நமது சுவாசம்...
- நாம், ஒரு நிமிடத்தில், 12-20 முறை மூச்சு விடுகிறோம்.
- பிறந்த குழந்தை, நிமிடத்திற்கு 50 முறை வரை, சுவாசிக்கும்.
- பிறந்தவுடன், குழந்தை அழுவது, எதற்காக என்று தெரியுமா?? மூச்சுக் காற்றை உள்ளிழுத்து, நுரையீரல்களை விரிவடைய செய்வதற்கு..
- மூக்கின் வழியாக நாம் உள்ளிழுக்கும் காற்று, மூச்சுக்குழாய் வழியாக இடது, மற்றும் வலது நுரையீரல்களுக்கு செல்கிறது.
- காற்றில் உள்ள O2யைஇரத்தத்தில் சேர்ப்பதும் இரத்தத்தில் உள்ள CO2யை பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.
- மூக்குத்துளைகளுள் சிறிய ரோமங்கள் உள்ளன. இவை வளியில் உள்ள துகள்கள் மூக்கு வழியாக நுரையீரலை அடையாமல் பாதுகாக்கின்றன.
- மிதக்கும் தன்மை உடைய ஒரே உடல் உறுப்பு.. நுரையீரல்.
- சராசரியாக, ஒரு நாளுக்குள் 11,000 லிட்டர் காற்றை மனிதன் சுவாசிக்கிறான்.
- மூச்சு நமது உடலின், 70% கழிவுகளை வெளியேற்றுகிறது.
- மூச்சில் நாம், நாள்தோறும் இழக்கும் நீரின் அளவு... 500ml.
- உடற்பயிற்சிக்குப் பிறகு, சுவாசம் வேகமாவது ஏன்?? அனைத்து உறுப்புகளுக்கும், ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்துவதற்கு.
- மூச்சு என்பது மனித உயிர்களுக்கு இன்றியமையாதது ஆகும்... மூச்சைப் பலப்படுத்த பிராணாயாமம் செய்வோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக