- தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்னு சொல்வாங்க. அதிலயும் ஒத்தை தலைவலி இருக்கே! அதை அனுபவிச்சு பாத்தா தான் வலி தெரியும்..!
- தலையின் ஒருபகுதியில் மட்டும் வலி, வாந்தி எடுக்கும் உணர்வு, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கும் வலி.. ஆகியனதான் ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்.
- சிலருக்கு தீவிரமான இருபக்க தலைவலி, கழுத்துவரை வலி, இரத்த நாளங்களை அழுத்தமாக துடிக்கச் செய்கின்ற வலியாகவும் ஒற்றை தலைவலி உணரப்படுகிறது..
- உலகளவில், 100 மில்லியன் மக்கள் ஒற்றை தலைவலியால் அவதிப்படுகின்றனர்.
- பெண்களுக்கு, 3 மடங்கு ஆண்களைவிட, ஒற்றை தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு. ஹார்மோன்கள் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
- ஒற்றை தலைவலி, 15-25 வயதுள்ளவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. 35-45 வயதில் சிறுபான்மையருக்கு தோன்றலாம்.
- வாரத்தில் 5 முறை வலி, 4 மணிநேரத்திலிருந்து 3 தினங்கள் வரை நீடிக்கும் வலி, ஒலி/ஒளி யினால் அதிகரிக்கும் வலி. இவை ஒற்றைதலைவலியின் அறிகுறிகள்..
- ஒற்றை தலைவலியால், அவதிப்படும், 15-30% பேருக்கு, aura எனப்படும், முன்னறிகுறி தோன்றும். உடல் மற்றும் மனச்சோர்வு, உற்சாகமின்மை ஆகியன தோன்றலாம்.
- ஒற்றைத் தலைவலி பரம்பரையாக வரக்கூடியது என்று சொல்லப்படுகிறது
- மன அழுத்தம், மது அருந்துவது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்றவற்றாலும் இந்தத் தலைவலி அதிகமாகிறது.
- மூளையில், செரடோனின் (Serotonin) என்ற சுரப்பியின் அளவு அதிகரிக்கும்போது ஒற்றைத் தலைவலி ஏற்படுகின்றது என்கிறது ஒரு ஆய்வு.
- ஒரு சிலருக்கு வாசனை திரவியங்களாலும் இந்தத் தலைவலி வருகிறது.
- Common migraine & Classic migraine என்று ஒற்றை தலைவலியில் இரண்டு வகைகள் உண்டு.
- Common migraine என்பது, aura என்ற முன்னறிகுறி இல்லாமல் வரும் வலியாகும்.
- Classic Migraine என்பது,.. தலைவலியின்போது நரம்பு வளி அறிகுறிகளோடு தோன்றும் வலியாகும். மனநிலை பாதிப்பு, பதட்டம் ஆகியவற்றால் தலைவலி ஏற்படும்.
- ஒற்றை தலைவலிக்கு சிகிச்சை முறைகள்...
- தக்க மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மருந்துகளை உட்கொள்ளலாம்.
- மருந்துகளில், பாரசிட்டமால், ட்ரிப்டான்ஸ், மற்றும் எர்காட் ஆகியன, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
- ஆயினும், வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது தான், மிக முக்கியமான சிகிச்சை முறையாகும்..
- முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும், தலைவலியின் தீவிரத்தையும், அதன் விகிதத்தையும், நன்கு கட்டுப்படுத்தலாம் .
- அரோமாதெரபி என்ற நறுமண மூலிகை சிகிச்சையும் பயனளிக்கலாம்..
- உணவுமுறை மாற்றம், முறையான தூக்கம், யோகா மற்றும் தியானம், கவலை சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைத்தல், ஆகியன வருமுன் காக்கும் வழிகளாகும்..
*****************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக