வெள்ளி, 22 ஏப்ரல், 2016

தூக்கம்....


மெலடோனின் மற்றும் சர்காடியன் ரிதம்...

  • பகல், இரவு.. கதிர், நிலவு... என்று இயற்கை நமக்கு வெளியே மட்டுமன்றி, உடலுக்கு உள்ளேயும் வைத்திருக்கும் கடிகாரம் தான்.. Biological Clock.
  • Biological clock என்ற கடிகாரம் தான் நமது உடலில் Circadian rhythm என்ற உடல் இசைவின் மூலமாக தூக்கம் மற்றும் விழிப்பு நிலைக்கு காரணமாக உள்ளது..
  • Pineal gland என்ற பினியல் சுரப்பி நமது மூளையின் உட்பகுதிலிருந்து, மெலடோனினை இரவில் சுரக்கச் செய்கிறது.. 
  • சூரியஒளியை மையமாக கொண்டு பகல் இரவு நேரத்திற்கேற்ப இயங்கும் ஒரு உயிரியல் கடிகாரமாக(Biological clock) உடல் திகழ்கிறது.
  • ஒளி எப்படி ஆபத்தாகும்? இயற்கை நமக்கு 12 மணிநேரம் ஒளியையும், 12 மணிநேரம் இருளையும் கொடுத்திருக்கிறது.. அதை நாம் மாற்றும்போது ஆபத்தாகிறது..
  • வெளிச்சமற்ற அடர்ந்த இருட்டில் தூங்கும்போது நமது உடலில் மெலடோனின் சுரக்கத் தொடங்குகிறது. இதுதான் நமது ஆரோக்கியத்தின் உயிர்நாடி.
  • மெலடோனின், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், நன்றாக தூங்கவும், கொழுப்பை நீக்கவும் இது உதவிபுரிகிறது.. 
  • தைராய்டு, பெண்ணின் கருமுட்டை, ஆணின் விரைகள் ஆகியன நன்றாக செயல்படவும், மெலடோனின் மிக முக்கியம்.
  • மெலடோனின் குறைவதால் தலைவலி, மனஅழுத்தம் தூக்கமின்மை, உடற்பருமன், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், ஆண்மைக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்
  • நீல விளக்கானது, நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோகிளாக்கை சரிப்படுத்தி, உடலில் இயக்கத்தையும் சரிசெய்யுமாம்.
  • தினமும், 6-8 மணி நேரம் உறங்குவதை பழக்கப்படுத்திக்கொண்டு, இரவு முழுக்க விழிப்பதை தவிர்க்கவும்.. என்கிறார் ஆய்வாளர் டேவிட் டிங்கெஸ்!
  • ஒளியால் ஏற்படும் இத்தனை பாதிப்புகளை பார்த்தப் பின் மேலைநாடுகளில் 'பாரம்பரிய இரவை மீட்போம்.!' என்று இயக்கங்களை ஆரம்பித்துவிட்டார்கள்.. நாம்?


  • கொசுறு..
  • பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது நன்மை பயக்கும் என்கிறது ஆய்வு..

  • கவனிக்க வேண்டிய செய்தி:
  • இரவை முழுமையாக அனுபவித்தாலே போதும் எல்லா வியாதியும் நம்மை விட்டு ஓடிவிடும்.
**********
***********************
**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக