ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

தோப்புக்கரணம் எனும் Super Brain Yoga.. சில குறிப்புகள்..


"அப்பனே.. 
யப்பனே.. 
புள்ளையாரப்பனே.. 
போடவா.. தோப்புக்கரணம் போடவா..."

  • இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான விநாயகரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்துவந்துள்ளது. 
  • நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.
  • லாஸ் ஏஞ்சலைச் சேர்ந்த, Dr.Eric Robins தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுவதாக கூறுகிறார். #SuperBrainYoga
  • ப்ராணிக் சிகிச்சை நிபுணர் Master Koa Chok Sui தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தின் பலன்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
  • தோப்புக்கரணம் எனும் Super Brain Yoga.. சில குறிப்புகள்..
  • நிமிர்ந்து நின்று இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்து பாதங்களை நிலத்தில் பதித்து உட்காந்து எழுவதுதான் தோப்புக்கரணம்.
  • எளிய தோப்புக்கரணத்தின் பலன்களோ மிகவும் அற்புதமானவை. தரையில் அமர்ந்து எழுந்திருப்பதால், நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடும்.
  • தரையில் உட்கார்ந்து எழும்போது இரத்த ஓட்டம் இதயத்தில் சீராக இருப்பதால், இதயம்ஆரோக்கியமாக இருக்கும்.
  • நம் உடலின் ஒவ்வொரு பாகமும் பலனடைகிறது. குறிப்பாக, தரையில் அமர்வதால், முழங்கால் மூட்டுக்களும், இடுப்பெலும்புகளும் வலுவடைகின்றன. 
  • கைகளை மாற்றி, காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும் போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
  • தோப்புக்கரணம் மூலம் நினைவாற்றல், படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் சுகாதாரமும் மேம்படத் தொடங்குகின்றது.
  • நமது இடது பக்க மூளை logical எனப்படும் காரணங்களையும், வலது பக்க மூளை intuitive எனப்படும் உணர்வுகளையும் செயல்படுத்தும் 
  • இவை இரண்டும் சமஅளவில் வேலை செய்வதனால் நமது யோசிக்கும் திறன் அதிகரித்து ஒரு சமதள வாழ்வை வாழ முடியும் #தோப்புக்கரணம்.
  • மூளையினின்று வெளிப்படும் மின்சக்தி அலைகளின் சுழற்சியை அளக்க இயலும். இதனை மூளையின் செயல்மின் சுழற்சி அலைகள் என்கிறோம்.
  • மனிதனில், நான்குவிதமான மின் சுழற்சி அலைகள் மூளையினின்று வெளிப்படுத்துகின்றன.
  • அவை... ஆல்ஃபா alpha- கூர்ந்த அறிவு, பீட்டா beta- விழிப்பு, பதட்டம், டெல்ட்டா delta-ஆழ்நிலை மற்றும் த்தீட்டா theta - இறைநிலை.
  • ‘ஆல்பா’வில் இருக்கும்போது மூளை சிறப்பாக செயல்படுகின்றது. தோப்புக்கரணம் போடும்போது ஆல்பா நிலை உடனடியாக தொடங்குகிறது.
  • வலது காது மடல் இடது மூளையுடன் இணக்கப்பட்டுள்ளது. அதுப்போலவே, இடது காது மடல் வலது மூளையுடன் இணக்கப்பட்டுள்ளது.
  • இடதுகாது மடலை வலது கையின் கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலைக் கொண்டு அழுத்தும்போது பினியல் சுரப்பி, மெலட்டோனின் எனும் ஹார்மோனை சுரக்கிறது.
  • வலதுகாது மடலை இடதுகையின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் அழுத்தும்போது ‘பிட்யூட்டரி' சுரக்கின்றது..
  • தோப்புக்கரணம் எளிதில் செய்யக் கூடிய பயிற்சி. தினமும் 15 -21 வரை தோப்புக்கரணம் போடும் போது, அதிக நன்மையை அடையலாம்.. 
  • வெறும் கடவுள் நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல தோப்புக்கரணம் போடுவது. நம் முன்னோர்களின் அறிவியலும் சேர்ந்தே உள்ளது. 


 ***********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக