சனி, 16 ஏப்ரல், 2016

ஞாபகத்திறன்...

ஞாபகம் வருதே...!!

  • மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவனது நீளமான, ஆழமான ஞாபகத்திறன்..
  • மூளைக்குள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. 
  • உலகிலேயே மிக மிக நுட்பமானதும், அதிசயமானதும் - மனித மூளையின் அமைப்பும் அதன் செயல்பாடும்தான். 
  • மூளையில், ஆயிரம் கோடி நியூரான்களின், ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை மற்றும் செயலாக்கம்.
  • ஒரு நாளில், நமது மூளையில் ஏற்படும் எண்ணங்களின் எண்ணிக்கை...50,000 வரை... அவற்றில், 70% எதிர்மறை எண்ணங்களேயாம்!!??
  • மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4%மட்டுமே பயன்படுத்துகிறான். 96 % ஞாபக சக்தி பணிகளில் ஈடுபடுவதில்லை என்பது தான் உண்மை.
  • ஒவ்வொரு முறையும், ஒரு புதிய நிகழ்வுக்குப் பிறகு, மூளை நரம்புகளில், ஒரு புதிய இணைப்பு ஏற்படுகிறது. இது ஞாபகத்திறனை வளர்க்கிறது.
  • ஞாபகங்கள், எப்போதும் அட்டைப்புதிர்கள் போன்றவை... துண்டுகள் இணைக்கப்படும்போது, ஞாபகங்கள் நினைவில் வருகின்றது. 
  • உடம்பின் 2% எடையே உள்ள மூளை, 20% இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜனை உபயோகித்து விடுகிறது.
  • ஆண்களின் மூளையின் எடை, பெண்களின் மூளையைவிட, 10% அதிகமாம். எடையில் மட்டுமே என்று படிக்கவும்... 
  • மூளை நரம்பு வழியே தகவல்கள் பயணிக்கும் வேகம் என்ன தெரியுமா? மணிக்கு 260 மைல்வேகம்! இது மிகவேகமான, ஃபார்முலா 1 கார்ரேஸ் ஓட்டத்தைவிட வேகமானது.
  • மூளையில் உள்ள நீரின் அளவு.. 73%. அதிகமான அளவில், தண்ணீர் குடித்தால், ஞாபகத்திறன் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு. #+2 பெற்றோர் கவனத்திற்கு!
  • அதிக கொலஸ்ட்ரால், மூளைக்கு மட்டும் நன்மையே பயக்குமாம்.. #முரண் 
  • 10 விநாடிகள், ஆக்சிஜன் குறைபாடு மயக்கநிலையை தரும். ஐந்து நிமிடம் வரை, O2 பற்றாக்குறை ஏற்பட்டால், கோமா என்ற Brain death நேரிடும்.
  • தனது எடை வளர்ச்சியை, 18 வயதில் நிறுத்திவிடும் மூளை, நாற்பதை தாண்டியும், திறன் வளர்ச்சியைக் கட்டிக்கொண்டே இருக்கும். #பாட்டியின் ஞாபகத்திறன்
  • Amygdala என்ற மூளையின் பாகம் தான், உணர்ச்சிகளை மூளைக்கு உணர்த்துவது.. #கண்பேசும் வார்த்தைகள் புரிகின்றதே 
  • பெண்களின் முக்கிய சுரப்பியான, ஈஸ்ட்ரோஜன் ஞாபகத்திறனை அதிகப்படுத்தும். #இன்னிக்கும் பில்கட்ட மறந்தாச்சா.. என்னதான் மறதியோ உங்களுக்கு
  • ஞாபகத்திறன் வாசனைகளோடு அதிகமாக கைகோர்த்துக் கொள்ளுமாம்.
  • ”ஞாபக மறதி” எனும் பலவீனம், இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை மறதி இல்லாத மனிதர் இல்லை.
  • முதுமையில் ஏற்படும் மறதி, அறிவாற்றல் இழப்பு, மறதி போன்றவற்றை ஆங்கிலத்தில் (Dementia), தமிழில் ‘மூளைத் தேய்வு’ என்பர். 
  • அல்ஸீமர் நோய் (Alzheimer’s disease) என்பது வயோதிகத்தில் ஏற்படும் நினைவிழப்பு மற்றும் சிந்தனைத் திறன் இழத்தல் ஆகும்.
  • Alzheimer நோய், முழுதாகக் குணப்படத்த முடியாத நோய் என்ற போதும், மேலும் தீவிரமாகி வாழ்வின் செயல்திறனை குறைக்காமல் தடுக்க முடியும்.
  • ஆக.. ஞாபகம் என்பது.. நமது மூளை தகவல்களை எல்லாம், குறியிட்டு, பதிவு செய்து, தேவைப்படும் போது மீட்டெடுத்து தருவது.!
  • ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக