மனித உடல்வாகும், பயிற்சிகளும்..
- "எவ்வளவு டயட்ல இருந்தாலும், எக்சர்சைஸ் பண்ணாலும், வெயிட் குறையவே மாட்டேங்கறது.. என்ன வழின்னு சொல்லுங்க.."
- இதற்கு சில மருத்துவ தேடல்கள்..
- ஒவ்வொரு மனித உடலும் தனித்தனித் தன்மை கொண்டது. அதாவது ஒவ்வொருவரின் கைரேகையும் ஒரு விதம் என்பதைப்போல தனித்துவமானது..
- உடல்வாகை எலும்புகளின் அளவு, சதைகளின் தன்மை மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றைக் கொண்டு பொதுவான மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்க முடியும்.
- அவை, ectomorph (எக்ட்டோமார்ஃப்) mesomorph (மீஸோமார்ஃப்) மற்றும் endomorph (என்டோமார்ஃப்) என்பவையே..
- Ectomorph.. Pencil frame
- ரக மனிதர்கள், உயரமாக ஒல்லியாக, சுறுசுறுப்பாக, நீண்ட கால்களும், சதைப்பற்றில்லாத உடலும் கொண்டவர்கள்.
- சில பிரபலமான எக்ட்டோமார்ஃப்கள்.
- ப்ராட் பிட், ப்ரூஸ் லீ, கேட் மாஸ், எட்வர்ட் நார்டன்
- நம்மூர்ல சூப்பர் ஸ்டார், தனுஷ்.
- எக்டோமார்ஃப்களுக்கு நீண்ட நேரம் தாக்குப்பிடித்து நிற்கும், தடகளப்போட்டிகள், நீச்சல், சைக்கிளிங்க் உரித்தானவை.
- எக்ட்டோமார்ஃப் உணவுவகைகள்.. அதிக கலோரிகள் கொண்ட மாவு உணவு 50-60%, பால், வேர்க்கடலை..
- எக்டோமார்ஃப்கள் பரிந்துரைக்கப்பட்ட கலோரிகளுக்கு மேலாக உணவை உட்கொள்ளலாம்.
- எக்ட்டோமார்ஃப்களுக்கு, ஏரோபிக் உடற்பயிற்சிகள் ஏற்றதல்ல. ஏனெனில் இதில் உடல் எடை குறைவதோடு, சதை கூடுவதும் நின்றுவிடும்.
- எண்டோமார்ஃப் ரக உடல்வாகு என்பது எக்டோமார்ப் உடல் வாகுக்கு நேர் எதிரான உடல்வாகு.
- எண்டோமார்ஃப் ரக உடல்வாகு உடையவர்கள் உயரம் குறைவாகவும், உடலின் மத்தியப்பகுதியில் அதிக சதைப்பிடிப்புடனும் இருப்பார்கள்.
- சில பிரபலமான எண்டோமார்ஃப்கள்..
- ஜெனிபர் லோபஸ், ஓப்ரா வின்ஃப்ரே, பீயான்ஸ்,..
- நம்மூர்ல எஸ்.பி.பி..
- எண்டோமார்ஃப் உணவு வகைகள்.. 30-40% மாவு உணவு, தானியம் மற்றும் பயிறு வகைகள், அதிகப்படியான காய்கறிகள்.
- எண்டோமார்ஃப்களுக்கு, கலோரி தேவையைவிட, 200-500 குறைவான உணவு..
- எண்டோமார்ஃப்கள், முதலில் சாதாரண ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துவிட்டு பிறகு அதிதீவிர உடற்பயிற்சிகளை வேகமாக செய்யவேண்டும்.
- எண்டோமார்ஃப்களுக்கு, உடலின் வலிமை, சக்தியை காட்டும் பளுதூக்குதல்,மல்யுத்தம் ஆகியன ஏற்ற விளையாட்டுப் போட்டிகள் என்கிறார் பேராசிரியர் மார்கோ.
- மீசோமார்ப் உடல்வாகுடையவர்கள் இயற்கையிலேயே விளையாட்டு வீரர்கள். எதையுமே சிறப்பாகச் செய்பவர்கள்", என்கிறார் மார்கோ.
- சில பிரபலமான மீசோபார்ஃப்கள்..
- சில்வஸ்டர் ஸ்டாலோன், ப்ரூஸ் வில்லீஸ், அன்னா கோர்னிகோவா.. நம்மூரில் கமலஹாசன்.
- மீசோமார்ஃப் உணவு வகைகள்.. மாவுச்சத்து 40-60%, ஒவ்வொரு முறையும் கையளவு உணவு, கலோரிகள் தேவைக்கேற்ற உணவு, ஆகியன..
- மீசோமார்ஃப்கள் சதையை வலிமையாக்கும் உடற்பயிற்சிகள், மூச்சை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளை சமவிகிதத்தில் செய்யவேண்டும்.
- எனவே உங்களின் உடல்வாகு என்னவகையானது என்பதை முதலில் புரிந்துகொள்வது அவசியம்.
- உங்கள் தேவை என்ன என்பதற்கேற்ப உடற்பயிற்சியையும், உணவுப்பழக்கத்தையும் உருவாக்க முடியும் என்பதே உடற்பயிற்சி நிபுணர்கள் சொல்லும் அறிவுரை.
******************8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக