சனி, 30 ஏப்ரல், 2016

முதலுதவி மற்றும் CPR..

கற்போம்..
கற்பிப்போம்..
உயிர் காப்போம்..!

  • முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் கவனிப்பாகும்.
  • 1859இல், ஜீன் ஹென்ரி டுனன்ட் ,சல்பிரினோ போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதன்முதலாக, முதலுதவி செய்தார்.
  • முதலுதவி, பல சமயங்களில் உயிர் காப்பாற்றுகிற திறன்களான CPRஐ உள்ளடக்கியது.

  • இதய இயக்க மீட்பு (CPR-cardipulmonary resuscitation) என்பது உயிரை காப்பாற்றும் முதலுதவியாகும்..

  • Cardiac arrest என்ற இருதய செயலிழப்பில்.... இருதயம் முற்றிலும் செயலிழப்பதால், உடலின் அனைத்து பாகங்களிலும் இரத்த ஓட்டம் மற்றும் O2 தடைபெறுகிறது.
  • மூளைக்கு 4 நிமிடங்களுக்கு மேலாக, O2 மற்றும் இரத்த ஓட்டம் தடைபட்டால் மயக்கதிலை மற்றும் கோமா ஏற்படும்.
  • உங்களுக்கு தெரியுமா..
  • 7.5 லட்சம் இந்தியர்கள், வருடந்தோறும், மாரடைப்பால் உயிரிழக்க நேரிடுகின்றனர்!!
  • மாரடைப்பால் ஏற்படும், 80% உயிரிழப்புகள் மருத்துவமனை அல்லாத இடங்களில் தான் நேரிடுகிறது.
  • 1%த்திற்கும், குறைவான மக்களுக்குத்தான், CPR என்ற இதய இயக்க மீட்பு பற்றி தெரியும் என்கிறது ஆய்வு.
  • தாமதிக்கும், ஒவ்வொரு நிமிடமும் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் 10% குறைந்து கொண்டே இருக்கும்.
  • ஒவ்வொரு நிமிடமும், 20-30% ரத்த ஓட்டத்தை, CPR அதிகரிக்கிறது.
  • BLS - Basic Life Support, என்ற அடிப்படை உயிர்காக்கும் வழிமுறையின் மூலம், மரணங்களைத் தடுக்க முடியும்.
  • முதலுதவியின் மூன்று முக்கிய நோக்கங்கள்..
  1. -உயிர் பாதுகாத்தல்
  2. -நோய் தீவிரமடைவடைதை தவிர்த்தல்
  3. -நோயை குணப்படுத்துவதை ஊக்குவித்தல்.
  • முதலுதவியின் மிக முக்கியமான விதிகள்... ABC எனப்படும், Airway, Breathing, and Circulation என்பதன் சுருக்கமாகும்.
  • சில விதிமுறைகள்..
  1. முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல். (Approach safely.)
  2. பாதிக்கப்பட்டவரின் மூச்சு மற்றும் துடிப்பை பரிசோதனை செய்யவேண்டும். (Check response.)
  3. உடனடியாக உதவிக்கு குரல் கொடுக்க வேண்டும். (Shout for help.)
  4. ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
  5. இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.
  6. மூச்சுக் குழாய் அடைப்பு உள்ளதா என்றும் சுவாசம் உள்ளதா என்றும் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • நினைவிழந்த நபரை சமனான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது தலையை நிமிர்த்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து, 5நொடி இடைவெளியில், 2 முறை காற்றை ஊதி உள்செலுத்த வேண்டும்.
  • பிறகு நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும்.
  • மார்பின் மையப்பகுதியில், கைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, நிமிடத்திற்கு 100-120 முறை என்ற அளவில், 5-6 cm ஆழ அழுத்தங்களை 30 முறை தர வேண்டும்.
  • 30:2
  • முப்பது முறை chest compressions தந்த பிறகு, 2 முறை mouth to mouth breathing தரவேண்டும்.
  • ஒரு உயிரைக் காப்பாற்ற, நீங்கள் அவசியம் மருத்துவராக இருக்க வேண்டியதில்லை.
  • மருத்துவ உதவி கிட்டும்வரை, விடாமல் CPR செய்யவேண்டும்.
  • Advanced Life Support என்பதில், ABCயுடன் ஒரு Dயையும் defibrillation சேர்கிறது (சிவாஜி படத்தில் ரஜினி உயிர்த்தெழுதல்)
  • இதய இயக்க மீட்பு CPR-cardipulmonary resuscitation என்ற உயிர் காக்கும் முதலுதவிக்கு தக்க பயிற்சி மட்டும் போதுமானது.
  • மறக்க முடியாத வலி..
  • பல உயிர்களைக் காத்த எங்கள் மருத்துவப் பேராசிரியர் Bhat, சில வருடங்கள் முன்னர் இருதய அடைப்பால் மரணமடைந்தார்..
  • மறக்க முடியாத நிகழ்வு.
  • சென்ற ஆண்டில், கோவை நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுவனுக்கு தொடர் CPR தந்து காப்பாற்றியது எங்கள் பேராசிரியர் திரவியராஜ்.
கற்போம்..
கற்பிற்போம்..
உயிர் காப்போம்..

Let us 
Teach one..
Save one..
TODAY!!

***************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக