வெள்ளி, 29 ஏப்ரல், 2016

Peptic ulcer என்ற இரைப்பைப் புண்..


"Saturday night parties.
Sunday morning acidities.."

  • இன்றைய நவீன வாழ்க்கையில், நம்மோடு சேர்ந்தே பயணிக்கிறது.. அல்சர் என்ற இரைப்பைப் புண்..
  • இன்றைய வாழ்க்கைச் சூழலில், வயது வித்தியாசமின்றி எல்லோரும் எதிர்கொள்கிற ஆரோக்கியப் பிரச்சினை அல்சர்..

  • நமது, இரைப்பையில், புரத உணவை செரிமானம் செய்ய, இரைப்பை, ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கின்றது

  • நமது இரைப்பையில், ஒரு நாளில், கிட்டத்தட்ட 1.5 லிட்டர், ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது.
  • HCl அமிலம் நமக்கு உணவு செரிமானம், கிருமி எதிர்ப்பு, வைட்டமின்கள் உட்கிரகிப்பு என பல வகையான பயன்களை தருகின்றது.
  • இரைப்பையில் அதிகஅமில சுரப்பு நிலையே, (GERD) Gastro Esophageal Reflux Disease / (LPR) Laryngo Pharyngeal Reflux ஆகியவற்றிற்கு காரணமாக உள்ளது.
  • இரைப்பையில் HCl அமிலம் அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் மியூகஸ் படலம் சிதைவதை இரைப்பை அழற்சி (Gastritis) என்கிறோம்
  • தொண்டையில் தொடங்கி, உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை ‘பெப்டிக் அல்சர்’ என்கிறோம்.

  • இரைப்பையில் புண் ஏற்பட்டால், ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer). முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால், ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer).
  • அழற்சிக்கு காரணங்கள்..
  • காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது!
  • அழற்சிக்கு காரணங்கள்.. மது அருந்துதல், புகைபிடித்தல், மென் குளிர்பானம், காபி, தேநீர் அதிகமாகக் குடிப்பது.

  • அழற்சிக்கு காரணங்கள்..  ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற மாத்திரைகளை மருத்துவ ஆலோசனை இன்றி சாப்பிடுவது.. உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது..
  • மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன.
  • கலப்பட உணவு, மாசடைந்த நீர் ஆகியவற்றில், 'ஹெலிக்கோபாக்டர் பைலோரி' (Helicobacter pylori) எனும் கிருமி, இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது.
  • அல்சரின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான். மேலும் பசியின்மை, புளித்த ஏப்பம் உண்டாகும்.
  • அல்சரில், இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரங்களிலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும்.
  • அல்சர் அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் இரைப்பை சிறப்பு மருத்துவரிடம் என்டோஸ்கோப்பி செய்துகொள்ள வேண்டும்.
  • அல்சர், முன்சிறுகுடலில் இருந்தால், குடலில் துளை, (DU perforation) விழுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
  • இரைப்பைப் புண் தொடர்ந்து இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. அதிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக கவனம் தேவை.
  • இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன.
  • தக்க மருந்து மற்றும் உணவுப் பழக்கத்தின் மூலம் 90 %,  இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம்.
  • இரைப்பைப் புண் உள்ளவர்கள் அடிக்கடி சிறிது சிறிதாக உணவை உண்பது நல்லது.
  • வ‌யி‌ற்று‌‌ப் பு‌ண் வராம‌ல் இரு‌க்க தினமும் மூன்று வேளை உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவு வகைகள் நன்மை தரும். விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • போதுமான அள‌வி‌ற்கு, சுத்தமான த‌ண்‌ணீ‌ர் பருகுவது‌ம் வ‌யி‌ற்று‌க்கு ஏ‌ற்றது. (H.Pylori) கிருமி தாக்குதலை தவிர்க்கும்.
  • கவலை, கோபம், எரிச்சல் போன்ற மனநிலைகளின்போது சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சாப்பிடும்போது சந்தோஷமான மனநிலை முக்கியம்.

  • இரைப்பைப் புண் குணமாக, கவலைகளில் இருந்து விடுபட வேண்டும். மன அமைதியும், ஓய்வும் மிக முக்கியம்.

  • Life style modifications.. எனும் வாழ்க்கை முறை மாற்றம், இரைப்பைப் புண் வராமல் தடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக