பூப்படைவதிலிருந்து, மூப்படைவது வரை,
பெண்களை பாதிக்கும்
PCOS என்ற நீர்க்கட்டிகள் பற்றி..
- மாதவிடாய் பெண் பருவமடையும் போது ஆரம்பிக்கின்றது.
- ஒரு பெண்ணின் இனப்பெருக்க வாழ்க்கை (reproductive age) முழுதும் மாத சுழற்சிகள் தொடர்கிறது..
- மாதவிடாய் சுழற்சி ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. LH மற்றும் FSH ஹார்மோன்கள், பிட்யூட்டரி சுரப்பி மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
- FSH மற்றும் LH, சினைப்பைகளில், ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் உற்பத்தியை தூண்டுகிறது.
- ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரான் தான் கருப்பையை கருத்தரித்தலுக்கு ஊக்குவிக்கின்றன.
- பிசிஓஸ்ல், சினை முட்டைகள் முதிர்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரப்பதில்லை. வளர்ச்சி அடையாத முட்டைகள் நீர் கட்டிகளாகின்றன.
- பெண்ணின் சினைப்பைகளில் ஏற்படும் திரவக்கட்டிகள் தான் Poly Cystic Ovarian Syndrome (PCOS) எனப்படுகிறது.
- PCOS இல், முட்டைகள் முதிர்ச்சி அடையாததால் ஒவியுலேசன் (அண்டவிடுப்பு) நடப்பதில்லை. இதில் மாத சுழற்சி நின்றுவிடலாம்.
- மேலும், நீர்க் கட்டிகள் ஆண் ஹார்மோன்களை ( androgens) உற்பத்தி செய்யும்.
- பிசிஓஸ் இன், அறிகுறிகள் உடல் எடை அதிகரிப்பு, முகப்பரு, வயிற்றுப்பகுதியில் கொழுப்பு, அதிக ரோம வளர்ச்சி ஆகியன.
- கட்டிகளால், இன்சுலின் செயல்திறன் பாதிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிலக்கு, ரத்தத்தில் கொழுப்பு ஆகியனவும் ஏற்படும்.
- இன்சுலின் செயல்திறன் பாதிக்கப்படுவதே, உடல் பருமனுக்கு, முக்கிய காரணமாக உள்ளது.
- சோர்வு, மனப்பதற்றம், தூக்கமின்மை, ரத்த அழுத்தம், பின்னாட்களில் மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியன PCOSயின் விளைவுகளாகும்.
- PCOS கண்டறிய... அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில், சினைப்பைகளில் 12-15க்கும் மேற்பட்ட நீர்க்கட்டிகள் இருக்கும்.
- இரத்தத்தில் FSH, LH மூலம் PCOS பிரச்சினையை அறிய முடியும். மாதவிடாயின் 2 வது நாளில் பரிசோதனை செய்ய வேண்டும்.
- LH : FSH விகிதம், பெண்களுக்கு, 1:2 இருக்க வேண்டும். ஆனால் PCOS பெண்களுக்கு இந்த விகிதம், 2:1 அல்லது 3:1 விகிதத்தில் இருக்கும்.
- PCOS, சிகிச்சை என்பது வயது மற்றும் தேவை சார்ந்தது.
- உணவு, உடல் உழைப்பின் அளவைச் சீராக்குவதன் மூலம் PCOS பிரச்சனையில் இருந்து தப்பலாம்.
- உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை, (BMI) பராமரிப்பதால் இன்சுலின் மற்றும் ஆன்ட்ரோஜென் அதிகமாக சுரப்பதை கட்டுப்படுத்தலாம்.
- பரிந்துரை செய்யப்படும் மருந்துகள், கருத்தரிப்பு அல்லது மாதவிடாய் சுழற்சியை சரிசெய்ய உதவும்.
- தேவைப்படும்போது, லேப்ரோஸ்கோபி மூலம் PCOS drilling செய்வது பயனளிக்கும்.
- வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதின் மூலமாக, PCOS நிலையையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
************
We are urgently in need of kidney donors with the sum of $500,000.00 USD (3 crore) and Also In Foreign currency. Apply Now!,For more info Email: healthc976@gmail.com , Call or whatsapp +91 9945317569
பதிலளிநீக்கு