வெள்ளி, 8 ஏப்ரல், 2016

பருவத்தில் வருவது... பரு..!!

பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?

  • Acne.. பெயர்க் காரணம்.. கிரேக்க மருத்துவர், ஏட்டீயஸ், பருக்களை Acme (பருவத்தின் நிறைவு நிலை) என்றார். அது மருவி... Acne ஆனது.
  • கிளியோபாட்ரா காலத்திலேயே, கந்தகம் என்ற Sulphur, பருக்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
  • நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. 



  • எண்ணெய் சுரப்பிகள், ஆண்ட்ரோஜன் தூண்டுதலால், ‘சீபம்’(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. சுரக்கும் எண்ணெய், முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் வைத்துக்கொள்கிறது. 
  • இந்த எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி அடைக்கும் போது, தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். அடைப்பினால், உள்தங்கும், சீபம் பருவாக மாறுகிறது. (Acne vulgaris).

  • பருக்கள், (Blackhead) அல்லது (Whitehead) எனப்படும், comedones என்ற குருணைகள் உட்கொண்டது.
  • சில சமயங்களில் தோலில் இயற்கையாக இருக்கிற Propionibacterium acnes என்ற பாக்டீரியா பருக்களை சீழ்ப்பிடிக்கவும் வைக்கும்

  • பொதுவாக 11 வயதில் முகப்பரு தொடங்கும். 80% த்தினருக்கு, 30 வயதுவரை பருக்கள் நீடிக்கும்.
  • பருக்கள், தோன்றுவதற்கும், மரபணுக்கள் தான், 80% காரணமாக உள்ளது என்கிறது ஆய்வு.
  • பெண்களுக்கு மாதவிடாயின் போது, ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும்.
  • சினைப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்களுக்கு, Androgen சுரப்பியினால், முகப்பருக்கள் வர வாய்ப்பு அதிகம்.


  • பருவற்ற..
  • மாசு மருவற்ற..
  • முகத்திற்கு..
  • சில ஆலோசனைகள்..
  1. தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் பெரிதாவது தடுக்கப்படும்.
  3. நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளவது அவசியம்.
  4. தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
  5. மேலும், சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை..
  6. முகத்தில், அழகு களிம்புகள் அல்லது பவுடரை தவிர்ப்பது நலம்.
  • Pustular மற்றும் Cystic acne என்ற தழும்புகளைத் தோற்றுவிக்கும் பருக்களுக்கு, மருத்துவ ஆலோசனை தேவை.
  • Benzoyl peroxide, Retinoids, மற்றும் ஆண்டிபயாடிக்குகள், மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப உபயோகப்படுத்த வேண்டும்.
  • தினமும் உடற்பயிற்சியும் அவசியம் தேவை. அச்சமயம் வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கிறது.
  • சந்தனம், தேன், மஞ்சள், பன்னீர், வேப்பிலை என்று பல இயற்கை மருத்துவமும் கைகொடுப்பது பருக்களில் தான்..


  • ஆயினும், பல கவிதைகளையும், கவிஞர்களையும் உருவாக்கிய பெருமையும் பருக்களுக்கே..




00
0000
000000

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக