வெள்ளி, 29 ஏப்ரல், 2016

உணவின் பயணம்...


Carbohydrates/மாவு உணவு.
  • நம் எல்லோருக்கும் ஊட்டச்சத்து தேவை. அவைதரும் பயன்கள் மற்றும் விளைவுகள் என்ன என்பதை அறிந்து கொள்வதும் முக்கியமான ஒன்று.
  • சமச்சீர் உணவில், கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் அத்தியாவசியமான பங்காற்றுகிறது..
  • எல்லா கார்போஹைட்ரேட்களும், கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய 3 வேதியக் கூறுகளால் ஆக்கப்படுகின்றன.
  • உலகின் பெருமளவு மக்கள் தொகையும் கார்போஹைட்ரேட்டிலிருந்து தனது 70% சக்தியைப் பெற்று கொள்கின்றனர்.
  • மனித வளர்ச்சிக்கு தேவையான சக்தியாகவும், எதிர்கால சேமிப்பின் வடிவமாகவும், கார்போஹைட்ரேட் விளங்குகிறது..
  • பெருமளவு கார்போஹைட்ரேட் நிறைந்த நமது உணவுகள்: தானிய வகைகள், கிழங்கு வகைகள், பழங்கள், காய்கறிகள், தேன், கரும்பு, பால் மற்றும் ரொட்டி வகைகள்.
  • நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்கள்,  செரிமானத்திற்கு பிறகு தனிச் சர்க்கரைப் பொருள்களாக உடைக்கப்படுகின்றது.
  • குளுக்கோஸ் (glucose), பழச்சர்க்கரை (fructose), பால் சர்க்கரை (galactose) ஆகியன, தனிச் சர்க்கரைப் பொருள்களாகும்.
  • உணவை நன்கு மென்று உண்ணும் போது, உமிழ்நீர் சுரப்பிகளில் உமிழ் சுரந்து, உணவினை விழுங்க உதவுவதோடு, மாவு உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
  • உமிழ்நீரில் உள்ள, டயலின்/அமைலேஸ் என்சைமானது, மாவு உணவை செரிமானித்து, மால்டோஸ் உணவாக மாற்றுகிறது.
  • Bolus என்ற உணவுக்கவளம், விழுங்கிய பின், உணவுக்குழாயில் பயணிக்கிறது. உணவுக்குழாயின் சுரப்பிகள் உணவை மேலும் பதப்படுத்துகிறது.
  • உணவுக்குழாயிலிருந்து, இரைப்பையை அடையும் மாவு உணவு, இரைப்பையின் அமிலம் மற்றும் என்சைம்கள் மூலம் 30-40% செரிமானத்தை அடைகிறது.
  • இரைப்பையில் நன்கு செரிக்கப்பட்ட உணவு கைம் (chyme) என்றழைக்கப்படுகிறது. உட்கொண்ட 1-4 மணிநேரத்தில் முன்குடலை அடைகிறது.
  • முன் குடலில் பயணிக்கும் உணவு, கணையத்தின் அமைலேஸ் என்சைமினால், மால்டோஸ் சர்க்கரையாக முழுதும் மாறுகிறது.
  • பின்குடலில் உணவு நகரும்போது, அங்குள்ள என்சைம்கள், தனிச்சர்க்கரையான குளுக்கோஸ் என மாற்றப்பட்டு குடலின் இரத்தக்குழாய்க்கு சென்றடைகிறது.
  • செரிமானமாகாத மாவு உணவு, நார்ச்சத்து, மற்றும் நீர், பெருங்குடலின் உறிஞ்சும் தன்மையினால் குறைந்து, கழிவாக மாறி, வெளியேற்றப்படுகிறது.
  • இரத்தக்குழாயை அடைந்த குளுகோஸ், அனைத்து உடற்பகுதிக்கும் சென்றடைந்து, அங்கு திசுக்களில், ATP என்ற சக்தியாக மாறுகிறது.
  • நாம் உண்ணும் உணவினால் கிடைக்கும் சக்தியை அளக்கும் அளவுகோல் கலோரி எனப்படுகிறது.
  • ஒரு கிராம் கார்போஹைட்ரேட் மூலம் 4 கலோரி சக்தி கிடைக்கிறது. ஆனால் இது அதிகமாக உட்கொள்ளும் போது, உடல்பருமனை அதிகரித்துவிடுகிறது.
  • ஓர் உணவுப் பொருள் தரும் கலோரி என்பது 1g எடையுள்ள தண்ணீரை 0°Cலிருந்து, 1°C வரை சூடாக்க தேவைப்படும் ஆற்றலாகும்.
  • சாதாரண பணிகளில், ஆண்களுக்கு 2450 கலோரிகளும் பெண்களுக்கு 1800 கலோரிகளும், ஒருநாளில் போதுமானது.
,

  • ஆக... உடலின் அன்றாடத் தேவைகளுக்கு, உடனடி சக்தியைக் கொடுக்கக் கூடிய முக்கியமான சத்துப்பொருள்தான் கார்போஹைட்ரேட்.


*****************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக