நீச்சல்...
- நீச்சல் பயிற்சி, நுரையீரல் வலுப் பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நன்கு உதவுகிறது.
- நீச்சல், உடம்பின் அனைத்து தசைகளும் வலுவாக்குகிறது.. கைகள், கால்கள், தண்டுவடத் தசைகள் மற்றும் மூச்சின் தசைகள் உறுதியாகின்றன.
- தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு, எலும்பு மூட்டு தொடர்பான முதுகு வலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டுவலி போன்றவை பாதிக்காது.
- மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் நீந்துவதைப் பழக்கப்படுத்திக் கொண்டால், மன அழுத்தம் குறைந்து, நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க முடியும்.
- ஒரு மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடல்பருமன் குறையும்.
- மேலும், நீச்சல் பயிற்சி, மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆழ்ந்த உறக்கத்திற்கு நீச்சல் மாபெரும் மருந்தாகிறது.
- நீச்சல்.. சிறந்த முதலுதவிக் கலையாகவும், தற்காப்புக் கலையாகவும் விளங்குகிறது.
- தாயின் கருவறையில், நீந்திக் களித்த மனிதன், பின்னாளில் நீரைக் கண்டதும் தத்தளிக்கிறான்.
- இந்தியாவில், நீரில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கை.. வருடத்தில்.. 29,000 பேர்.. அதாவது, ஒரு நாளில் 80 பேர்.!!
- நீச்சல் பயிற்சியை அனைவரும் மேற்கொண்டு ஆரோக்கியம் பெறுவோம்.
- கொசுறு.. பிகினி என்ற நீச்சல் உடை, பிகினி அடால் என்ற தென் பசிஃபிக் பகுதியின் பெயரிலிருந்து வந்ததாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக