சனி, 16 ஏப்ரல், 2016

வாசம் என்ற smell.

  • ஒவ்வொரு பொருளுக்கும், உணவுக்கும் ஒரு தனித்துவமான நறுமணம் உள்ளது. அதனை கண்டறிவது மூளையின் பணி.. 
  • நாம், மூக்கினால் நறுமணத்தை உணர்வதில்லை.. மனதினால் தான் உணர்கிறோம்..
  • மூக்கிலுள்ள நுகரும் திசுக்கள், ஆல்ஃபேக்டரி நரம்பு மற்றும் மூளையின் பகுதியின் மூலமாக வாசனையை உணர்த்துகின்றது.. 
  • ஒரு சராசரி மனிதனின் மூக்கால் கிட்டத்தட்ட 10,000 தனித்துவமான நறுமணங்களை கண்டறிய முடியும்.
  • நமது மூக்கினில் இருக்கும் வாசனையறியும் திசுக்கள் கிட்டத்தட்ட ஒரு கோடியாம்.. ஆனால்... நமது மூளை கிரகிக்கக் கூடிய வாசனைகளோ.. பல கோடியாம்..!
  • கண்பார்வையற்றோரின் வாசனைத் திறன் பலமடங்கு அதிகமாம். 
  • பெண்ணின் உடலில் வீசும் வாசங்கள்.. ஐந்து வகை..!!

  • ஆணுக்கு, மிகவும் பிடித்தமான வாசனை... காலை சிற்றுண்டியின் மணம்..(ஆஹாஆஹா) 
  • பெண்ணுக்கு மிகவும் பிடித்தமான வாசனை.. பிறந்த குழந்தையின் வாசமே..!
  • ஏற்கனவே வாசனை செய்த பொருளை மனதில் நினைவு கொள்ளுதலும் ஒரு வகையான பயிற்சி. Memory recall எனப்படும்.
  • மனிதன் உணரக் கூடிய வாசங்கள் அனைத்தையும், அவனது முதல் பத்து வருடங்களிலேயே உணர்ந்து கொள்கிறான்..
  • வாசனைத் திரவியங்களை முதன்முதலாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது எகிப்தியர்கள்..
  • தாபூத்தி என்ற மெஸபட்டோமியர் முதன்முறையாக வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தினார் என்கிறது வரலாறு..
  • உலகிலேயே, விலையுயர்ந்த செண்ட்... க்ளைவ் கிரிஸ்டியனின் "இம்பீரியல் மெஜஸ்டி"..அதன் விலை.. இரண்டு மில்லியன் அமெரிக்கன் டாலர்கள் மட்டுமே.
  • நறுமணம் எப்பொழுதும், நம்மை மகிழ்வித்து, நமது நாளை சுறுசுறுப்பாகவும், இனியதாகவும் மாற்றும்..
  • அரோமா தெரபி என்ற வாசனை மருத்துவம், இந்திய, சீன, எகிப்திய நாடுகளில், முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
  • தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவே, பெண்கள் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துகின்றனர்
  • ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு நுகரும் சக்தி அதிகம் .
  • கொசுறு.. 'குளிச்சுட்டு, எப்ப செண்ட் போட்டாலும், கொஞ்சம் ஈரமாவே போடுங்க. ஈரத்துல வாசம் பரவி, நிறைய நேரம் இருக்குமாம்' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக