செவ்வாய், 12 ஏப்ரல், 2016

சிசேரியன்.!!! ஒரு கண்ணோட்டம்..!!!



  • இயல்பாக, பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை பிரசவிக்க இயலாத சந்தர்ப்பங்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சைமுறை சிசேரியன்.



  • சிசேரியனின் வரலாறு..
  • Lex Caesarea என்ற ரோமானிய சட்டம், 715 கி.மு.வில், அறுவை சிகிச்சையின் வழியாக குழந்தை பிறப்பிற்கான ஒன்றாம்.
  • 17ஆம் நூற்றாண்டு வரை, சிசேரியன் என்பது இறக்கும் தருவாயில் இருக்கும் தாயிடம் சேயைக் காக்க மட்டுமே செய்யப்பட்டது.

  • Sanger, Kronig, DeLee, Kehrer என்று பல்வேறு மருத்துவர்களால் சிசேரியன் மாற்றியமைக்கப்பட்டது.

  • தற்போது மேற்கொள்ளப் படும், Bikini line சிசேரியன் என்ற தழும்பு தெரியாத சிசேரியனை நடைமுறைப் படுத்தியது, Munro Kerr என்ற ஆங்கிலேய மருத்துவர்.
  • இந்தியாவில், 20-30% பேருக்கு சிசேரியன் மூலம் பிரசவமாகின்றது. சில மையங்களில், சிசேரியன் நிகழ்வு >40% த்திற்கும் மேல் என்பது வருந்தத்தக்கது.
  • சிசேரியன் அறுவை சிகிச்சை இரண்டு வகைப்படும்..
  1. -திட்டமிட்ட சிசேரியன்.
  2. -அவசரநிலை சிசேரியன்.
  • தாய் அல்லது சேயின் காரணங்களுக்காக திட்டமிட்டு செய்யப்படும் சிசேரியன் அறுவைச்சிகிச்சை (Elective Caesarian section).
  • பிரசவ வலியின் போது சில பிரச்சினைகள் உருவாகி உடனடியாக சிசேரியன் செய்யப்படுவது அவசர சிசேரியன் Emergency Caesarean எனப்படும்.
  • Power, Passage way, Passenger, எனும் 3 ‘P’, பிரசவத்திற்கு மிகவும் முக்கியம்.
  • Power..
  • பிரசவ வலியின் தன்மை..
  • 3 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு வலியும் ஒரு நிமிடம் வரை நீடிக்கும் வலி, உண்மையான வலி எனப்படும்.

  • Passage way..
  • இதில், Pelvis என்ற இடுப்பு எலும்பு மற்றும் Bishop scoring எனப்படும் கர்ப்ப வாயின் தன்மையைக் குறிக்கும்.
  • Passenger..
  • குழந்தையின் எடை, நிலை மற்றும் தங்கிடம் சார்ந்தது.
  • இந்த மூன்று P யோடு, Psyche என்ற தாயின் மனநிலையும் முக்கியமான ஒன்றாகிவிட்டது.


சிசேரியன்..
சில காரணங்கள்..
  • சிசேரியன் அறுவைச் சிகிச்சைக்கு முதுகுத்தண்டில் மயக்கமுறை (Spinal / Epidural Anaesthesia) பயன்படுத்தப்படுகிறது.




  • சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பின்..
  • சில அறிவுரைகள்..


    1. உணவு முறைகள்.. அறுவைச்சிகிச்சைக்கு முன்பும், பிறகும் 6 மணிநேரம் உண்ணாநிலை அறிவுறுத்தப்படுகிறது.
    2. Early ambulation என்ற விரைவில் நடத்தல், அறுவை சிகிச்சைக்கு பின், 12 மணிநேரத்தில் அறிவுறுத்தப்படுகிறது.
    3. அறுவைச்சிகிச்சை அரங்கிலேயே, குழந்தைக்கு பாலூட்டப்படுகிறது.
    4. வலி நிவாரணம், தேவைக்கேற்ப 2 நாட்கள் வழங்கப்படுகின்றது.
    5. தண்ணீர் மற்றும் நீராகாரம் 12 மணிநேரத்திலும், திட உணவு 24 மணிதேரத்திலும் ஆரம்பிக்கப்படுகிறது.
    6. அறுவைச்சிகிச்சை செய்த 2-3 ஆம் நாள், கட்டு பிரிக்கப்பட்டு, இயல்நிலைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறது.
    7. தாயின் உடல் நிலையைப் பொறுத்து 3-4 நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்கவேண்டும்.
    8. சிசேரியனுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. சமச்சீரான உணவு வகைகள், அதிலும் புரதச்சத்து அதிகம் நல்லது.
    9. Kegel's என்ற பெல்விக் உடற்பயிற்சிகள், உடனடியாக அறிவுறுத்தப்படுகிறது. 
    10. ஒருவார காலத்தில், தசையை வலுவாக்கும் உடற்பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
    • சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே எல்லா வேலைகளையும் செய்ய இயலும்.
    • கருத்தடை முறைகளுக்கான ஆலோசனைகள் குழந்தை பிறந்த 6 வார காலத்தில் வழங்கப்படுகிறது.
    • ஆயினும்..."On demand Caesarean.. இப்போது On demand timed Caesarean...!" இதுவே தற்போதைய ஃபேஷனாக உருவெடுத்துவிட்டது.

      • மேலும், Family centred C-section என்ற கணவனோடு பிரசவ அறுவைசிகிச்சை முறையும், அனைத்து இடங்களிலும் வழக்காகிவிட்டது.


      &&&&&&&&&&&&&&

      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக