வெள்ளி, 8 ஏப்ரல், 2016

வெல்வோம் நீரிழிவை..!




  • 1950ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும், ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது.
  • நம் உடலில், இன்சுலின் சுரக்காதது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது தான் நீரிழிவு நோய்க்கு காரணம்.
  • நம் உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது.
  • திசுக்களில் குளுக்கோஸை செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் சுரப்பி தேவைப்படுகிறது.
  • இன்சுலின் உற்பத்தி குறையும்போது, உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெற முடிவதில்லை.
  • இரத்தத்தில் அதிகமாகும் சர்க்கரை, இருதயம், சிறுநீரகங்கள், கண்கள், நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது.
  • நீரிழிவு நோய் மூன்று வகைப்படும்.


  1. முதலாம் வகை நீரிழிவு (Type 1).
  2. இரண்டாம் வகை நீரிழிவு (Type 2).
  3. கர்ப்பகால நீரிழிவு (GDM).
  • முதலாவதுவகை நீரிழிவு (Type I Diabetes) குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது.
  • இரண்டாவது வகை நீரிழிவு (Type II ) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு சுரக்காததாலோ/சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுவது.
  • இரண்டாம் வகை நீரிழிவு, கிட்டத்தட்ட 90 % நோயாளிகளில் காணப்படுகிறது.

  • மூன்றாவது வகை, கர்ப்பக் கால நீரிழிவு 2-4 % பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது.

  • Beat Diabetes.. #2016.
  • நீரிழிவை வெல்வோம்..!! ஒரு சிறிய கண்ணோட்டம்.!!!


  1. உலகளவில், 350 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்களே.
  2. 2012 ஆம் ஆண்டில், உலகளவில் 1.5 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயால் இறந்தனர்.
  3. இந்தியாவில் 61.3 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
  4. உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக சர்க்கரை நோயால் அவதிப்படுகிறார்கள்!
  5. சரியான சத்துணவு, சீரான உடற்பயிற்சிகள் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியும்.
  6. தீவிர வாழும் முறை மாற்றங்கள் மூலம் நீரிழிவு நோயின் பக்கவிளைவுகளை குறைக்கலாம்.
  • அறிகுறிகள்..ஒரு screen shot..
  • நீரிழிவின் பக்கவிளைவுகள்..


  • கட்டுப்பாட்டு இலக்கு.. HbA1C <6.5% . Fasting sugar (உண்ணாநிலை) <105mg%.
    •  ஆக... சரியான நேரத்தில், சரியான சிகிச்சையின் மூலம், நீரிழிவை வெல்ல முடியும்.



    • நீரிழிவை வெல்ல.. "ஆரம்பத்திலேயே கண்டறிவது.. ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவது.. ஆரோக்கியமாக வாழ்வது..!" என, இன்று உறுதி கொள்வோம்..


    • Halt the rise..
    • Be active..
    • Eat healthy..
    • Follow medical advice..
    • If in doubt, check!!

      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக