செவ்வாய், 5 ஏப்ரல், 2016

சில நம்பிக்கைகள்... சில மருத்துவ உண்மைகள்... உணவு மற்றும் உடற்பயிற்சியில்!




  • விரதம் இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்?
  • இல்லை.. 3-5 வேளைகள் உணவை, பிரித்து உண்பது எடையைக் குறைப்பதோடு வயிற்று அழற்சி வராமல் காக்கும்.

  • இரவில் உணவு எடையை அதிகரிக்கும்?
  • எந்த நேரத்தில் உணவை உட்கொள்கிறோம் என்பதல்ல... என்ன வகையான உணவு என்பதுதான் எடை கூடக் காரணமாகும்!

  • கார்போஹைட்ரேட்கள் உடல் எடையை அதிகரிக்கும்?
  • கலோரிகள் எந்தவித உணவிலிருந்து பெறப்பட்டாலும் உடலின் எடை அதிகரிக்கும்.

  • பாதாம், பிஸ்தா.. எடையைக்கூட்டும்?
  • இவற்றில், புரதச்சத்து மற்றும் (EFA) அத்தியாவசிய கொழுப்பு அதிகம் என்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவை.

  • 8 டம்ளர் தண்ணீர் அவசியம் தேவை.
  • ஒருநாளில் 2-3 லிட்டர் நீர் தேவை. தண்ணீர் மட்டுமன்றி நாம் உட்கொள்ளும் உணவின் நீரும் இதில் சேரும்.

  • எடையைக் குறைப்பது கடினம் கூட்டுவது எளிது?
  • நாம் உணவில் 3500C அதிகமாக உட்கொண்டால் கூடும் எடை 0.14 kg. அதுவே 3500C அதிகமாக எரித்தால் குறைவது 0.45 kg.

  • சர்க்கரை உட்கொள்ளும் குழந்தை அதிக துடிப்புடன் இருக்கும்?
  • எந்தவித மாற்றமும் இருக்காது. குழந்தைகள் எப்போதும் துடிப்பாகத் தான் இருப்பார்கள்.

  • இரவில் அதிக உடற்பயிற்சி எடையைக் குறைக்கும்?
  • தூங்குமுன் அதிக உணவு, அதிக உடற்பயிற்சி இரண்டுமே ஏற்றதல்ல.

  • க்ரீன் டீ, எடையைக் குறைக்க உதவும்?
  • இல்லை. க்ரீன் டீயில், Antioxidants உள்ளதால் ஆரோக்கியத்திற்கு உதவும்.

  • பழரசம் (fruit juices) ஏற்புடையன?
  • பழங்கள் தான் ஏற்புடையவை. பழரசங்களால், உடற்பருமன் மற்றும் பற்சிதைவு ஏற்படலாம்.

  • உடற்பயிற்சி செய்யாவிட்டால், தசைகளில் கொழுப்பு கூடும்.
  • தசைகளில் கொழுப்பு கூடாது. ஆனால் தசையளவு குறைவதால், கலோரிகள் எரிப்பது குறையும்.

  • ஒல்லியானவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்லை?
  • BMI கட்டுக்குள் இருந்தாலும், உடற்பயிற்சி இல்லையெனில் மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு ஆகியன வரும்

  • சர்க்கரை உணவால், நீரிழிவுநோய் வரும்?
  • உடல் எடை கூடும். இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டால் மட்டுமே நீரிழிவு நோய் வரும்.

  • Fad diet என்ற திடீர் உடற்குறைப்பு முறைகள் ஏற்புடையன?
  • மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் முறைகள் மட்டுமே ஏற்புடையன.



வாழ்க்கைமுறை மாற்றங்களில், உணவும் உடற்பயிற்சியும் இன்றியமையாதது தான்.
ஆம். "கண்ணாடிதான் நமது உற்ற எதிரி.

3 கருத்துகள்: