'தாயோட கோவம், உக்கிரமா காமிச்சுடுச்சு.
‘அம்மா வார்த்தா, மருந்து வேண்டாம்..
இப்படி நம்மிடையே உலவி வரும் சின்னம்மை பற்றி..
- Varicella Zoster Virus என்ற வைரஸ்தான் சின்னம்மை நோய் ஏற்படக் காரணம். இது வெப்பத்தை தாங்கும் வைரஸ் ஆகும்.
- சின்னம்மை, குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, அதிகம் தாக்கும்.
- சின்னம்மையின் நோய்காப்புக் காலம் 10-21 நாட்களாகும். இது தும்முவதினாலும் இருமுவதினாலும் மற்றவர்களுக்குப் பரவுகிறது.
- நெரிசல் மிகுந்த இடங்கள், குடிசைப் பகுதிகள், விடுதிகளில் வசிப்போருக்கும், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் அம்மை விரைவில் பரவும்.
- அறிகுறிகள்... காய்ச்சல், சளி, உடல்வலி, சோர்வு, உடலில் அரிப்பு, எரிச்சல், நாக்கு மற்றும் உடலில்,சிறு கொப்புளங்கள்.
- நீர் கோர்த்த கொப்புளங்கள் முகம், மார்பு, வயிறு, முதுகு, போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
- அம்மை நோய் தொடங்கிய 7 நாட்களில் காய்ச்சல் குறைந்து, 14 நாட்களில் கொப்புளங்கள் சுருங்கி, scab உதிரும்.
- தீவிர அம்மைத் தாக்குதலில், நிமோனியா, மூளைக்காய்ச்சல், myocarditis என்ற இதயத்தசை வீக்கம், nephritis என்ற சிறுநீரகத் தாக்கம் போன்றவை ஏற்படலாம்.
- வேப்பிலையைத் தலைமாட்டில் வைத்துக்கொள்வது, வேப்பிலையை அரைத்துப் பூசுவது என இன்றும், பல இல்லங்களில் வழக்காக உள்ளது.
- வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டு. ஆனால் வைரஸ் கிருமிகளை ஒழிக்க இவை மட்டும் போதாது.
- Acyclovir என்ற மருந்தை மருத்துவர் ஆலோசனைப்படி 5-7 நாட்கள் உட்கொண்டால் அம்மை விரைவாக குணமடையும்.
- சின்னம்மையில், உணவுக் கட்டுப்பாடு தேவையில்லை. எல்லா உணவையும் வழக்கம்போல் சாப்பிடலாம்.
- சின்னம்மை தாக்கும் போது, உடலில் நீரிழப்பு சற்று அதிகமாக இருக்கும்.
- மோர், இளநீர், பால், பழச்சாறுகள், அரிசிக்கஞ்சி, குளுகோஸ், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற நீர் உணவை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- வைட்டமின் ஏ சத்து நிறைந்த காரட், பப்பாளி, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.
- அம்மை கொப்புளங்களில் (calamine lotion) காலமைன் லோஷனை தடவிவிட்டால் எரிச்சல் மட்டுப்படும்.
- வெதுவெதுப்பான நீரில் இரண்டு வேளையும் குளிக்கலாம். சுத்தமான பருத்தி ஆடைகளையே உடுத்த வேண்டும்.
- அம்மை நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவது நல்லது. சுற்றுப்புறம் மற்றும் உடல் தூய்மை சின்னம்மை முற்றிலும் தடுக்க உதவும்.
- வீட்டில் ஒருவருக்குச் சின்னம்மை நோய் வந்துவிட்டால், 3-5 நாட்களுக்குள், அம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
- 1974ம் ஆண்டில் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது.
- அம்மை என்றவுடன், தெய்வ குற்றம் என்று பார்க்காமல், தகுந்த சிகிச்சை அளித்தால், நோயின் தீவிரம் நன்கு குறையும்..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக