வெள்ளி, 29 ஏப்ரல், 2016

மாண்புடன் மனநலம்..!

  • மனநலமும் உடல்நலமும் ஒன்றோடொன்று தொடர்புடையது. மனநலம் நன்றாக இருந்தால் மட்டுமே உடல்நலமும் நன்றாக இருக்க முடியும்.
  • ஒருவர் தனக்கு வரக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களையும் அறிந்து, தனக்கும், பிறருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு முடிவெடுப்பதே மனநலமாகும்.
  • நமது அன்றாட நடைமுறை வாழ்க்கையில், மனஅழுத்தம் (tension/ stress) என்பது அதிகமாக காணப்படுகிறது.

  • மனநலப்பாதிப்பு ஒருவருக்கு வயது வித்தியாசமின்றி, எந்த சந்தர்ப்பத்திலும், எந்நிலையிலும் ஏற்படலாம்.

  • மனச்சோர்வு, மன அழுத்தம், முன்கோபம், பதற்றம், உறக்கமின்மை, பயம், தெளிவற்ற எண்ணம், தற்கொலை எண்ணம்  ஆகியன மனநோயின் தாக்கங்களே.
  • மருத்துவ ஆய்வுகளின் படி இன்று நால்வரில் ஒருவருக்கு மன நலம் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
  • மன அழுத்தம் உள்ளவர்கள், உடல் மற்றும் மன பாதிப்புக்களுக்கு ஆட்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
  • உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு,  வயிற்றுப்புண், தசை விரைப்பு, தாடைப் புண்கள், தலைவலி ஆகிய உடல் உபாதைகள் மன அழுத்தத்தினால் ஏற்படலாம்..
  • உற்சாகமின்மை, பணியில் ஈடுபாடின்மை, ஏமாற்றம், குற்ற உணர்வு, சுயவிமர்சனம், பின்னடைந்த மனநிலை ஆகியன மன அழுத்தத்தின் அறிகுறிகளாகும்..
  • மன அழுத்தத்தின் அறிகுறிகள் தோன்றும்போது, மனநல மருத்துவரிடம் தகுந்த மருந்து மற்றும் மனநல ஆலோசனைகளைப் பெறுவது அவசியம்.

  • எப்படி இருதய பிரச்சனைகளுக்கு இதய நிபுணரை சந்திக்கிறோமோ, அதே போல் மனதை பராமரிக்க மனநல பணியாளர்களை சந்திப்பதில் தவறொன்றும் இல்லை..
  • உளவியல் ஆலோசனை (Counseling) என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது.
  • ஒவ்வொரு மனிதனும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வலிமை மிக்கவனே. வலிமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோளாகும்.
  • பொதுவாக, மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது.
  • சரியான மனநல ஆலோசனை மற்றும் சிகிக்சையில் 70-80% மனநோய்கள் முற்றிலுமாக குணப்படுத்த முடியுமாம்..


  • சில கசப்பான உண்மைகள்.. மனம் சார்ந்த பாதிப்புகள் அனைத்தும், பெரும்பாலும்,14 வயதிற்கு முன்பாகவே தொடங்கிவிடுகின்றன..
  • ஆண்டுதோறும், சுமார் 8 மில்லியன் மக்கள், தற்கொலை செய்து கொள்கின்றனர்.
  • இதில், பெருமளவு 15-29 வயதிற்குட்பட்டவர்கள் என்பதுதான் வேதனைக்குரியது.
  • தற்கொலை தான், மரணத்திற்கு 3வது காரணியாக அமைத்துள்ளது.
  • மனநலம் பாதித்தவருக்கு, மிகவும் தேவை அவரை புரிந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பனே என்கிறார் சிக்மண்ட் ஃபிராய்ட்.



மனநலமும் உடல் நலத்தை போல முக்கியமானதே!
எனவே..
மாண்புடன் மனநலம் காப்போம் (Dignity in Mental Health).


*********


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக