கருவாகி.. உருவாகி.. உயிராகி...!!
- இயற்கையின் சிருஷ்டியில் மிகமிக உன்னதமான படைப்பு, மனிதன் தான்.
- ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்குவதற்கு, 14 நாட்கள் முன்னதாக, சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறும். அது 12-24 மணி நேரமே உயிருடன் இருக்கும்.
- ஆணின் விந்து 72 மணி நேரம் உயிருடன் இருக்கும்.
- கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. கரு ஃபெலோபியன் குழாயில் உருவாகிறது.
- ஆரம்பத்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடும்.
- இரண்டு செல் கரு, பன்மடங்காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மாதிரி (morula) ஆகிவிடும்.
- மாருலா, 4 காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப்பைக்குள் வந்துவிடும்.
- கர்ப்பப்பையில் பதிந்த கரு, கிட்டத்தட்ட 70-100 உயிரணுக்களைக் கொண்டது. Blastocyst என அழைக்கப்படும்.
- Blastocyst, மூன்று படலங்களைக் கொண்டிருக்கும். இவை புறப்படலம் (ectoderm), இடைப்படலம் (mesoderm), அகப்படலம் (endoderm) எனப்படும்.
- இதில் ectoderm மூளை, முதுகெலும்பு, கண், காது, தோல் ஆகவும், mesoderm எலும்பு, இதயம், தசை ஆகவும், endoderm உள் உறுப்புகளாகவும் உருப்பெரும்.
- கருவுற்ற, 4 வது வாரம் குழந்தையின் உள் உறுப்புகள் உருவாக ஆரம்பிக்கும். தொப்புள் கொடி உருவாகி இருக்கும்.
- 5 வது வாரம் குழந்தையின் இருதயம், துடிக்க ஆரம்பித்திருக்கும். மூளை, நரம்பு மண்டலம் உருவாக ஆரம்பித்திருக்கும். கரு1.5- 2.5mm நீளம் இருக்கும்.
- 6வது வாரம் குழந்தையின் கண், காது, ஜீரண உறுப்புகள், வயிறு, வாய் உருவாக ஆரம்பிக்கும். கரு 4mm-6mm நீளம் இருக்கும்.
- 7-12 வது வாரம் வரை கருவின் வளர்ச்சியில் மிக முக்கிய கட்டமாகும். இப்பொழுது கருவின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும்.
- இதில், மூளை, முதுகெலும்பு, நுரையீரல் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கும். கைகால், மூக்கு, உதடுகள் வளர ஆரம்பித்திருக்கும்.
- 12 வது வாரம், கருவின் முகம், கை,கால்,விரல்கள் ஆகியவை நல்ல வளர்ச்சியை பெற்று பார்ப்பதற்கு மனித உருவம் போல தெரியும்.
- கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 நாளுக்குப் பிறகு பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது.
- கருவில் வளரும் குழந்தை பெண்ணாகயிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.
- கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை கேட்கிறது.
- கருவுற்ற 6-வது மாதத்தில் நரம்பு மற்றும் நுரையீரல் வளர்ச்சி நிறைவடைகிறது. மேலும் உடலில் முடி தோன்றுகிறது.
- கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது. எடை, 1kgக்கும் மேலாக அடைகிறது.
- கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின், சுவாசம் முதிர்வடைகிறது. வெப்பநிலை கட்டுப்பாடு மேம்பட ஆரம்பிக்கிறது.
- கருவுற்ற 9-வது மாதம் வளர்ச்சியை முழுவதுமாக அடைந்த குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.
- சற்று எளிய முறையில் பதிவிடும் நோக்கில், பல வளர்ச்சி நிலைகளை, இங்கு குறிப்பிட இயலவில்லை..
*****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக