வெள்ளி, 8 ஏப்ரல், 2016

மருத்துவத் தையல்... தோற்றமும் வளர்ச்சியும்...

அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் அத்தியாவசிய 
தையல் வகைகளின் பரிணாம வளர்ச்சி..


  • உடலில் ஏற்படும் நோய்க்கான காரணம் அறிந்து மருந்துகள் (Medicines) மற்றும் அறுவை சிகிச்சை (Surgery) மூலம் குணப்படுத்தும் கலையே மருத்துவம் ஆகும்,
  • 14000 ஆண்டுகளுக்கும் மேலாக,  தொடர் போராட்டத்தின் முடிவில் தான் மனிதனால் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் இன்றைய வளர்ச்சியை எட்ட முடிந்துள்ளது.
  • 1100 BC, யில் எகிப்திய மம்மிக்களில் தையல் தான், வரலாற்றில், முதன்முதலாக போடப்பட்ட தையலாகும்.
  • மருத்துவத்தின் தந்தை, ஹிப்போக்கெரிட்ஸ் அறுவை சிகிச்சை மற்றும் தையல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
  • உடலின் பாதிப்படைந்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்துவதை முதன்முதலாக காட்டியது சுஷ்ருதா என்ற இந்திய ஆயுர்வேத மருத்துவர். (800BC). ஆகவே தான், சுஷ்ருதா அறுவை சிகிச்சையின் தந்தை எனப் போற்றப் படுகிறார்.

  • தையல்கள் உட்கரையும் தையல் (absorbable) மற்றும் நிரந்தரமான கரையாத தையல் (non absorbable) என இருவகைப்படும்.
  • சணல், பருத்தி, ஆளி போன்ற செடிகளின் நார்களையும், முடி, நரம்பு, பட்டுநூல், மற்றும் குடல் என மிருகங்களின் பகுதிகளும் தையலாக பயன்படுத்த பட்டன.
  • Catgut மற்றும் Vicryl போன்ற கரையும் தன்மை கொண்ட தையல் நூல், 60 நாட்களில் முழுமையாக கரைந்துவிடும். Catgut என்ற இந்த பெரிதும் பயன்படுத்தப்படும் தையல், ஆடுகளின் குடலிலிருந்து தோற்றுவிக்கப் படுகின்றது.

  • திசு மற்றும் தசையின் உறுதிக்கு பயன்படுத்தப்படும் Nylon, Prolene போன்ற தையல்வகைகள், 60 நாட்களுக்கும் மேலாக கரையா தன்மை கொண்டது.
  • 1931ஆம், ஆண்டில் Polyvinyl alcohol முதன்முதலில் செயற்கை அறுவை நூல் பயன்படுத்தப் பட்டது.
  • 1960ல், PGA கண்டுபிடிப்புக்கு பிறகு தையல்கள் மேலும் புதுமைகளை அடைந்தன. தற்போது பயன்படுத்தப்படும், Vicryl Dexon, PGA கொண்டு உருவாக்க பட்டதே.
  • 1993 ஆம் ஆண்டிற்கு பிறகு, Monocryl என்ற செயற்கை இழை பயன்பாடு, அறுவை சிகிச்சையின் மற்றுமொரு மைல்கல் எனலாம்.

  • Barbed suture என்ற முட்கள் கொண்ட தையல் வகை, தற்போது லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப் படுகிறது.

  • Surgical Stapler, விரைவாக மற்றும் துல்லியமான அறுவை சிகிச்சைக்கு பெரிதும் உதவுகிறது
  • Cyanoacrylate என்பது, தோலின் பேஸ்ட். இன்று பல நோயாளிகளை ஈர்த்த முறை. ஆயினும் மருத்துவர்கள் அதன் பக்கவிளைவுகளால் குறைவாக பயன்படுத்துகின்றனர்.
  • எந்த அறுவை சிகிச்சைக்கு, எந்த தையல் வகை என்பதும் அதன் சுற்றளவும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தீர்மானிப்பதாகும்.
  • எந்த தையல் வகையைப் பயன்படுத்தினாலும், தழும்பு என்பது ஒருவரின் உடல்வாகைப் பொறுத்தது தான்.


”கத்திகளும், 
தையல்களும் மட்டுமே 
தழும்புகளுக்கு சொந்தமில்லையாம்.."



ஹாஹாஹா... ஹைக்கூவே தான்..!!



*
***
*




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக