காய்ச்சலுக்கு பயமா...
- "கடவுளே.. என் குழந்தைக்கு உடம்பு நெருப்பாக் கொதிக்குதே.. " என்கிற அம்மாக்களுக்கு... காய்ச்சலின் அளவுகோல்...
- ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). வெப்ப நிலை அதிகமாகும் போது, காய்ச்சல் என்கிறோம்.
- காய்ச்சல் ஒரு நோயல்ல.. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்திதான் காய்ச்சல்.
- உடல் சூடு, நாக்கு கசப்பு, உடல் வலி, உடல் பாரம் மற்றும் அமைதியின்மை.. ஆகியன, காய்ச்சலின் அடையாளங்கள்..
- உடல் வெப்பநிலை அதிகமாகும்போது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது.
- வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105°F க்கு மேல் அதிகமாவதில்லை.
- காய்ச்சல் வந்துவிட்டாலே எதுவும் சாப்பிடக் கூடாது என்று தவறான கருத்து உள்ளது. ஆனால், காய்ச்சலில்தான், உடலுக்கு அதிகசத்து தேவைப்படுகிறது.
- வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சத்துமாவு கஞ்சி, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த காய்கறிகள் ஆகியவை நல்லது.
- திரவ ஆகாரங்கள் , நிறைய குடிக்கவேண்டும்.. இது காய்ச்சலால் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்யும்.
- 105°F (40.5°C) க்குமேல் காய்ச்சல் இருந்து, சிகிச்சைக்கு பிறகும் குறையா விட்டால்... மருத்துவர் உதவி கட்டாயம் தேவை.
- காய்ச்சலின் போது, கனமான உடை, போர்வை, அதிக வெப்பமான சூழல்.. ஆகியவை உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது..
- மெல்லிய ஆடைகள் மற்றும் போர்வைகளை உபயோகிக்கலாம்.. வெதுவெதுப்பான குளிக்கலாம்.. அல்லது ஈரத்துணியால் உடம்பைத் துடைத்து எடுக்கலாம்.
- லேசாக உடல் சூடானாலே போதும், உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையை போடுகிற பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அது தேவையில்லை
- தேவையில்லாமல் நாமாக மருந்துகளை எடுப்பதன் மூலம் தாமாக உற்பத்தியாகிற எதிர்ப்பு சக்தியை நாமாகவே கெடுக்கிறோம்...
- Paracetamol மற்றும் ibuprofen குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் குறைய உதவுகிறது.
- 4 முதல் 5 மணிக்கொருமுறை paracetamol மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் எடுத்துகொள்ளலாம்.
- வைரஸ் காய்ச்சல்கள் எப்படிப் பரவுகின்றன? காற்று, தண்ணீர், கொசுக்கள் மூலமே பரவுகின்றன.
- வைரஸ் காய்ச்சல் ஒருவருக்கு வந்திருக்கிறது என்றால், அவர் முழுமையாகக் குணமடைய ஓய்வு மிகவும் அவசியம்.
- Febrile Seizures என்ற காய்ச்சல் வலிப்பானது, அதிக காய்ச்சல் இருந்தால்.. அதாவது 38° செல்சியஸை விட அதிகமாக இருந்தால், ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
- காய்ச்சல் அதிகமாகும்போது, உடனே உடல் வெப்பத்தை குறைக்க Paracetamol suppository யை, ஆசன வாயில் உபயோகிக்கலாம்..
- ஆன்டிபயாடிக் எடுக்கும்போது பாதியோடு நிறுத்தவும் கூடாது. பரிந்து ரைக்கப்பட்ட ஆன்டிபயாடிக்கை சாப்பிட்டு முடிக்க வேண்டியது அவசியம்.
- டைஃபாய்டு, ஹெபடைடிஸ், அம்மை போன்றவற்றுக்கு முன்கூட்டியே தடுப்பூசிகள் எடுத்துக் கொண்டால் அந்த நோய்கள் வராது
- நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்... வாய்நாடி வாய்ப்பச் செயல்.
- மேலும் ஒரு தகவல்..... உங்களுக்காக...
*****
*******************
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக