மருத்துவர்களின் சின்னம் எது..??
சிவப்பு நிற ப்ளஸ்?
ஒற்றைப் பாம்பு சுற்றிய கைத்தடி?
இரண்டு பாம்புகள் பிணைந்த தடி??
- சிவப்பு நிற ப்ளஸ் சின்னமானது, செஞ்சிலுவை இயக்கத்திற்கானது. மருத்துவத்தில், முதலுவிக்கு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
- டாக்டர் லூயிஸ் அப்பையா என்ற சுவிஸர்லாந்து நாட்டு அறுவைச்சிகிச்சை வல்லுநர் தோற்றுவித்த சின்னமே சிவப்பு ப்ளஸ் சின்னம்.
- சிவப்பு நிற பிறையின் சின்னமும், துருக்கி, எகிப்து, அரபு நாடுகளில் ரெட் கிராஸ் சின்னமாக பயன்படுத்தப்படுகின்றது.
- மருத்துவ உலகில், ஆரம்பகால சின்னமான எஸ்க்ளிபியஸின் கைத்தடி, (Asclepius) என்பது ஒற்றைப் பாம்பொன்று சுற்றிய கைத்தடி.
- எஸ்க்ளிபியஸ், கிரேக்கர்களின் மருத்துவ கடவுள். கி.மு.1200 ஆம் ஆண்டு, கிரேக்க நாட்டில் பணிபுரிந்தவர் என்கிறது ஹோமரின் இலியட்.
- நோயுற்றவர்களை, காப்பாற்றி, இறந்தவர்களையும் உயிர்த்தெழ வைக்கும் கடவுள் தான், எஸ்க்ளிபியிஸ்..
- மருத்துவர்களின், ஹிப்போக்ரிடிக் பிரமாணத்தில், எஸ்க்ளிபியஸ், மற்றும் அவனது மகள்களான ஹைஜியா, பனேசியா, மெடிட்ரினா எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
- நமது நாட்டிலும், பெரும்பாலான நாடுகளிலும் பயன்படுத்தப்படும் மருத்துவ சின்னம்.. கேடூசியஸ் (Caduceus) சின்னம்.
- கேடூசியஸ் சின்னம், ஒரு கைத்தடியில் இரண்டு பாம்புகள் சுற்றி பிணைந்து, அதன் மேல் சிறகுகள் கொண்டதாக அமைந்த ஒன்றாகும்.
- நோய் எதிர்ப்பு, உதவும் கரங்கள், அமைதி ஆகியவற்றை குறிப்பதாக அமைந்துள்ள சின்னம் இது.
- கேடூசியஸ், கிரேக்க கடவுளான ஹெர்மிஸ்ஸின் ஊழியர்.. எகிப்திய மற்றும் ரோமானிய இதிகாசங்களில், கடவுளின் தூதர்..
- இந்திய மருத்துவக் கழகம், அமெரிக்க ராணுவ மருத்துவப்பிரிவு, ஆகியவற்றின் சின்னமும் கேடூசியஸ் சின்னம்தான்.
- கிரேக்கர்கள், பாம்பை கடவுளாக வழிபட்டனர். பாம்பின் விஷத்தை, மருந்தாகவும், பாம்பு தோலுரிவதை மறுபிறப்பாகவும் பார்த்தனர்
- சிந்துநதி சமுதாயத்திலும், பாம்புகள் இந்து மதத்தோடுபின்னிப் பிணைந்த ஒன்று. ஆகவே தான் நமது மருத்துவ சின்னத்திலும் பாம்பு..!!
- மருந்துகள் தயாரிக்கும் துறையின் சின்னம் ஹைஜியாவின் கோப்பை (Bowl of Hygiea) ஒரு கோப்பையும் அதனைச் சுற்றி ஒரு பாம்பும்.
- மருத்துவர்கள், தங்களது மருந்து சீட்டில், மேலே உபயோகிக்கும் 'Rx' என்றால் என்ன என்று தெரியுமா??
- Rx என்பது, Recipe என்ற லத்தீன் மொழியிலிருந்து, வந்ததாகும். "இதை எடுத்துக் கொள்ளவும்" என்ற பொருள் கொண்டதாம்..
****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக