கர்ப்ப காலத்தில் நமது நம்பிக்கைகளும்,
அதன் மருத்துவ உண்மைகளும்..!!
- குழந்தைக்கு முடி அதிகமாக இருந்தால், அம்மாவுக்கு வாந்தி அதிகமாக இருக்கும்?
- வாந்தி நமது உடலின் hCG, என்ற கர்ப்ப கால ஹார்மோன் சார்ந்தது.
- பப்பாளி மற்றும் பைனாப்பிள் உட்கொண்டால், கருச்சிதைவு நேரிடலாம்?
- இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்-ஏ நிறைந்த இப்பழங்களால் கெடுதல் இல்லை!!
- மசக்கையின் போது, மண், திருநீறு ஆகியவற்றை உண்ணத் தோன்றும்?
- PICA என்ற ஊட்டச்சத்து குறைபாடு தான், இவற்றை உண்ணத் தூண்டுகிறது.
- முதல் மூன்று மாதங்கள் ஓய்வு மிகவும் அவசியம்?
- மருத்துவ காரணங்கள் இன்றி, படுக்கை ஓய்வு பயனளிக்காது.
- கர்ப்ப காலத்தில், உணவை இரண்டு மடங்கு அதிகம் உண்ண வேண்டும்?
- 300-400 கலோரிகள் அதிகமாக உட்கொண்டால் போதுமானது.
- கர்ப்பகாலத்தில், இரும்பு சத்து மாத்திரைகள், குழந்தையின் நிறத்தை குறைத்துவிடும்?
- மருந்தல்ல.. மரபணு சார்ந்தது, குழந்தையின் நிறம்.
- கர்ப்ப காலத்தில் முடி நன்றாக வளரும்..
- நமது உடலில், முடியின் வளர்ச்சி, மாதத்திற்கு 1.25 cm என்ற அளவில் இருக்கும். கர்ப்ப காலத்தில் மாறாது.
- அறையில் அழகான குழந்தைகள் படம் இருந்தால், பிறக்கும் குழந்தை அழகாகப் பிறக்கும்?
- மனதை மகிழ்ச்சியாக வைத்திட, இவை பெரிதும் உதவும்.
- காலில் வீக்கம் என்றால் BP அதிகம் என்று பொருள்?
- 7வது மாதத்திற்கு பிறகு கால் வீக்கம், சிலருக்கு இயல்பான ஒன்று. BP பரிசோதனை செய்வது அவசியம்.
- வயிற்றில் தோன்றும் வரிகள், என்ன குழந்தை என்று கூறும்?
- மெலனின் அதிகமாக சுரப்பதால் முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் கருமை தோன்றும்.
- உடற்பயிற்சி மற்றும் பழுதூக்குதல் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும்?
- உடல் ஒத்துழைக்கும் அனைத்து பயிற்சிகளும் கர்ப்ப காலத்தில் ஏற்றவையே.
- தண்ணீர் குடிப்பதால், பனிக்குட நீர் அதிகரிக்கும்?
- நீரை தேவையான அளவில் குடிப்பது தாயின் உடல்நிலைக்கு ஏற்றது. பனிக்குட நீரின் அளவை மாற்றாது.
- கர்ப்பத்தில் அதிக எடை கூடினால், இரட்டைக் குழந்தையாக இருக்கலாம்?
- 10-12 கிலோவரை எடை கூடுவது கர்ப்பத்தில் இயற்கையே.
- குங்குமப்பூ பாலில் சேர்ப்பது அவசியமான ஒன்று?
- குங்குமப்பூ சாப்பிட்டா, கடைக்காரருக்கு நல்லது..!
ஆக...
அவநம்பிக்கைகளைத் தவிர்த்து..
அவ(ள்) நம்பிக்கை பெறுவதுதான் கர்ப்பகாலத்தில் மிகவும் முக்கியமானதாகும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக