சனி, 16 ஏப்ரல், 2016

நகமே.. நலமா..??


  • ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள், விரல்களின்  பாதுகாப்புக்காக இயற்கையாக அமைந்திருக்கின்றன..
  • நகங்கள் `கெரட்டின்’ என்ற ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது.
  • நகத்தின் பாகங்கள்..

    1. -கேடயம் போன்ற வெளிப்பகுதி
    2. -நகக் கண் என்ற nail bed
    3. -நகத்தின் நரம்புகள் மற்றும் நாளங்கள்.
    • கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளருமாம்..
    • மழைக்காலத்தை விட, வெயில்காலத்தில் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
    • ஒரு மாதத்துக்கு சராசரியாக 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும்.
    • கின்னஸ் உலக சாதனையில், அமெரிக்காவின் `லீ ரெட்மாண்ட்’ என்ற பெண் 28 அடி 41/2 அங்குலம் நீளத்திற்கு கைவிரல் நகத்தை வளர்த்து சாதனை புரிந்துள்ளார்.
    • Myth..
    • இறந்த பிறகு, நகத்திற்கு கீழுள்ள தோலின் தண்ணீர் குறைந்து, தோல் சுருங்கி, நகம் வெளித்தெரிவதை இறந்த பின் நகம் வளரும் என்று நினைத்தனர்.

    • உடம்பின் ஆரோக்கியத்தை கூறும் உறுப்பாகவும் நகம் விளங்குகிறது...
    • உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்று நகத்தின் நிறம் கூறும்.
    • நகம் உடைந்தால் அது நம் உடலில் வைட்டமின் ஏ, சி, அயோடின் குறைபாட்டை வெளிக்காட்டுவதாய் இருக்கலாம்.
    • ஸ்பூன் போன்று நன்கு குழிந்த நகங்கள் இரும்பு சத்து குறைவினால், வரும் ரத்த சோகையினால் ஏற்படலாம்.
    • இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து இருக்கும். இது `க்ளப்பிங்’ எனப்படும்.
    • மிகச் சிறிய சொரசொரப்பான நகங்கள், சோரியாஸிஸ் எனப்படும் சரும பாதிப்பில் இருக்கும்.
    • நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால், "சயனோஸிஸ் இன், அறிகுறியாகும்.
    • பங்கஸ் என்ற  கிருமியினால் ஏற்படும் நோய் நகத்தை  அழுக்காக இருப்பது போல் பாதிக்கச் செய்யும்.
    • விரல் முழுவதும் வெள்ளையாகவும் விரல் நுனியில் ரோஸ் நிறத்திலும் காணப்படும் நகங்களை டெர்ரிஸ் நகங்கள்.. இது வயது கூடுவதன் காரணமாக ஏற்படும்.
    • ஆனிகோலைஸிஸ்: இந்த பாதிப்பால் நகங்கள் வலுவிழந்து ஆடி அப்படியே விழுந்துவிடும்.

    • சில நகப் பராமரிப்பு தகவல்கள்..
    • நகங்களை, சுத்தமாக ஈரமின்றி வைத்திருக்க வேண்டும்.
    • நகப் பூச்சுகளை அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
    • ரசாயனம் மற்றும் கடுமையான வேலைகளுக்கு தகுந்த கையுறை மற்றும் காலுறை பயன்படுத்த வேண்டும்.
    • உள் வளர்ந்த நகத்தினை (Ingrown toe nails) சரிசெய்ய மருத்துவரின் உதவியோடு சிகிச்சை பெறவேண்டும்.
    • நகச்சுத்தி வந்தால், சீழ் அதிகமாகுமுன், மருத்துவ உதவியை நாட வேண்டும்..
    • பெடிக்யூர், மெனிக்யூர் (Manicure and Pedicure) என நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன.
    • நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் பெரும் பாதிப்பு அல்ல.
    வெறும் நகம்தானே.. 
    என நாம் வெட்டி எறியும் நகத்திலும் 
    எத்தன விஷயம் இருக்கு...!!

    ***************

      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக