வெள்ளி, 29 ஏப்ரல், 2016

ஊசி என்ற Injections..


Shot என்றும்..
Jab என்றும், 
ஆங்கில பேச்சு மொழியில் வழங்கப்படும் 
ஊசியைப்பற்றி...

  • உங்களுக்கு தெரியுமா..??
  • வருடத்தில், 16 பில்லியன் ஊசிகள், வளரும் நாடுகளில் போடப்படுகின்றன.

  • 95% ஊசிகள், சிகிச்சைக்கும், 5% ஊசிகள் தடுப்பு முறையாகவும் பயன்படுத்தப்படுகின்றன.



  • ஊசிகளின் வரலாறு..
  • பாம்புக்கடி மற்றும் விஷ அம்புகள் தான் மருத்துவத்தில் ஊசிகள் தோன்ற காரணமாக இருந்தனவாம்..
  • கிறிஸ்டோபர் ரென், 1650ல் முதன்முதலாக, நாயின் நரம்பில் ஓப்பியம் ஊசியை போட முயற்சித்தார்.
  • 1660ல், மனிதர்களுக்கு ஊசியை முயற்சித்தது.. மேஜர் மற்றும் எல்ஹோல்ட்ஸ்..
  • 1800களில், தோலை சிராய்த்து, மருந்தினை காயத்தில் தடவும் முறை வழக்கில் இருந்ததாம்..!!
  • சிரிஞ்சுகளைக் கண்டுபிடித்து, வன்முறையிலிருந்து காப்பாற்றியது.. லியானின் சார்லஸ்-கேப்ரியல் மற்றும் வுட்!!
  • Luer என்ற கண்ணாடி ஊசிகள் மிகப் பிரபலமானவை..
  • Autoclaving என்ற உயர் அழுத்த வெப்பமுறையை லூயிஸ் பாஸ்டர் கண்டுபிடித்த பின், ஊசிகள் புதிய திருப்புமுனையை அடைந்தன.
  • சார்லஸ் ஹண்டர், 1858ல் முதன்முதலாக, Hypodermic என்ற தோல் ஊசியை அறிமுகப்படுத்தினார்.
  • ஊசிகளின் அளவு Gauge என்ற சுற்றளவில் குறிக்கப்படும்.
  • 16G முதல் 26G வரை உள்ள ஊசிகளை நாம் தினமும் பயன்படுத்துகிறோம்.
  • காலின் முர்டாக் என்ற நியூசிலாந்து மருந்தாளுநர், 1956ல் முழுமையான டிஸ்போசபில் ஊசியை கண்டுபிடித்தவர்.
  • ஊசிகள் சாதாரணமாக போடப்படுவது... தசை, நரம்பு, தோலுக்கடியில், மூட்டு, மஜ்ஜி என பல்வேறு இடங்கள்..
  • Depot என்ற ஊசிமுறை, தினமும் ஊசி போடும் தேவையைக் குறைக்கிறது.
  • Insulin pen, என்ற பேனாக்கள் சர்க்கரை நோயை பெரிதும் கட்டுப்பாடு செய்கிறது.
  • உலகில், 20% மக்களுக்கு ஊசிகள் என்றால் பயம்..
  • இது Trypanophobia என்றழைக்கப்படுகிறது.
  • எது எப்படியாயினும்...

********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக