சனி, 16 ஏப்ரல், 2016

ஒலியும் செவியும்...

  • மனிதரை இணைக்கும் பாலமாக விளங்குவது ஒலியும் ஒளியும்.
  • அதில் இப்போது ஒலி பற்றிப் பார்ப்போம்.
  • ஒலி (Sound) என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும்.
  • செவி வழியே வரும் ஒலியானது மிக மென்மையான செவிப்பறையை அடைந்து அதிர்வேற்படுத்துகிறது.
  • நடுச்செவியில் சங்கிலி போன்ற அமைந்துள்ள மூன்று எலும்புகள் காற்றலை அதிர்ச்சிகளை உட்செவிக்கு எடுத்துச் செல்கின்றன.
  • உட்செவியின், காது பாய்மத்தில் (நீர்)அசைவு நரம்புகள் மூலம் ஒலியை மூளைக்கு அனுப்பி உணரச் செய்கிறது.
  • நாம் தூங்கும்போதும், காதுகளின் திறன் விழித்தே இருக்கும்.
  • காதுகள், நமக்கு ஒலிகளை கேட்பதற்கு மட்டுமல்ல.. Equilibrium எனப்படும், உடலின் சமநிலைக்கும், காரணமாக உள்ளது.
  • கருவறையிலேயே, நான்காம் மாதம் முதலே, குழந்தைக்கு, செவித்திறன் தொடங்கிவிடுகின்றது
  • பிரகலாதன் கருவறையில் இருக்கும்போதே, முனிவரால் தன் தாயாருக்குப் போதித்த விஷயங்களைக் கேட்டது கதை மட்டுமல்ல..! 
  • அர்ச்சுனனுக்கு மகாபாரதப் போரில், சக்ரவியூகம் பற்றி எடுத்துச் சொன்னபோது, வயிற்றில் வளரும் அபிமன்பு கேட்டதில் விஞ்ஞானமும் உள்ளது. 
  • 6ஆம் மாதக் கருவில்,குழந்தை கண்திறந்து பார்க்கிறது. வெளியில் தாயின் குரல் உட்பட வெறும் ஓசையை (Voice and Noise) உணரமுடிகிறது என்கிறது ஆய்வு. 
  • உலகில், ஏறத்தாழ, 36 கோடி மக்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதாம். இதில் குழந்தைகள் மட்டுமே,3.6 கோடி.!! T
  • காதில் சீழ்வடிதல், (CSOM), வளரும் நாடுகளில், செவிட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாகும்
  • வளர்ந்த நாடுகளில், சத்தம், இரைச்சலும் முக்கிய காரணங்களாகின்றன.
  • 65 வயதிற்கு மேல், மூன்றில் ஒருவருக்கு காதின் திறன் குறைந்து காணப்படுகிறது. 
  • காதில் இருக்கும் மெழுகு போன்ற பொருளை (wax) எடுக்கக்கூடாது. அது செவிப்பாதுகாப்பிற்கு இன்றியமையாதது.
  • அழுக்கை அகற்ற காது குடைதல் என்ற பெயரால் குச்சியைக் கொண்டு காது குடையாமல் அதற்கென்று உள்ள பஞ்சுக் குச்சிகளையே பயன்படுத்த வேண்டும்.
  • ஒலிபெருக்கிகளின் அருகே அமர்ந்தால், 8 நிமிடங்களில், செவித்திறன் குறைத்துவிடும்.
  • செவித்திறனற்ற பெற்றோருக்கு பிறக்கும், 90%, குழந்தைகளுக்கு செவித்திறன் குறைவதில்லை.
  • இந்திய சைகை மொழி, இந்தியா மற்றும், பாகிஸ்தானில் பயன்படுத்தப் படுகிறது.
  • இந்தியாவில், Hearing aids ,எனப்படும் காதொலி சாதனங்கள், 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது. 
  • Save your Ears today.. For a.. Better Music tomorrow!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக