சனி, 30 ஏப்ரல், 2016

Attention Deficit Hyperactivity Disorder (ADHD)



  • குழந்தை சொன்ன பேச்சையே கேட்பதில்லை... ஓர் இடத்தில் நிற்பதில்லை... இது பல அம்மாக்களின் புலம்பலாக இருக்கும்.

  • குழந்தைகள் தொடர்ந்து படபடப்பாகவும், உடனுக்குடன் யோசிக்காமல், செய்வதும், மறதியோடும் இருந்தால் அது ADHD என்ற மனநலக் குறைபாடாக இருக்கலாம்.
  • ADHD என்றதும், உங்களுக்கு, பசங்க 2வின் கவின் மற்றும் நயனா ஞாபகத்துக்கு வர்றாங்களா..?


  • ADHDயின் முக்கிய அறிகுறிகள்..
  1. -கவனமின்மை (Inattention)
  2. -அதீத இயக்கம் (Hyperactivity)
  3. உணர்ச்சி வேக செயல்பாடுகள் (Impulsiveness)..
  • எளதில் கவனச் சிதறல், பகல் கனவு, சலிப்பு, தொடர்ந்து சத்தமாக பேசுவது, பொறுமையின்மை ஆகியனவும் அறிகுறிகளாகும்.
  • ADHD, பொதுவாக 6-12 வயதில் தோன்றுகிறது. பள்ளியில் கவனமின்மை மற்றும் மறதியே, பல சமயங்களில் அறிகுறிகளாக உள்ளன.
  • உலகளவில் ஏறத்தாழ, 39 மில்லியன் குழந்தைகளுக்கு, ADHD இருப்பதாக WHO கூறுகிறது.
  • பெண் குழந்தைகளைக் காட்டிலும், ஆண் குழந்தைகளை, ADHD 3 மடங்கு அதிகம் பாதிக்கிறது.
  • தங்கள் வயதை ஒத்த குழந்தைகள் போலில்லாமல், தொடர்ந்து கட்டுப்பாடின்றி செயல்பட்டால், அது ஏ.டி.ஹெச்.டி யாக இருக்கலாம்.
  • ADHDயின் வகைகள்...
  1. அதீத இயக்கம் மட்டும் (Hyperactivity ADHD)
  2. கவனமின்மை மட்டும் (Inattention ADD) 
  3. இரண்டும் கலந்த நிலை.

  • எதிர்த்துப் பேசுதல், மற்றும் கீழ்படியாமை, 60% குழந்தைகளிடையே காணப்படுகின்றது.

  • 5% குழந்தைகளுக்கு, பொய் பேசுதல், விதிமுறைகளை மீறுதல், களவு போன்றவை காணப்படலாம்.
  • மன அழுத்தம் அல்லது படபடப்பு (depression/anxiety) 35% குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
  • எவ்வளவு முயற்சித்தாலும், அவர்களால், ஓரிடத்தில் உட்காரவோ, அமைதியாக இருக்கவோ, கவனம் செலுத்தவோ முடியாது என்பதே நிஜம்.
  • சிறுவயதில், தோன்றும் ADHD, 30-50% பேருக்கு, வளர்ந்த பிறகும் தொடர்கிறது.
  • சில குழந்தைகளுக்கு,  டிஸ்லெக்சியா என்ற எழுத்துக் கூட்டி, வாசிக்க முடியாத நிலை   இருக்கும்.
  • ADHDக்கு, 75% மரபியல் காரணமாகவும், சமூகம் அல்லது சுற்றுச்சூழல் 25% காரணமாகவும் கூறப்படுகிறது.
  • மூளையின் நரம்பூக்கிகளான, Dopamine மற்றும் Nor-epinephrine அளவுகளில் மாற்றம் ஏற்படுவதால் ADHD ஏற்படலாம் என்கிறது ஆய்வு.
  • மனவியல் ஆலோசனை மற்றும் தகுந்த ஊக்க மருந்து தான் முதன்நிலை சிகிச்சை என்கிறது அமெரிக்காவின் சைக்கியாட்ரிக் சங்கம்.
  • குழந்தைகள் மனநல மருத்துவர், பெற்றோர், மன உளவியலாளர், பேச்சுப் பயிற்சியளிப்போர், ஆசிரியர்கள், என் அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாத ஒன்று.
  • சிகிச்சை முறையில், Cognitive Behavior Therapy, மற்றும் Family Therapy என்ற குடும்ப மனநல ஆலோசனை பெரிதும் உதவுகிறது.
  • கல்வி, நடத்தை சிகிச்சை, குடும்பம்/பள்ளியின் ஆதரவு, உடற்பயிற்சி, தகுந்த ஊட்டச்சத்து என அனைத்தும் சேர்ந்தது தான் முழுமையான சிகிச்சையாகும்.
  • முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், தொடர் சிகிச்சை, மனவியல் ஆலோசனை, தகுந்த பள்ளிக்கல்வி இவர்களுக்கு துணைநிற்கும்.
  • ஆக..
  • கற்றல் குறைபாடுகள், அதீத சுறுசுறுப்பு குறைகள் அல்ல.. பெற்றோர்கள், அவற்றை கையாளும் முறைகளை அறிந்தால் போதுமானது..
  • குழந்தைகளின் உலகை, அவர்களின் எண்ணங்களை, உணர்வுகளை, கனவுகளை உணர்வதும் மிகவும் அவசியமான ஒன்றுதானே..


***************

1 கருத்து:

  1. மிக மிக எளிய முறையில் எவரும் புரிந்திடும் வகையில் ADHD பற்றிய விளக்கம், தன்மைகள், சிகிச்சை, கையாளும்முறை பற்றிய தகவல்கள் உள்ளபடியே சிறப்பு.. Thanks Dr. Indeed it's a great information in knowing ADHD ✍🏼🙏

    பதிலளிநீக்கு