மருத்துவத்தில் மச்சங்கள்...
- உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். 'அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா' என்று வெற்றி பெறும் நண்பனைப் பார்த்து சொல்கிறோம் தானே..
- மச்சம் என்பது, நமது தோலில் உள்ள மெலனோசையிட்ஸ் என்ற நிற அணுக்கள் அதிகமாக சேர்ந்தால் வரும் புள்ளிகள் ஆகும்.
- மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு, அல்லது பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாகவும் குறிப்பிடப்படுகிறது.
- மச்சங்கள், சிறுவயதிலேயே (பிறவியிலிருந்து பதின்பருவம் வரை) தோன்றுபவை.
- மருத்துவத்தில், மச்சம், நீவஸ் (nevus) என்றழைக்கப்படுகிறது.
- சாதாரணமாக, ஒரு மனிதனின் உடலில்,10-40 மச்சங்கள் வரை இருக்குமாம்.
- கர்ப்பகாலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்களுக்கு, மச்சம் மேலும் கருப்பாகவும், பெரிதாகவும் தோன்றலாம்.
- மச்சங்கள் பெருமளவில் கேடு விளைவிப்பதில்லை என்றாலும், மச்சம் வளர்வது போலத் தெரிந்தால் அதை உடனே கவனிக்க வேண்டும்.
- மேலும், கைகளில் 20க்கும் மேலாகவோ, மொத்தமாக 50க்கும் மேலாகவோ, மச்சங்கள் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியம்.
- Congenital Melanocytic Naevi (CMN) என்ற ஒருவகை பிறவிமச்சம் உலகளவில் 1% குழந்தைகளுக்கு காணப்படுகிறது.
- Congenital nevus போன்ற அரிதான மச்சங்கள் புற்றுநோயாக மாறும் தன்மையும் உடையது.
- மெலனோமா (Melanoma) என்பது மெலனோசைட்ஸ் என்ற நிறமி திசுக்களில் ஏற்படுகின்ற புற்றுநோயாகும்..
- தோல் புற்றுநோய்களால் ஏற்படும் இறப்பு வீதத்தில் பெரும்பான்மையான (75%) பகுதியை (Malignant melanoma) கரும்புற்றுநோய் வகிக்கின்றது.
- மச்சம் ஒன்றின் வடிவத்தில் அல்லது நிறத்தில் ஏற்படும் மாற்றம் ஆரம்ப அறிகுறியாக இருக்கின்றது.
- மெலனோமா மரபணுவில் ஏற்படும் சிதைவால் (Gene mutation) ஏற்படுகிறது... சூரியனின் புறஊதாக் கதிர்கள், (UV-B) ஒரு முக்கிய காரணியாகவும் அமைகின்றது.
- மச்சத்தில், ஏற்படும் சமச்சீரின்மை (asymmetry), ஒழுங்கற்ற விளிம்பு (irregular Borders), பல நிறம் (variegated color) புற்றுநோயைக் குறிக்கும்..
- உடனே கவனிக்கவும்..
- -பரவுகின்ற மச்சம்.
- -புண்ணாகின்ற மச்சம்.
- -அடிப்பாகம் தடிக்கும் மச்சம்.
- -கறுத்துப்போகும் மச்சம்.
- ஆண்களைவிட பெண்களே மெலனோமாவினால், அதிகளவு பாதிப்படைகின்றனர். பெண்களில் பொதுவாகப் பாதிப்படையும் பகுதி கால்கள் ஆகும்..
- இதற்கான சிகிச்சை அறுவை மருத்துவம் ஆகும். கரும்புற்றுநோய் பரவியுள்ளதை (staging) வைத்துக் குணமடைவதைத் (prognosis) தீர்மானிக்கலாம்.
- உலகளவில், மெலனோவினால், ஏறத்தாழ 48,000 இறப்புகள் நிகழ்கின்றன.
- மச்சங்களை,அதிர்ஷ்டம் என்று மட்டுமே கருதாமல், சில சமயங்களில் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்க..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக