சனி, 16 ஏப்ரல், 2016

பசி..

  • ”அடுத்து என்ன செய்வான் என்று யூகிக்க முடியாத பயங்கரமான மனிதன் யார்.?” என்ற கேள்விக்கு... ”தன் குழந்தை பசியில் அழுவதைப் பார்த்திருக்கும் தந்தை” என்ற பதில் சொல்லும் பசியின் கொடுமை பற்றி.
  • உடலுக்கு உணவு தேவைப்படுகையில் பசி (hungry) என்ற உணர்வு ஏற்படுகிறது.
  • வயிற்றில் பசி குறித்த உணர்வு ஏற்படுவது மறைமுகமாகப் பசி வேட்கை (Hunger pangs) என்பதைக் குறிக்கும்.
  • ஆரோக்கியமான ஒருவர், சில வாரங்கள் வரை, உணவு எடுத்துக் கொள்ளாமலேயே உயிர்வாழ முடியுமாம்.
  • பசியின் அளவு ஆனது இரத்தத்தில் குறைவாக உள்ள சர்க்கரையால் அதிகரிக்கும். 
  • லெப்டின், க்ரேலின்(Leptin, Grelin) போன்ற இயக்குநீர்களின் சுரப்பிகள், உயிரினத்தை உணவு உட்கொள்ளுமாறு செய்கிறது.
  • லெப்டின் அதிக அளவு சுரந்தால் பசியைக் குறைத்து விடும். உணவு உண்ணாமல் இருந்த சில நேரங்களுக்குப் பிறகு லெப்டினின் அளவு குறைகிறது.
  • லெப்டினின் குறைவான அளவு இரண்டாம் நிலை ஹார்மோனான க்ரெலினைச் சுரக்கச் செய்கிறது. இது பசியைத் தூண்டுகிறது. 
  • மானிட வாழ்வின் மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான்.!! 
  • பசி வந்தால் பத்தும் பறக்கும்..?? எது??

  • பசி வர... 

  1. மானம், 
  2. குலம், 
  3. கல்வி, 
  4. வன்மை, 
  5. அறிவுடமை, 
  6. தானம், 
  7. தவம், 
  8. உயற்சி, 
  9. தாளாண்மை, 
  10. காமம் -என்கிற பத்தும் பறந்து போகுமென்கிறார், ஔவையார்.

  • வயிற்றில் ஏற்படும் பசி என்கின்ற துன்பத்தை உணர்வது அறிவுதானே! அதை, மூளையின், ஹைப்போதலாமஸ் இயக்குகின்றது..
  • உலகில் 842 மில்லியன் பேர் பசியால் வாடுகிறார்கள். அதில் கால்வாசி அதாவது 210 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளார்கள் என்பதுதான் இன்னும் கொடுமையான செய்தி. 
  • நம் இந்தியாதான் உணவு உற்பத்தியில், உலகிலேயே இரண்டாம் இடம். ஆனால் பசி பட்டினியில் முதல் இடத்திற்கு வருவதற்கு வெகுதூரம் இல்லை!
  • இதற்கு நாமும் ஒரு காரணியே,,,
  • நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாக இருக்கக்கூடாது.
  • காலை உணவை மறக்காமல் சாப்பிட்டு வந்தால், பசியின்மை வராது. சாப்பிடாமலே இருப்பதுதான், உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியமான காரணமாம்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு 80% டயட் மற்றும் 20% உடற்பயிற்சி முக்கியமானது. சரியான அளவில் உணவு உண்டு, உடற்பயிற்சி செய்தால் பசியின்மையை தடுக்கலாம்.
  • குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் பசிக்காது. செரிமானம் சரியாக நடக்காமல் இருந்தால் கூட பசிக்காது.
  • இளைஞர்களாக இருந்தால் மன அழுத்தம், மனத்தளர்ச்சி, மன வருத்தம் ஆகிய காரணங்களுக்காக பசி எடுக்காது. வயிற்றில் அல்சர் இருந்தாலும் பசியே இருக்காது.
  • மது அருந்துபவர்களுக்கும் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், அதிகமாக மருந்து உட்கொள்பவர்களுக்கும் பசியின்மை கண்டிப்பாக வரும். 
  • உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா மேற்கொள்பவர்களுக்கு பசி தானாக வரும். சிக்கல் இருக்காது.
  • கீரை மற்றும் பழங்கள் சாப்பிட வேண்டும்! அசைவ உணவுகளை மதிய உணவில் மட்டும் சேர்த்துக் கொள்ளவும்! இரவில் சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லக் கூடாது!
  • பழமொழியில் உணவுகள்
  • காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து...நாளை நமதே..!!

  • கடைசியாய் நமது சிந்தனைக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக