன் மருத்துவ Xray எடுக்கப்பட்டுள்ளன.



    •          ஆக… Xray என்பது மருத்துவத்துறை வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.


    •          ஆனால்… Xrayக்களின் விளைவாக வந்த குடல் புற்றுநோயால்தான், 1923-ம் ஆண்டு ரான்ஜன் தனது 77-வது வயதில் மறைந்தார்!!



    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக