சனி, 16 ஏப்ரல், 2016

அறிவோம் நம் இருதயம்..


  • நமது இருதயம், நமது முழங்கையின் முட்டியின் அளவே கொண்டது. 
  • நாள்தோறும், சராசரியாக, ஒரு லட்சம் முறை நமது இருதயம் துடிக்கின்றது.
  • ஒவ்வொரு இருதய துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் ரத்தக்குழாய்கள் வழியாக அனுப்புகிறது.
  • உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம்.
  • 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது.
  • புகைப் பழக்கத்தை கைவிட்டால் கிடைக்கும் நன்மைகளைப் பாருங்கள்...!!
  • வணிக உலகில், "நேரம்தான் பணம்' என்பர். அதைப் போல மாரடைப்பை பொறுத்தவரையில், "நேரம்தான் உயிர்!' 
  • பெண்களை விட, ஆண்களே மாரடைப்பால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.. 
  • சர்க்கரை மற்றும் மாரடைப்பு நோய்களை, வாழ்க்கை முறைகளை மாற்றி அமைப்பதின் மூலம் தவிர்க்க முடியும் என்கிறது எபிஜெனிட்டிக்ஸ்.!
  • வாய்விட்டு சிரிச்சா.. நோய்விட்டுப் போகும்... அது இருதய நோய்தான் விட்டுப் போகும்.. என்கிறது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக