சனி, 16 ஏப்ரல், 2016

Obesity என்ற உடல்பருமன்!!




  • கட்டுக்குமீறிய வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடற் பருமன் (obesity) எனலாம்.
  • ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது, 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' ( Body Mass Index - BMI).
  • இடுப்பின் அளவு அதிகமாக அதிகமாக, நம் ஆயுளின் அளவு குறையும் என்பது இயற்கையின் நியதி.
  • ஆண்களைவிடப் பெண்களுக்கு உடல் பருமன் பிரச்சினை அதிகம். உட்கார்ந்து வேலை பெண்கள்தான் அதிகம், என்பதால்.
  • சிரிக்க.. சிந்திக்க.. கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. உடலின் இயக்கத்துக்கு, கலோரி முக்கிய பங்காற்றுகிறது 
  • உடல் பருமனுக்கான முக்கிய காரணங்கள்... -அதிக உணவு. -உடல் உழைப்பின்மை. -அமர்ந்தியங்கும் வாழ்க்கைமுறை.
  • உடல்பருமன் மூலம், இரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய், முடக்குவாதம், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம். 
  • பல பெண்களுக்கு, ஹார்மோன்களின் அதீத விளைவால் உடல் பருமன் ஏற்படுவதுண்டு.
  • நொறுங்கத் தின்றால் 100 வயது என்பதைத் தவறாக புரிந்ததால் வந்த விளைவு தான் உடல்பருமன்.
  • உடல் எடையைக் குறைக்க உணவின் வகையும், அளவும் முக்கியம். சராசரியாகத் தினமும் நமக்கு 1,800-2200 கலோரி சக்தியைத் தருகிற உணவு தேவை
  • உலகிலேயே, கொழுப்பர்கள் மிகுந்த நாடு... மெக்சிக்கோ!! மூன்றாம் நிலையில்... இந்தியா!!! #முரண்
  • இந்தியாவில், ஐந்தில் ஒருவர் உடல்பருமனோடு உள்ளனர்.
  • உணவைப் பொறுத்தவரை, அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களைத் தவிர்க்க வேண்டும். 
  • காலை சிற்றுண்டியை தவிர்த்தல், இரவுவேளையின் போது அதிகமாக உண்ணுதல் போன்ற தவறான உணவு முறைகளை தவிர்க்க வேண்டும்.
  • உணவு உட்கொள்ளும் அரைமணி நேரத்திற்கு முன்பு குளிர்ந்த தண்ணீரப் பருகினால் உடல்பருமன் குறையும் என்கிறது ஆய்வு..
  • உண்ட உணவு செரித்த பின், அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும்
  • கீரை, காய்கறிகளின் நார்ச்சத்து உடல் கொழுப்பை குறைக்கும். செரிமானமாக நேரம் எடுக்கும். பசியும் அதிகரிக்காது. 
  • ஒருமுறை, KFC அல்லது MacD சென்று உண்டால்.. ஏழு மணிநேர உடற்பயிற்சி தேவை என நினைவில் கொள்ளுங்கள்..
  • Let Exercises.. Win over the.. Excuses!!!

  • அந்த எமனே நினைச்சாலும், உடல் பருமனோட இருக்கறவனைக் காப்பாத்த முடியாது" ... எனது மருத்துவப் பேராசிரியர் வார்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருக்க.
  • Does it really split your weight into equal halves?? #சார்.. எனக்கொரு டவுட்டு


********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக