சனி, 30 ஏப்ரல், 2016

GDM என்ற கர்ப்ப கால சர்க்கரை நோய்..


  • கொழுகொழுவென பிறக்கும் குழந்தைகள் எல்லாமே ஆரோக்கியமான குழந்தைகள் அல்ல..
  • GDM குழந்தைகளாகவும் இருக்கலாம்..
  • கர்ப்ப காலத்தில் மட்டும், பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது, "கர்ப்பகால சர்க்கரை நோய்' எனப்படும்.
  • கர்ப்ப காலத்தில் சுமார் 16 - 17% பெண்கள், கர்ப்ப கால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
  • கருப்பையில் வளரும் குழந்தையின் ஆதாரமே, தாயின் ரத்த குளுகோஸ் தான்.
  • GLUT1 என்ற குளுகோஸ் போக்குவரத்து ஏற்பி, தாயிடமிருந்து சேய்க்கு குளுகோஸ் சக்தியை வழங்குகிறது.
  • கர்ப்ப காலத்தில், ப்ரொஜிஸ்டிரான், HPL ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும். இவை, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும்.
  • தாயின் கணயத்தின் லாங்கர்ஹான்ஸ், போதுமான இன்சுலினை சுரக்காமல் இருப்பதும், சுரக்கப்படும் இன்சுலின் அழிக்கப்படுவதாலும், சர்க்கரை நோய் ஏற்படும்.
  • தாயின் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, GLUT1 அதிகப்படியான க்ளுகோஸை குழந்தைக்கு எடுத்துச் செல்கிறது.
  • குழந்தையின் சர்க்கரை அளவு கூடும்போது, அதன் எடை அதிகரிக்கிறது. மேலும் பிறக்கும் போது அதன் சர்க்கரை அளவு குறைந்த அளவில் காணப்படுகிறது.
  • அதிக எடை , முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய், குடும்பத்தில் சர்க்கரை நோய் இருத்தல்.. -இவர்களுக்குச் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • சர்க்கரை நோய் இருந்தால் கருச்சிதைவு, பிறவி ஊனம், அதிக எடையுடன் குழந்தை வயிற்றிலேயே குழந்தை இறந்து விடுதல்.. ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
  • கர்ப்ப கால சர்க்கரை நோயில் பிறக்கும் குழந்தைக்கு, நுரையீரல் வளர்ச்சி அடையாமல் சுவாசக் கோளாறும் ஏற்படக் கூடும். (RDS)
  • கர்ப்ப கால சர்க்கரை நோயைக் கண்டறிய, 75g குளுக்கோஸ் சேலஞ்ச் பரிசோதனை செய்யப்படுகிறது.
  • கர்ப்பம் தரித்த உடன் மற்றும் 4, 6, 8-ம் மாதங்களில் கண்டிப்பாக GCT சர்க்கரை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
  • GCT சோதனையில், சர்க்கரை அளவு >140 mg இருந்தால், கர்ப்பகால சர்க்கரை நோய் உறுதியாகி விடும்.
  • GCT சோதனையில், சர்க்கரை அளவு 120-139mg இருந்தால், IGT, Impaired Glucose Tolerance எனப்படும்.
  • IGT என்ற சர்க்கரை நிலை சகிப்பின்மை இருந்தால், தக்க உணவு, நடைபயிற்சி மட்டுமே போதுமானது.
  • கர்ப்பகாலத்தில் தாய்க்கு சர்க்கரை நோய் உறுதியாகும் நிலையில், இன்சுலின் ஊசி தான் பரிந்துரைக்கப்படுகிறது.
  • மேலும், சீரான உடற்பயிற்சி செய்ய வேண்டும். மருத்துவர் குறிப்பிடும், உணவுக்கட்டுப்பாடு மற்றும் இன்சுலின் அவசியம்.
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
  • குழந்தையை பிரசவித்து ஆறு வாரங்கள் கழித்து,  GTT சோதனை (குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்) மூலம், சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.
  • தக்க பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையின் மூலம், கர்ப்ப கால சர்க்கரை நோயும், நமது கட்டுபாட்டில் வைத்திடலாம் தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக