சனி, 16 ஏப்ரல், 2016

ருசி என்ற சுவை...


  • பசி ருசியறியாது.. ஆனால், ருசி.. உண்ட திருப்தியை, உடலுக்கும், மனதிற்கும் தரும்.
  • 'பசித்து புசி' என ஔவையாரும் "அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து" என வள்ளுவரும் கூறினாலும் ருசி நம்மோடு ஒன்றிவிட்டது.
  • சுவை ஒரு வகை நேரடி வேதியல் உணர்வாகும். இது ஐம்புலன்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது. 
  • தமிழர் முறைப்படி ஆறு வகை சுவை என்பர். அவை இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பனவாகும். 
  • மேற்கத்தியர் அடிப்படை சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு மட்டுமேயாம்..
  • தினம் அறுசுவையையும், அனுபவிக்காத உடல் கெடும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
  • சுவை எப்போதும் மணத்தோடு கைகோர்த்து தான் வாழுமாம். 80% சதவிகித சுவைக்கு, மணம்தான் காரணமாகிறது. #கைமணம்.
  • உமிழ்நீரில் கரைந்த உணவுதான், சுவையைக் காட்டும். இல்லையெனில் அனைத்து உணவும் சுவையற்றதாகவே இருக்கும்.
  • சுவை உணரிகள் என்ற Taste buds, நமக்கு சுவையை உணர்த்துகின்றன. உமிழ்நீரையும் சுரக்கச் செய்கிறது. 
  • நமக்கு, 8000-10,000 சுவை உணரிகள் உள்ளன. அவை நாக்கில் பெருமளவும், மேலன்னம், கன்னத்தின் உட்பகுதியிலும் உள்ளன. 
  • ஒவ்வொரு சுவையுணரியும், தன்னுள்ளே பல சுவையணுக்களையும், அதை மூளைக்கு உணர்த்தும் நரம்பையும் கொண்டது.
  • சுவை உணரிகள், வயதாக, வயதாக, எண்ணிக்கையில் மொத்தம் 500-700 எனக் குறைந்துவிடுகின்றது. 
  • இனிப்பு...மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை. மனதிற்கும், உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரும் சுவையிது.
  • காரம்.. பசியுணர்வைத் தோற்றுவிக்கும் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், இரத்தச் சுத்திகரிப்பும், செய்கின்றது. 
  • உவர்ப்பு தவிர்க்க இயலாத சுவை அளவாக இருந்தால் விரும்பப்படுகிறது. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது.
  • புளிப்பு. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்படுத்தும். இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது
  • கசப்பு... அதிகம் வெறுக்கப்படும் சுவையிது. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. இது, சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியை தருமாம்.
  • துவர்ப்பு அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்தும். இரத்தப்போக்கினை, வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.
  • பசித்துப் புசி’, ‘கூழானாலும் குளித்துக் குடி’, ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’.. என்பன ஆத்திச்சூடி வாழ்க்கைப் பழமொழிகள்.
*****************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக