முதுமை மருத்துவம் என்ற Geriatrics..
- Geriatrics என்பது வயோதிக மருத்துவத் துறையாகும். வயோதிகத்தில், வருமுன் காக்க.. வந்தபின் நீக்க உதவிடும் துறையிது.
- 'Gero' என்பது கிரேக்க மொழியில் முதுமை என்ற பொருள். முதுமையில் ஏற்படும் நோயைக் குணப்படுத்த என்பதே Geriatric medicine.
- எந்த வயதிலிருந்து வயோதிகம் ஆரம்பிக்கின்றது என்று வரைமுறை செய்யப்படவில்லை என்றாலும், 60 வயது ஒரு மைல்கல் எனப்படுகிறது.
- தோலில் சுருக்கம், கண்பார்வையில் குறைபாடு, நடக்கையில் தள்ளாட்டம், உடல்நலமின்மை ஆகியன முதுமையின் அறிகுறிகள்.
- முதுமையின் ஐ கள்.. Immobilty என்ற நடை இயலாமை. Instability என்ற நிதானமின்மை. Incontinence என்ற அடக்கமுடியாமை. Impaired memory என்ற ஞாபகமறதி.
- மறதி, தூக்கமின்மை, மனக்குழப்பம், மனஅழுத்தம் ஆகியன முதுமையின் தோழமைகள். இவற்றை எதிர்கொள்வது மனம் சார்ந்த பயிற்சிகளின் மூலமாக தான்.
- மேலும், எலும்பு தேய்மானம், மூட்டு வலி, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோய் ஆகியன முதுமையில் அதிகம் தோன்றும் நோய்களாகும்.
- Alzheimer என்ற நினைவுத் திறன் குறைபாடு நோய், வயோதிகத்தில் வருவது. உலகளவில், 18 -19 மில்லியன் மக்களை பாதிக்கின்றது.
- இந்தியாவில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20ல் ஒருவர், 80 வயதை எட்டியவர்களில் 5ல் ஒருவர், Alzheimer நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- வயோதிகத்தில், ஏற்படும் மாற்றங்கள்.. சில தீர்வுகள்..
- 50 வயதிற்கு மேல், 3ல் ஒருவருக்கு கேட்கும் திறன் குறையும். நிபுணர் ஆலோசனைப்படி கேட்கும் கருவிகளை பயன்படுத்தலாம்.
- முதுமையில், Presbyopia என்ற சாளேஸ்வரம் மற்றும் Cataract என்ற கண்புரை நோய்க்கு bifocal கண்ணாடிகள் / அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது.
- உடல் ஆரோக்கியத்திற்கு, பற்களின் பங்கு இன்றியமையாதது. முதுமையில், 6 மாதங்களுக்கு ஒருமுறை பல் பரிசோதனை பரிந்துரைக்கப் படுகிறது.
- வயோதிகத்தை பெரிதும் பாதிக்கும் மற்றொன்று எலும்பு தேய்மானம்.
- எலும்பு தேய்மானத்தில், 60 வயதில் 25% பேர், கீழே விழுந்தால் எலும்பு முறிவு ஏற்படும். அதுவே, 70 வயதில் 50% பேருக்கு எலும்பு முறிவு ஏற்படும்.
- வயோதிகத்தை யாரும் வெல்ல முடியாது. ஆனால், அவற்றோடு அழகாக வாழ்ந்து, வியாதிகளை வெல்ல முடியும்.
- உணவு, தூக்கம், புத்தகம், நண்பர்கள், செல்லப்பிராணிகள், கோயில், விருப்பான வேலைகள் என மனதிற்கேற்ப வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது முக்கியமானது..
- உங்களுக்கு தெரியுமா.. உலக மக்கள் தொகையில், 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள், மக்கள் தொகையில் 12% பேர்.
- Life expectancy என்ற ஆயுள் எதிர்பார்ப்பு, இந்தியாவில், தற்போது ஆண்களுக்கு 63, பெண்களுக்கு 67.5 வருடங்கள்.
- ஆயுள் எதிர்பார்ப்பு அதிகம் உள்ள மாநிலம், கேளரா.. தமிழகம் மூன்றாம் நிலையில் உள்ளது.
- புதிய தகவல்.. நமது குரோமோசோம்களில், Telomere என்ற இறுதிப் பகுதியின் நீளம் குறைவதே மூப்பிற்கும், மூப்பு நோய்களுக்கும் முக்கிய காரணமாம்.!
- வைட்டமின்-சி, டி மற்றும் இ சத்து நிறைந்த உணவுகள் முதுமையில் பரிந்துரைக்கப் படுகிறது.
- மைக்கேல் ஏஞ்சலோவின் உலகப்புகழ் பெற்ற படமான கடவுளின் சக்தி படத்தை, தனது 90 வது வயதில் வரைந்தார்.
- வயோதிகத்தில் நம்மை ஈர்த்தவர்கள்...
- எம்.எஸ். அம்மா, சந்திரலேகா, இந்திரா காந்தி, அன்னை தெரசா என பட்டியல் நீளமானது தான்.
- Aging is one hell of a price to pay for maturity.
ஆம்..
வெல்ல முடியாத முதுமைதான்..
வாழ்க்கை முறை தேர்வும் நோய்த் தீர்வும் முதுமையையும் இனிதாக்க செய்கிறது.
***********************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக