- ஆரோக்கியமான மனிதன், மகிழ்ச்சியை இயல்பாக வெளிப்படுத்துவது சிரிப்பு.
- சிரிப்பு மனதையும், உடலையும் வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
- உங்களுக்கு தெரியுமா.. குழந்தை புன்னகை செய்ய பிறந்து 5 வாரங்கள் ஆகும். சிரிக்க குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும்..!
- ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 300 முறை சிரிக்கும்போது, பெரியவர்கள் 17 முறை மட்டுமே சிரிக்கிறார்களாம்.!
- Risorius என்ற முகத்தசை, சிரிப்பு தசை எனப்படுகிறது.
- Zygomaticus major & minor முகத்தசைகளும், தொண்டை தசைகளும் சிரிப்புக்கு உதவுகின்றன.
- மூளையின் ஹிப்போகேம்பஸ், அமீக்டலா மற்றும் கார்டக்ஸ் ஆகியன சிரிப்பை கட்டுப்படுத்தும்.
- தினமும் அரை மணிநேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் வளரூக்கிகள் குறையும் என்கிறது ஆய்வு.
- சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுப்பதால், ஆக்சிஜன் அளவு கூடி, நோயெதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது.
- சிரிக்கும் போது செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் தூண்டப்படுவதால் பசியைத் தூண்டுகிறது.
- சிரிக்கும் போது, மூளையின் endorphinகள் சுரப்பதால், தலைவலி மற்றும் உடல்வலியும் குறையும் என்கிறது ஆய்வு.
- Stress ஹார்மோன்களான கார்டிஸால், அட்ரீனலின், டோப்பமைன் ஆகியவை சிரிக்கும்போது, குறைவான அளவில் சுரக்கிறது.
- சிரிக்கும்போது, மனத் தளர்ச்சி, தலைவலி, மூட்டுவலி, தூக்கமின்மை, இரத்த அழுத்தம், மாதவிடாய்க் கோளாறுகள் குறைகின்றது.
- நாம் அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வதும், பத்து நிமிடங்கள் சிரிப்பதும் ஒரே அளவு கலோரிகளையே குறைக்குமாம்.
- மேலும் சில தகவல்கள்... ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக நேரம் சிரிக்கின்றனர்!
- 5-7 மில்லியன் வருடங்களாக, மனிதன் சிரித்துக் கொண்டிருக்கிறான்.
- Darwin, தனது 'The Expression of emotions in humans' புத்தகத்தில், மனிதர்கள் ஒன்றாக வாழ சிரிப்பு பெரிதும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
- "கடவுளும் நகைச்சுவையை பெரிதும் விரும்புகிறார்.." என்கிறார் ப்ளூட்டோ.
- பல பெருநகரங்களில் தற்போது பலர் ஒன்றுகூடிச் சிரிப்பதை ஒரு பயிற்சியாக (laughing therapy) மேற்கொண்டுள்ளனர்.
- ஹாஸ்ய யோகா, என்ற சிரிப்புடன் கூடிய யோகா பயிற்சியும் Laughing therapy யின் அங்கமே.
- சிரிப்பைக் காட்டிலும் மிகப் பெரிய தொற்று எதுவுமே இல்லை என்பதும உண்மை தானே..
ஆக..
மனம்விட்டு..
வயிறு குலுங்க..
சிரிப்போம்..
புத்துணர்வு பெறுவோம்..
BECAUSE....
A good laugh and a long sleep may not be the best cures for anything.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக