இரத்த தளிர்கள்!!
- சராசரி எடை கொண்ட மனிதனின் உடலில் சுமார் 5 L அளவு ரத்தம் இருக்கும். உடலின் எடையில், ரத்தத்தின் பங்கு 7-8%..
- William Harvey என்ற ஆங்கிலேய மருத்துவர், ரத்த ஓட்டத்தை, 1628ஆம் ஆண்டு, முதன்முதலாக கண்டறிந்தார்.
- இரத்தமானது, 55% திரவப் பகுதியான பிளாஸ்மா, மற்றும் 45% ரத்த அணுக்களால் ஆனதாகும்..
- சிவப்பணுக்கள் (RBC), வெள்ளையணுக்கள் (WBC), தட்டணுக்கள் (Platelets) ஆகியவை ரத்தத்தின் பகுதிப் பொருட்கள் ஆகும்.
- ரத்தத்தில், திரவப் பொருள் தான், பிளாஸ்மா (Plasma). இதில், 90% நீரும், 10% புரத மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளது.
- நமது உடலில், சிவப்பணுக்கள், 4.5-5.5 மில்லியன்கள் உள்ளன. இவற்றின் ஆயுள் 120 நாட்கள்.
- ரத்தத்திற்கு, அதன் சிவப்பு நிறத்தை கொடுப்பது, சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்ற வர்ண நிறமியால் தான்.
- சிவப்பணுக்களில் உள்ள, ஹீமோகுளோபின்கள் தான் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது.
- கழிவுகளை அகற்றுவதற்காக சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் ரத்தமே.
- ஒரு வினாடியில் லட்சக்கணக்கான சிவப்பணுக்கள் பிறப்பதும், அழிவதுமாக உள்ளன. எலும்பு மஜ்ஜையில் இந்த சிவப்பணு பிறப்பு நிகழ்கிறது.
- ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் ரத்த சோகை (Anaemia) ஏற்படும்.
- உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, 4000-10,000/cu.mm ஆகும்.
- இவற்றின் ஆயுள், 15 நாட்களே..
- எலும்பு மஜ்ஜையினுள்ளும் தைமஸிலும் உற்பத்தியாகும் ரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியின் ஆதாரமாய் உள்ளன.
- உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போரிடுபவை, ரத்த வெள்ளை அணுக்கள் (WBC) ஆகும்.
- உடலில், வெள்ளை அணுக்கள் குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது.
- பாக்டீரியா போன்ற கிருமிகளின் தாக்கம் ஏற்படும்போது, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, சற்றே கூடுகிறது. (11,000-20,000)
- Platelets, என்ற ரத்த தட்டணுக்கள், ரத்தத்தை உறைய வைக்கப் பயன்படுகிறது.
- உடலில், தட்டணுக்களின் எண்ணிக்கை, 1,00,000- 3,00,000 ஆகும். இவற்றின் ஆயுள் ஒரு வாரமே.
- ரத்தம் உறைதலுக்கு முக்கிய காரணியான தட்டணுக்கள், டெங்கு போன்ற வைரல் காய்ச்சலில் குறைவாகின்றது.
- பிளாஸ்மாவில் ஆல்புமின், பைபிரினோஜென், குளோபுலின் எனும் 3 முக்கிய புரதப்பொருட்கள் உள்ளன.
- நமது திசுக்களிடையே, Colloid osmotic pressure என்ற சவ்வூடுபரவற்குரிய அழுத்தத்தை சீராக வைத்திருப்பது ஆல்புமின்.
- காயம்பட்ட இடத்தில் ரத்தம் கட்டியாக உறைய பைபிரினோஜென் அவசியம்.
- குளோபுலின் தொற்று நோய்களை எதிர்த்து போராடும்.
- பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ஹார்மோன்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் உள்ளன.
- ஆக..
- நுரையீரலிருந்து திசுக்களுக்கு ரத்தம், O2 எடுத்துச்செல்லும். திசுக்களிலிருந்து CO2, நுரையீரலுக்கு எடுத்துவந்து வெளியேற்றுவது ரத்தம்தான்.
- உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம்.
- ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம், 1,19,000 km. ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம், 65 kmph.!
- உயிரினங்களின் உடல் இயக்கம் ரத்த ஓட்டத்தின் வழியே நடக்கிறது என்றால் வியப்பில்லை.!!
***************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக