சருமம்.. மற்றும்
அதன் நிறம் தரும் மெலானின்..
- மனித உடலில், இருக்கும் மிகப்பெரிய உறுப்பு...தோல்..!
- 4 kg எடையும், 22sq.ft பரப்பளவும் கொண்டது மனிதனின் சருமம்.
- சருமத்தின் இரு முக்கிய பகுதிகள்..
- Epidermis என்ற வெளித்தோல், மற்றும்
- Dermis என்ற உட்பகுதியும்..
- நான்கு வாரங்களுக்கு ஒரு முறை, epidermis செல்கள், புதுப்பிக்கப் படுகின்றன..
- வியர்வை நாளங்கள், எண்ணெய் சுரப்பிகள், நரம்புகள், இரத்த நாளங்கள், நிறத்திசுக்கள் கொண்டது dermis என்ற உட்தோல்..
- சருமம், முடி, கருவிழி ஆகியவற்றிற்கு நிறத்தைத் தருவது மெலானின் என்ற ரசாயனப் பொருள்..
- மெலானின், மெலனோசைட் எனும் செல்களினுள் சிறு துகள்களாகச் சேமிக்கப்படுகின்றன. தோலின் டெர்மிஸ் பகுதியில் இவை உள்ளன.
- மனிதத்தோலின் மெலானின் அளவு, மனிதனின் நிறத்தை கருப்பாக அல்லது வெண்மையாக பிரதிபலிக்க செய்கிறது
- மெலனோசைட்களில், டைரோசின் அமினோ அமிலத்திலிருந்து மெலானின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கென டைரோசினேஸ் என்சைம் அச்செல்களில் அமைந்துள்ளது.
- மெலானின் (Melanin) துன்பம் தரும் (UV rays) ஒளிக்கதிர்களிடமிருந்து இயற்கையாக பாதுகாப்பை தருகிறது.
- மெலானின் அதிகமாக இருந்தால் அடியில் உள்ள உறுப்புகளை பாதுகாக்க உதவுகிறது.
- கருப்பே பாதுகாப்பு
- கருப்பே அழகு
- அழகைக் காட்ட,
- உறுப்புக்களைப் பாதுகாக்க,
- தட்பவெப்பநிலையை காக்க,
- உடலின் நீரை சமநிலையில் வைக்க,..
- மேலும், நமது சருமம் சூரிய ஒளியிலிருந்து, வரும் UV-B rays, சருமத்தின் கொலஸ்ட்ராலை, வைட்டமின் Dயாக, மாற்றுகின்றது... சூரிய ஒளி வைட்டமின்.
- சருமம், ஆரோக்கியத்தின் கண்ணாடி...
- தினமும் இருமுறை குளித்தல், உடற்பயிற்சி மற்றும் யோகா, தக்க உணவு மற்றும் தண்ணீர் ஆகியவையே சரும பாதுகாப்புக்கு முதல்படி
- விளம்பரங்களில் வரும், எந்த க்ரீமும், சோப்பும், நமது தோல் நிறத்தை மாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
- Albinism (அல்பினிசம்) எனப்படும் வெண்குஷ்டம், குறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் ஏற்படுகிறது.
- மரபணு குறைபாட்டினால் தோலுக்கு நிறத்தை அளிக்கும் மெலனின் தோன்றுவதற்கான டைரோசினேஸ் செயலயற்ற நிலை தான் அல்பினிசம் எனப்படும்.
- தோல் நிபுணர்களின் டிப்ஸ்..
- தண்ணீர் அதிகமாக குடிக்கவும்.
- பழங்கள் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்
- நன்கு தூங்கவும்
********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக