சனி, 16 ஏப்ரல், 2016

கண்ணீர்

  • அழுகை குழந்தைகளின் மொழி! பசி, தாகம், அன்பு, அரவணைப்பு என எது தேவைப்பட்டாலும் குழந்தைகள் அழுகின்றன.
  • பிறந்த குழந்தைகள் அழும்போது கண்ணீர் வடிப்பதில்லை. கண்ணீர் நாளங்கள் முழுமையாக உருவாக பல வாரங்கள் ஆகின்றன.
  • வளர்ந்த பிறகும் மனிதர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு அழுகையே..
  • துக்கம், விரக்தி, மன பாரம், உடல் வலி கண்ணீருக்குக் காரணமாகலாம்.
  • மகிழ்ச்சி, வெற்றி, பெருமை, நிம்மதி ஆகிய உணர்வுகள் ஆனந்தக் கண்ணீர் வர காரணமாகின்றன.
  • சிறிய நேரத்தில் பல விஷயங்களை கண்ணீரால் மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது’ என்று Adult crying என்ற புத்தகம் சொல்கிறது.
  • ஒருவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அழுகையைக் கட்டுப்படுத்தினால் உடல்நலத்தைப் பாதிக்கும் என்கிறது ஆய்வு.

  • கண்ணீர் 3 வகைப்படும்... 
  1. Basal tears, 
  2. Reflex tears, 
  3. Emotional tears ஆகியன.
  • அடிப்படை கண்ணீர் (Basal Tears): கண்கள் பாதுகாப்பாக இருக்க, கண்ணீர் நாளங்கள் கண்ணீரை உற்பத்தி செய்துகொண்டிருப்பது அடிப்படை கண்ணீர்.
  • எதிர்வினைக் கண்ணீர் (Reflex Tears): கண்களில் தூசி மற்றும் எரிச்சல் ஏற்பட்டால் வருவது எதிர்வினைக் கண்ணீர்.
  • உணர்ச்சி சார்ந்த கண்ணீர் (Emotional Tears): மனிதர்களுடைய உணர்ச்சியின் வெளிக்காட்டாக வருவது இது.
  • கண்ணீரில் நீர், உப்புகள், லைசோசைம் எனும் பிறபொருளெதிரி, குளுகோஸ், யூரியா ஆகியன உள்ளது.
  • கண்களை ஈரத்தன்மையோடு வைத்திருக்கவும், கிருமிகள் சேராதிருக்கவும் கண்ணீர் சுரக்கிறது.
  • கண்ணீர் சுரப்பான், மேல் இமைத்தட்டில் அமைந்துள்ளது. சுரக்கும் கண்ணீர் இமைக்கும்போது, கண்கள் முழுதும் பரவுகிறது.
  • கண்களில் தேங்கும் கண்ணீர், puncta & naso lacrimal duct வழியே மூக்கை அடைகிறது. அழுகின்ற போது, மூக்கடைப்பின் காரணம் இதுவே.
  • அழாமல் இருக்கும் போதும், கண்களில் நிரந்தரமாக 1-2மைக்ரோ லிட்டர், கண்ணீர் சுரந்து கொண்டே இருக்கும்.
  • கண்கள் 7 மைக்ரோ லிட்டர், அளவு கண்ணீரை மட்டுமே அடக்கவல்லது. அதிகமாக சுரக்கும்போது, மூக்கின் வழியாகவும், கன்னத்திலும் வழியும்.
  • பெண்கள், வருடத்தில் 50 முறையேனும் உணர்ச்சிப்பூர்வமாக அழ, ஆண்களும் 10 முறையாவது அழுகின்றனர்.
  • உணர்ச்சி மிகுந்த அழுகையை செயலாக்குவது, Prolactin மற்றும் Leucine encephalin என்ற சுரப்பிகள். அழுத பின், மனம் லேசான உணர்வை தருவதும் இவையே.
  • கண்ணீரை கட்டுப்படுத்துவன....5 & 7 ஆம் மூளை நரம்புகள், மூளையின் பான்ஸ் மற்றும் அமீக்டலா.
  • பக்கவாதம், Alzheimer மற்றும் Multiple sclerosis ஆகிய நரம்பு பாதிப்புகளில் அழுகையும், சிரிப்பும் காரணமின்றி தோன்றும்.
  • காற்று, மருந்துகள், வயோதிகம் மற்றும் நீரிழிவு நோய், இவற்றில் கண்ணீர் சுரப்பது குறைவதால், கண்களின் ஈரத்தன்மை குறைந்து எரிச்சலை உண்டாக்குகிறது.
  • கண்களின் ஈரத்தன்மையை காத்திட, செயற்கை கண்ணீர் (hypromellose) உபயோகிக்க படுகிறது.

  • உங்களுக்கு தெரியுமா... வெங்காயம் உரிக்கையில், கண்ணீர் வரக் காரணி.. Syn-propanethial oxide என்ற ரசாயனப் பொருள் தான்.


    அழுகையில் ஆரம்பித்து 
    அழுகையில் முடியும் வாழ்க்கையில்
     கண்ணீரின் பங்கும் பெரிது தான்...


    *********************

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக