சூரிய கிரகணம்
மற்றும்
அதன் மருத்துவ உண்மைகள்...
- சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் கடக்கும்போது, அது பூமியில் இருந்து சூரியனை மறைக்கும். இது சூரிய கிரகணம்.
- சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான நேர்கோட்டை பூமி கடக்கும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பது சந்திர கிரகணம்.
- சூரியனைவிட சந்திரன் 400 மடங்கு சிறியது. ஆனால், பூமியிலிருந்து 400 மடங்கு துாரத்தில் சூரியன் இருப்பதால், அதன் ஒளியை சந்திரன் மறைக்கிறது.
- கிரகணத்தை நேரடியாகப் பார்த்தால், கண் பார்வைக் குறைவு அல்லது முழுமையாக பார்வைத்திறன் பறிபோகவோ வாய்ப்பு உள்ளது.
- கிரகணத்தின் போது, சூரியனை வெறும் கண்களால், அதாவது கண்ணுக்கு பாதுகாப்பு லென்ஸ் இல்லாமல் நேரடியாக பார்க்கக் கூடாது.
- கிரகணத்தை நேரடியாகப் பார்த்தால், கண் பார்வைக் குறைவு அல்லது முழுமையாக பார்வைத்திறன் பறிபோகவோ வாய்ப்பு உள்ளது.
- சூரிய கிரகணத்தில், வெளித் தெரிவது, 1% ஒளி மட்டுமே. ஆனால், அது, 10,000 மடங்கு, சந்திர ஒளியைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது.
- அல்ட்ரா வயலட் கதிர்களின் அலைநீளம், (wavelength) 380-1400nm, தாக்கும்போது, கண்களின் விழித்திரை பாதிக்கப்படுகின்றது.
- வேதிம மற்றும் வெப்பநிலை சார்ந்த விழித்திரை இழப்பு (Photo chemical thermal retinal damage), கிரகணத்தின் போது ஏற்படும்.
- தற்காலிகமான / நிரந்தரமான விழித்திரை சேதம், எவ்வளவு நேரம் பாதுகாப்பின்றி கிரகணக் கதிர்களை நேரடியாக பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தது.
- கிரகணக் கதிர்கள், முற்றிலும் வலியே தெரியாத பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்பதும், அறிவியல் உண்மை.
- Retinal damage, எனப்படும் நிரந்த விழித்திறன் இழப்பிற்கு மருத்துவ சிகிச்சை பயனளிக்காது என்கின்றனர் கண் சிகிச்சை நிபுணர்கள்.(Retinal surgeons).
- நாம் அன்றாடம், பயன்படுத்தும், கருப்புக் கண்ணாடிகள், கிரகண கதிர்வீச்சுக்கு எந்தவித பாதுகாப்பும் தராது.
- அதே போன்று, X-ray படங்கள், அல்லது ஃபோட்டோ நெகடிவ் படங்கள் மூலமாக, கிரகணத்தைப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
- பாதுகாப்பு கண்ணாடிகள்(Eclipse glasses) கொண்டு தான் பார்க்க வேண்டும். வெல்டர்கள் பயன்படுத்தும், 14 வெல்டர் கண்ணாடிகள், பாதுகாப்பை தரும்.
- கிரகணமும், கர்ப்பமும்..
- சில நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் விளக்கங்கள்..
- கர்ப்பிணிப் பெண்கள், கிரகணத்தின் போது, வெளியே வரக்கூடாது?
- மற்ற அனைவரையும் போல, தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளோடு வரலாம்.
- சூரிய கிரகணத்தின் போது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வந்தால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்கும்?
- அறிவியல் பூர்வமாக, எந்த ஆதாரமும் இல்லை.
- கத்தி, கத்திரி போன்ற கூர்மையான ஆயுதங்களை வைத்திருக்க கூடாது..??
- இரத்த அழுத்த வேறுபாடுகளால் பாதுகாப்பு கருதி தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
- உணவை உண்ணக்கூடாதா??
- இரத்த அழுத்த வேறுபாடுகள், கிரகணத்தின் போது ஏற்படும். இதனால் செரிமானம் பாதிக்கப்படலாம் என்ற அறிவியல் உண்மை இதில் உள்ளது.
- கிரகணத்தால் (Birthmark) தழும்பு வர வாய்ப்பு உள்ளது?
- அறவே இல்லை...... ஏனையர்க்கு எந்த பிறப்புக்குறிகள் தோன்றுமோ அதே அளவில்தான், இங்கும் உள்ளது.
"A pregnant woman who touches her belly during an eclipse will have a baby born with a birthmark."
என்பது வெறும் மூடநம்பிக்கையே...!
*****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக